குளிரான கடல்
உலகின் முக்கிய ஐந்து பெருங்கடல்களில் சிறியது ஆர்க்டிக், இதன் பரப்பளவு1.40 கோடி, சதுர கி.மீ. இது குளிரான கடல் எனவும் அழைக்கப்படுகிறது. சர்வதேச நீர்நிலையியல் நிறுவனம் இதை பெருங்கடல் என ஒப்புக்கொள்கிறது. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்களுக்கு நடுவே இக்கடல் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் இக்கடல் பகுதி பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது. கோடைகாலத்தில்50 சதவீதம் உருகுகிறது. இதன் சராசரி ஆழம்3406 அடி, இதை ஆர்க்டிக் மத்திய தரைக்கடல் என அழைக்கின்றனர். இதனடியில் நிறைய தனிமங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply