எள் பொடி .
தேவையானவை : கருப்பு எள், உளுந்து தலா 1 கப், மிளகாய் வற்றல் 2 கப், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தலா கால் கப், உப்பு தேவைக்கு, பெருங்காயம் ஒரு துண்டு, எண்ணெய் 2 டீஸ்பூன்.
செய்முறை : உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் ருப்பு இவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்தெடுங்கள். எள்ளை (வெறும் வாணலியில்) மொறுமொறுப்பாக பொரித்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்தெடுத்து விட்டு, மீதமுள்ன எண்ணெயில் மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுங்கள். வறுபட்ட பொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்து வையுங்கள்.
இந்த எள் பொடியோடு நல்லெண்ணெய் கலந்து சாதம், இட்லி,தோசைக்கு தொட்டுக் கொண்டால சுவையாக இருக்கும். புளியோதரையில்இந்தப்பொடியைசிறிதளவுதூவிகிளறினால்சுவையாகஇருக்கும்.எள்பொடியைஒருமாதம்வரைவைத்துஉபயோகிக்கலாம்
0
Leave a Reply