சாட் மசாலா பொடி
தேவையானவை : சீரகம், தனி ஆம்ச்சூர் (மாங்காய் தூள் ) தூள், உப்பு தலா அரை கப், கருப்பு உப்பு, மிளகு தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 15.
செய்முறை: மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்றாக காயவைத்து நைஸாக அரைத்தெடுத்தால் அதுதான் சாட் மசாலா பொடி.இந்தப் பொடியை பழங்களின்மீது தூவி சாப்பிடலாம். தயிர் பச்சடியோடு கலந்து பரிமாறலாம். பேல் பூரி, பானி பூரி ,வகைகளிலும் உபயோகிக்கலாம். எதனோடு சேர்த்தாலும் சுவை தூக்கலாக இருக்கும்.
0
Leave a Reply