பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப் பால்
தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. உலக தாய்ப்பால் வாரம் . இந்த ஆண்டு தாய்ப்பால் வாரத்திற்கான கருப்பொருள் "தாய்ப்பால் பாதுகாத்தல் அனைவருக்குமான பொறுப்பு" என்பதாகும்.பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப் பால் தாய்ப்பாலை நேரடியாக பெறும் போது அன்பும், அரவணைப்பும் கிடைப்பதால், எதிர்காலத்தில் அதிக கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் குழந்தைக்கு ஏற்படாது. தாயின் கர்ப்பப்பை உடனே சுருங்குவதால் உதிரப்போக்கு குறைந்து விடும். பிரசவ காலத்தில் தாய்க்கு அதிகரித்த கொழுப்பு கரைந்து விடும். மார்பக புற்றுநோய் ஏற்படாது. பிரசவம் முடிந்தவுடன் சுரக்கும் சீம்பாலை குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக குழந்தைக்குக் கொடுப்பது அவசியம். இந்த சீம்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துகளும் நிரம்பியுள்ளன.
குழந்தை அழும் போதெல்லாம் தாய்ப்பால் அளிக்க வேண்டும். முதல் 6 மாதங்களுக்கு பகலில் குறைந்தபட்சம் 6 முதல் 7 தடவையும். இரவில் 3 முதல் 4 தடவையும் தாய்ப்பால் அளிப்பது அவசியம். இவ்வாறு தொடர்ந்து தாய்ப்பால் அளித்து வந்தால் குழந்தையின் எடை கூடும், அடிக்கடி சளி பிடிக்காது, ஆஸ்துமா பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு ஏற்படாது. உடல் பருமன், இருதய நோய்கள் தவிர்க்கப்படும். தாய்ப்பால் கொடுக்கும் போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் (Oxytocin) தாயின் உடலில் அதிக அளவு சுரக்கும். இதனால் பிரசவத்தின் போது ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் யாவும் சீராகும். உடல் எடையும் குறையும். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டாம். தாய்மார்கள் சாப்பிடும் உணவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பிரெஸ்ட் பம்ப் மூலம் தாய்ப்பாலைச் சேகரித்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஒரு முறை சேகரித்த பாலை அறையின் வெப்பநிலையில் எட்டு மணி நேரமும், ஃபிரிட்ஜில் 24 மணி நேரமும் வைத்திருந்து கொடுக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்திருந்த பாலை, வெளியே எடுத்து, அரை மணி நேரம் கழித்துதான் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் தானம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கின்றது. மிக விரைவில் இது அனைவருக்கும் தெரியவர வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உயிரை காப்பதற்கும் அவர்களுடைய ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு இது மிகவும் உதவும்.
0
Leave a Reply