தொழில்முனைவோருக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுரை: விற்பனைத் திறனை வளர்த்துக்கொள்ள...
பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் தொழில்முனைவில் ஈடுபட விரும்பினால் விற்பனைத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தியுள்ளார்.
X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நிறைய விற்பனை அழைப்புகளை மேற்கொள்ளுங்கள். நிராகரிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் விடாமுயற்சியுடன் இருங்கள்” எனக் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பேசுவதன் மூலம் தகவல் தொடர்புத் திறன் மேம்படும் என்றும், வணிகத்தை நடத்த தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி விற்பனைத் திறனும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“விற்பனை இல்லாமல் வியாபாரம் இல்லை. விற்பனையாளர்களை மதிக்கவும், வியாபாரத்தில் சிறந்து விளங்கவும் இது உதவும்” என ஸ்ரீதர் வேம்புகுறிப்பிட்டுள்ளார்
0
Leave a Reply