முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், கருத்தரங்கங்கள் ஆகியன மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தமிழ்நாடு முதலமைச்சரால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் தலைமையில் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள்/கல்லூரிகளில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்துவதென இக்குழு தீர்மானித்துள்ளது.அந்த அடிப்படையில், இதற்கென 4 துணைக் குழுக்களும்பேரவைத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர் திரு.இரா.ஆவுடையப்பன் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் திரு.மா.செல்வராஜ் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது, சட்டமன்றப் பேரவை உயர் அலுவலர்களுடன், விருதுநகர் மாவட்டத்தில் 2 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரியில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் கருத்தரங்கினை வருகிற 10-1-2024 (புதன்கிழமை) அன்று நடத்துவதென முடிவெடுத்துள்ளது.இக்கருத்தரங்கு 10-1-2024 (புதன்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12-00 மணியளவில், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பிற்பகல் 3-00 மணியளவில் விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியிலும் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி/கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply