25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பப்பாளி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பப்பாளி.

வைட்டமின்'ஏ' சத்து நிறைந்த பப்பாளிப் பழம், உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகிறது.மலச்சிக்கல், அமிலத்தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

 கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.இரத்த விருத்திக்கு உதவுவதுடன், இரத்த சோகைக்கு நிவாரணம் அளித்து, உடலுக்கு தெம்பூட்டுகிறது.பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியைச் சீராக்க உதவுகிறது.

 பப்பாளியில் உள்ள'பப்பாயின்' என்சைம் இதயத்திற்கு நல்லது, மேலும் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.பச்சைப் பப்பாளி சாறு குடலிலுள்ள புழுக்களை வெளியேற்ற உதவும். உடலின் நச்சுக்களை சுத்திகரித்து, இளமையின் பொலிவைக் கூட்டும் தன்மை பப்பாளிக்கு உண்டு. 

ஆண்டிபயாடிக் மருந்துகள் எடுத்தவர்கள், குடலில் அழிக்கப்பட்ட நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்யப் பப்பாளி சாப்பிடலாம்.நரம்புகள் மற்றும் ஞாபக சக்தி பலப்படவும் பப்பாளி சிறந்தது. பப்பாளி இலையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் உடலில் பல நன்மைகளை செய்ய கூடியது. 

எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்களை பலமாக வைக்க உதவும். ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலுக்கு வலிமை தரும். புற்று நோய் செல்களை அழித்து, இனி அவை உடலில் வராத அளவிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். பப்பாளி இலையின் சாற்றை கொண்டு கல்லீரல், கணையம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும்.

பப்பாளி இலை இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை சரியான அளவில் வைக்க பயன்படும். பப்பாளி இலை டெங்கு போன்ற உயிர் கொல்லி நோய்களையும் குணப்படுத்தும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News