ஏஐ போட்டியில் சீனா அதிரடி... ரூ.25 லட்சம் கோடி முதலீட்டு திட்டம்!
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய முன்னிலை பெறும் நோக்கில், சீனா மிகப்பெரிய முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 2 டிரில்லியன் யுவான் (295 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் நவீன ஏஐ டேட்டா சென்டர் கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கணினி மற்றும் தரவு மையங்களை ஒருங்கிணைத்து, 2028-க்குள் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த ஏஐ வலையமைப்பை உருவாக்க பெய்ஜிங் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், இந்த கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஏஐ சிப்களில் சுமார் 80 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட உள்ளது. குறிப்பாக Huawei போன்ற சீன நிறுவனங்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால் விடுப்பதுடன், Nvidia மற்றும் AMD போன்ற நிறுவனங்களின் சந்தை நிலைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
0
Leave a Reply