உலக வர்த்தகத்தில் புதிய சகாப்தம்! 14 பெர்த்... 2.5 கோடி கண்டெய்னர்கள்!
சிங்கப்பூரின் Tuas Port சரக்குப் போக்குவரத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படத் தொடங்கிய PSA Tuas Port, இதுவரை 25 மில்லியன் TEU சரக்குகளைக் கையாண்டுள்ளது.
TEU என்பது 20 அடி நீளமுள்ள ஒரு கண்டெய்னரைக் குறிக்கும் அளவீடு. அதாவது, 2.5 கோடி 20 அடி கண்டெய்னர்களுக்கு சமமான சரக்குகள் இங்கு கையாளப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய முழுமையாக தானியங்கும் கண்டெய்னர் முனையமாக விளங்கும் Tuas Port, திறமையான மற்றும் தடையற்ற சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது 14 பெர்த்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 18 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2040-களில் ஆண்டுக்கு 65 மில்லியன் TEU சரக்குகளைக் கையாளும் வகையில் துறைமுகம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
0
Leave a Reply