2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 10-வது இடத்தைப் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அமெரிக்கா 11-வது இடத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியா 31-வது இடத்தைப் பெற்றுள்ளது.
சீனாவில் தனிமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு துணையாக நபர்களை வாடகைக்கு எடுக்கும் புதிய தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது சுமார் 7.4 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த சந்தை, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உணவகங்களுக்கு செல்வது, சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற தருணங்களில் தனிமையை தவிர்க்க பலர் பணம் கொடுத்து நண்பர்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர். சமூக வாழ்க்கையின் புதிய போக்காக இந்த சேவை உருவெடுத்து வருகிறது.
மூளை-கணினி இணைப்பு (BCI) தொழில்நுட்பத்தில் சீனா முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைகளை இயக்க உதவும். உலகின் முதல் வணிகரீதியான 'NEO' மூளை சிப் தொழில்நுட்பத்திற்கு அந்நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது. மூளையின் திசுக்களை பாதிக்காமல் பொருத்தப்படும் இந்த சிப், மனித எண்ணங்களைப் புரிந்து அதற்கேற்ப சிக்னல்களை அனுப்பும் திறன் கொண்டது. இதன் மூலம் ரோபோடிக் கையுறைகள் செயல்பட்டு, நோயாளிகள் மீண்டும் தங்களது கை அசைவுகளை கட்டுப்படுத்த உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்கால தொழில்நுட்ப உலகை கருத்தில் கொண்டு, சீனா தனது கல்வி முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, 6 வயது முதல் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சிறு வயதிலிருந்தே நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் 8 மணிநேரம் AI பாடங்களை கற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, அமெரிக்காவின் முதலீட்டு முன்னுரிமைகளையே மாற்றி வருகிறது. பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளை விட தற்போது AI டேட்டா சென்டர்கள் அமைப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் மாத அரசின் புள்ளிவிவரங்களின்படி, டேட்டா சென்டர் கட்டுமானத்திற்கான ஆண்டு செலவு 50.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது பொதுப் போக்குவரத்து திட்டங்களுக்காக செலவிடப்படும் 49.3 பில்லியன் டாலரை விட அதிகமாகும். AI தொழில்நுட்பத்தின் எதிர்கால முக்கியத்துவத்தையும், டேட்டா சென்டர்களின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தையும் இந்த மாற்றம் வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முக்கியத் தீர்மானம் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.முக்கிய அம்சங்கள்:தீர்மானத்தின் நோக்கம்: சுமார் 90 நாட்களாக நீடிக்கும் இந்தப் போருக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) முறையான அனுமதி தேவை என்பதை வலியுறுத்தி இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.வாக்குகள் விவரம்: இந்தத் தீர்மானம் 215 வாக்குகள் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.கட்சிக்குள்ளேயேஎதிர்ப்பு: ட்ரம்பின்சொந்தக்கட்சியானகுடியரசுக்கட்சியைச்சேர்ந்தநான்குஉறுப்பினர்களும்இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.சொந்தக் கட்சி உறுப்பினர்களே எதிராக வாக்களித்திருப்பது, இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள பிளவை உறுதிப்படுத்துகிறது.
சர்வதேச கடல் போக்குவரத்தை சீரமைக்க, ஹார்முஸ் நீரிணையை கடக்கும் வணிகக் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கடலடி கண்ணிவெடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பள்ளி ஆசிரியரை சந்தித்து அவருக்கு சிறப்பான மரியாதை செலுத்தினார். கிரெம்ளின் மாளிகைக்கு ஆசிரியரை அழைத்து விருந்தளித்த அவர், தனது வாழ்வில் ஆசிரியரின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்த தனது மாணவனை கட்டியணைத்து முத்தமிடும் ஆசிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சர்வதேச அரங்கில் இஸ்ரேல் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்தியாவுடனான தங்களின் ஆழமான நட்புறவை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:"மற்ற நாடுகள் இஸ்ரேலைக் குறை கூறும்போது, இந்தியா எங்கள் மீது அளவில்லா அன்பு (Crazy Love) வைத்துள்ளது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவிலிருந்துதான் எனக்கு அதிக அளவிலான பின்தொடர்பவர்கள் (Followers) உள்ளனர்."இந்திய மக்களின் இந்தப் பேராதரவு தங்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செயற்கை நுண்ணறிவு (AI) கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முடித்தவர். 21 வயதில் மைக்ரோசாப்டில் பணியைத் தொடங்கி, பின்னர் பேஸ்புக், யாகூ, ஸ்னாப்சாட் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.சென்னையைச் சேர்ந்த அவர், இனி அமெரிக்கா எதிர்கொள்ளும் ,முக்கிய சவால்களுக்கு தீர்வு காணும் புதிய முயற்சிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.