இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் இன்னிங்சில் 887 ரன் குவித்தது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்('ஆண்டர்சன் சச்சின் டிராபி') பங்கேற்கிறது.முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 310/5 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று,2ம் நாள் ஆட்டம் நடந்தது. வோக்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஜடேஜா. டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதத்தை பதிவு செய்த ஜடேஜா, ஸ்டோக்ஸ் வீசிய 92வது ஓவரில் வரிசையாக2 பவுண்டரி அடித்தார். பஷிர் வீசிய 107வது ஓவரில் ஜடேஜா, கில் தலாஒரு சிக்சர் விளாச,13 ரன் கிடைத்தது. ஆறாவது விக்கெட்டுக்கு203 ரன் சேர்த்த போது ஜோஷ் டங் வீசிய 'பவுன்சரில்' ஜடேஜா (89) ஆட்டமிழந்தார்.
ஏழாவது விக்கெட்டுக்கு144 ரன் சேர்த்த போது ஜோ ரூட்'சுழலில்' வாஷிங்டன் சுந்தர்(42) போல்டானார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் (269 ரன்,387 பந்து , 3x6, 30x4), ஜோஷ் டங் 'வேகத்தில்வெளியேறினார்.ஆறாவது விக்கெட்டுக்கு சுப்மன், ஜடேஜா ஜோடி 203 ரன் சேர்த்தது. இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் வரிசையில்6வது அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி அதிக ரன் சேர்த்த 3வது இந்திய ஜோடியானது. கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார்., இந்திய அணி முதல் இன்னிங்சில் 887 ரன் குவித்தது.
இளம் இந்திய அணி வெற்றி
19 வயதுக் குட்பட்ட இந்திய அணி,இங்கிலாந்து சென்று,5 போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்க,முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1-1 என இருந்தது.மூன்றாவது போட்டி நார்தாம்ப்டனில் நடந்தது.மழை காரண மாக போட்டி தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்து அணிக்கு டாகின்ஸ் (62),இசாக் (41) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மேயஸ் (31), ஆல்பர்ட் (21) உதவி னர். கேப்டன் தாமஸ் ரியு (76) அவுட்டாகாமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி40 ஓவரில்268/6 ரன்எடுத்தது. இந்தியா சார்பில் கனிஷ்க்3 விக்கெட் சாய்த்தார்.இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி,கேப்டன் அபிக்யான் (12) ஜோடி துவக்கம் தந்தது.சிக்சர் மழை பொழிந்த வைபவ், 20 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 31 பந்தில்86 ரன்(9:6,6×4) எடுத்து அவுட்டானார். இந்திய அணி34.3 ஓவரில்274/6 ரன் எடுத்து,4 விக்கெட் டில் வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.யூத் ஒருநாள் அரங்கில் (19 வயது ) ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என வைபவ் (9) சாதனை படைத்தார்.
0
Leave a Reply