விளையாட்டு போட்டிகள். 30TH JUNE
கிரிக்கெட்
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண் டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்ற இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது.பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது.
இங்கு இந்தியா பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.
கோல்ப்
இந்திய வீராங்கனைகளான வாணி கபூர் 6வது, திக்ஷா தாகர் 8வது இடம்,ஜெர்மன் மாஸ்டர்ஸ் தொடரில் பிடித்தனர். சிங்கப்பூரின் ஷானன் டான் சாம்பியன் பட்டம் வென்றார்.
துப்பாக்கி சுடுதல்
10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ,டேராடூனில் நடந்த தேசிய தகுதி போட்டிக்கான சுபாஷ் சிஹாக்கை (245.3 புள்ளி) வீழ்த்திய சவுரப் சவுத்ரி (245.7) முதலிடம் பிடித்தார்.
0
Leave a Reply