ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்ட எஸ்.கே.21’ முக்கிய அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்’எஸ் கே21’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீர் உள்பட பல பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும்17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்ப அதிர்ச்சியாக இன்றே இது குறித்து அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இது குறித்து வெளியான வீடியோவில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று மாலை ஒரு செம்ம விருந்து காத்திருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீஸ் ஆக உள்ளது .
0
Leave a Reply