வெள்ளை மாளிகை பொறுப்பில் இருந்து விலகும் இந்திய வம்சாவளி நிபுணர் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செயற்கை நுண்ணறிவு (AI) கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முடித்தவர். 21 வயதில் மைக்ரோசாப்டில் பணியைத் தொடங்கி, பின்னர் பேஸ்புக், யாகூ, ஸ்னாப்சாட் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அவர், இனி அமெரிக்கா எதிர்கொள்ளும் ,முக்கிய சவால்களுக்கு தீர்வு காணும் புதிய முயற்சிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply