தேங்காய் பொடி.
தேவையானவை :கொப்பரை துருவல்1 கப், உளுந்துஅரை கப், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு தலா கால் கப், பெருங்காயம் சிறு துண்டு, மிளகாய் வற்றல் 20, உப்பு தேவைக்கு, எண்ணெய்1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: தேங்காயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்தெடுங்கள். எண்ணெய் பெருங்காயத்தைப் பொரித்தெடுத்துவிட்டு மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். மீதமாகும் எண்ணெயில் பருப்பு வகைகளை ஒன்றாகப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து ஆறியதும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
இந்த தேங்காய்ப் பொடியுடன் நெய் கலந்து சாதம்,இட்லி, தோசையோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்தப் பொடியை பதினைந்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
0
Leave a Reply