சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சுற்றிலும் உள்ள 5746.18 ஏக்கர்(விவசாய நிலம்) நிலப்பரப்பில் சுமார்20 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை வரும்2028ம் ஆண்டில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ளனர். இந்த விமான நிலையத்துக்கான பணிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து களமிறங்கியுள்ளது.பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி, மக்களின் குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.அக்கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் விளைநிலங்களும் பறிபோக காத்திருகின்றன. எனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு தங்களின் இருப்பிடமும், விளைநிலங்களும் பறிபோக அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி தொடர்ந்து 600 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கிராம மக்கள் அனைவரும் விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விமான நிலையம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தமிழக தொழில் துறை ஈடுபட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் ஏப்ரல் நான்காம் தேதிக்குள் நில எடுப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை என்றால், அவை ஏற்றுக் கொள்ள மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் இன்று600வது நாளை ஒட்டி ஏகனாபுரத்திலிருந்து200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவர்கள் தங்களின் வயல்நிலங்கள் வழியாகவே ஊர்வலமாக நடந்து வந்து அறுவடைக்கு தயாராக உள்ள விவசாய நிலங்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பெண்கள் கீழே விழுந்து, வாயில் அடித்தபடி அழுது கதறும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், கிராம மக்கள் வயல்வெளியில் நின்று கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டுகள்தானிய பருக்கைகளைத் தாக்கி, தானியத்தில் துளைகளை உருவாக்கிவிடும். மேலும் தானியங்களின் நீர்ச்சத்தை உறிஞ்சி, உலர்த்தி விடும். இவ்வாறு பூச்சிப்பிடித்த அரிசியை சுத்தம் செய்வது கொஞ்சம் கடினம். வண்டு அல்லது புழுக்களின் பாதிப்பு அதிகம் உள்ள அரிசியை சுத்தம் செய்து சாப்பிட்டால், செரிமான நோய்கள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது, அரிசி மற்றும் கோதுமையில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே அரிசி மற்றும் கோதுமையை சேமித்து வைக்கும் போது மட்டும் அதிகபடியான பூச்சிகள் தாக்குகிறது என பத்மஸ்ரீ படம்பெற்ற மருத்துவர் காதர் வாலி பிபிசியிடம் தெரிவித்தார்."பட்டைத் தீட்டப் படாத நெல்லில் உமியில் உள்ள நார்ச்சத்து, கவசமாகச் செயல்படுவதால்,30 ஆண்டுகளுக்குப் பிறகும் பூச்சிகள் வராது. ஆனால் அரிசி மற்றும் கோதுமைக்கு, இந்த நார்ச்சத்து உறை மிகவும் மெல்லியதாக இருப்பதால், அவை பூச்சிகளால் எளிதில் தாக்கப்படுகின்றன," என்று டாக்டர் காதர் வாலி விளக்கினார். அரிசியில்பூச்சிவிழும்பிரச்னையைத்தடுக்கவல்லுநர்கள்சில நடைமுறைகளை பரிந்துரைக்கின்றனர். "முதலில், அரிசி சேமிக்கப்படும் கலனிலும் அதனை சுற்றியும் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்," மேலும் சில நிபுணர்கள் கூறுகையில், அரிசி சேமிப்பு கலன்களில் வேப்பிலை, பிரியாணி இலைகள், கிராம்பு, பெருங்காயம், கற்பூரம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கல் உப்பு உதவியுடன் அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்."வேப்பிலை, கிராம்பு, கற்பூரவள்ளி ஆகியவற்றை உலர்த்தி ஒரு மெல்லியத் துணியில் கட்டி அரிசி சேமிக்கும் கலனில் போட்டாலும் அதன் வாசனை பூச்சிகள் வராமல் தடுக்கும்," வேம்பு மற்றும் கிராம்பு பூச்சிகளைத் தடுக்கும் அதீத ஆற்றல் கொண்டவை. அவற்றின் கடுமையான வாசனைக்கு பூச்சி புழுக்கள் அண்டாது. சிலர் போரிக் பவுடரை துணியில் கட்டி அரிசி சேமிப்பு கலன்களில் போட்டு வைப்பார்கள். மேலும், அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்க சில ரசாயனங்களும் சந்தையில் கிடைக்கின்றன, "பிரவுன் அரிசி மற்றும் கருப்பு அரிசி ஆகியவை தீட்டப்படாத (பாலிஷ் செய்யப்படாத) அரிசி ரகங்கள் ஆகும். எனவே இவை பட்டை தீட்டப்பட்ட அரிசியை விட பத்து மடங்கு சிறந்தது. எந்த அரிசி வகைகளாக இருந்தாலும், பூச்சிப் பிடிப்பதை தடுக்கும் ஆற்றல் அவற்றிற்கு இல்லை,"
தமிழ்நாட்டில் புதிதாக 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புர மக்கள்தொகையின் சதவீதம் 48,45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புரங்களில் வசிக்கும்மக்கள்தொகைசதவீதம்53சதவீதத்திற்குமேல்அதிகரித்துள்ளதாகமதிப்பிடப்பட்டுள்ளது.இதனடிப்படையில், அரசு. பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புரத் தன்மை கொண்ட விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கி வருகிறது. காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மாநகராட்சிகள் எப்படி விரிவாக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதுகடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல்,கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்த நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்..இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி; நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது. அதேபோல, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி, என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்துருவாக்கப்படும். இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும், வாய்ப்பாகவும் அமையும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கோத்ரெஜ் நிறுவனம் தொடங்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டு பிரோ, அலமாரிகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தப் பெயர் உலகளவிலும் பரவியுள்ளது 1921 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு இங்கிலாந்து ராணி வந்திருந்தபோது கோத்ரெஜ் தயாரிப்பைப் பயன்படுத்தினார்.1897 மே 7 ஆம் தேதியன்று கோத்ரெஜ் நிறுவனத்தை ஆர்தேஷிர் கோத்ரெஜ் நிறுவனத்தைத் தொடங்கினார். 1868 ஆம் ஆண்டு பம்பாயில் கோத்ரெஜ் பிறந்தார். அவர் ஆறு குழந்தைகளில் மூத்தவர். அர்தேஷிர் மூன்று வயதாக இருந்தபோது, அவரது தந்தை புர்ஜோர்ஜி கூத்தராஜி, குடும்பப் பெயரை கோத்ரெஜ் என்று மாற்றினார், அதனால் தான் 'கோத்ரேஜ்' என்ற பெயர் வந்தது. சட்டப் பள்ளியில் புதியவரான அர்தேஷிர் 1894 இல் பம்பாய் சொலிசிட்டர்ஸ் நிறுவனத்தால் சான்சிபார் சென்று தங்கள் வாடிக்கையாளருக்காக ஒரு வழக்கை வாதாட நேர்ந்தது. இந்த வழக்கில் தான் பொய் சொல்ல வேண்டும் அல்லது உண்மையை திரித்து வாதாட வேண்டும் என்பதை அர்தேஷிர் உணர்ந்தார்.அவர் இதைச் செய்ய மறுத்துவிட்டார். வழக்கறிஞர்கள் அல்லது வாடிக்கையாளரின் எந்த வற்புறுத்தலும் தனது கொள்கை நிலைப்பாட்டை மாற்ற அவரை நம்ப வைக்க முடியாது என்று இருந்தார். இதனால் வழக்கறிஞர் வேலையை விட்டார். ஆர்தேஷிர் கோத்ரெஜ் இந்தியாவுக்கு வந்த பிறகு ஒரு கெமிக்கல் கடையில் உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார். அதன் விளைவாக அறுவை சிகிச்சை உபகரணங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். இது வேலை செய்யாவிட்டாலும் வெற்றிபெற அவர் உந்துதல் பெற்றார். பின்னர், மெர்வாஞ்சி காமா என்ற பார்சி தொழிலதிபர் அவருக்கு ஒரு புதிய பூட்டு தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்க கடன் கொடுத்தார். ஆர்தேஷிர் கோத்ரேஜ் இந்தியாவுக்குச் சென்ற பிறகு 1894 இல் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு சிறிய ஷெட்டில் இந்த மனிதர் தயாரித்த பூட்டுகள் பிரிட்டிஷ் காலனி காலத்தின்போது இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூட்டுகளை விட சிறப்பாக இருந்தது என்பதாலேயே மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் புகழ் காட்டுத்தீ போல பரவியது.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பூட்டுகளில் உள்ள மென்மையான ஸ்பிரிங்குகள் எல்லாம் பழுதாகி இவர் தயாரித்த பூட்டுகள் வலுவாக இருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூட்டுகளை விட கோத்ரெஜ் தயாரித்த பூட்டுகள் விலை மலிவாக இருந்தன. இவரது விலை குறைந்த பூட்டுகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததால் கோத்ரெஜ் நிறுவனம் விரைவிலேயே மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றது. ஆர்தேஷிர் கோத்ரெஜ், பச்சுபாயை 1890ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.அர்தேஷிர் கோத்ரேஜ் மற்றும் பிரோஜ்ஷா புர்ஜோர்ஜி கோத்ரேஜ் ஆகியோர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1897 ஆம் ஆண்டு வணிகத்தை நிறுவினர். இன்று, சுமார் 1.1 பில்லியன் நபர்கள் கோத்ரெஜின் செயல்பாடுகளில் பல்வேறு தொழில்களில் பணிபுரிகின்றனர். கோத்ரேஜ் நிறுவனம் தற்போது பல துறையில் இயங்குவது மட்டும் அல்லாமல் விண்வெளி பயணத்திற்கு தேவையான சில முக்கிய பொருட்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. வெறும் பூட்டில் துவங்கிய கோத்ரேஜ் சாம்ராஜ்ஜியம் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் வலிமையுடன் நிற்கிறது.
தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி...மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்துபயன்படுத்தும் கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு.புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது..இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா....இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள் தான்.
சமீபத்தில் நடந்த சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஃபின்டெக் பிளாட்ஃபார்ம்Fibe, பெண் கடன் வாங்குபவர்களை குறித்து சில ஆச்சரியமூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.EMIக்களை சரியான நேரத்தில் செலுத்துவதில் ஆண் கடன் வாங்குபவர்களை காட்டிலும் பெண் கடன் வாங்குபவர்கள்10% அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.இதன் காரணமாக கடன் விஷயத்தில் பெண்கள் ஆண்களை காட்டிலும் பொறுப்புடன் நடந்து கொள்வது தெரிய வந்திருக்கிறது.புதிதாக கடன் வாங்கும் பெண்களின்(NewtoCreditNTC) எண்ணிக்கை கடந்த5 வருடங்களில் இரட்டிப்பாக இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டில் 18 சதவீதம் இருந்த இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 40சதவீதமாக அதிகரித்திருப்பது இந்த கருத்துக்கணிப்பு மூலமாக தெரிய வந்துள்ளது.மறுபுறம் புதிதாக கடன் வாங்கும் ஆண்களின் எண்ணிக்கை 22% குறைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டில்82 சதவீதம் இருந்த இந்த எண்ணிக்கை2023 ஆம் ஆண்டில்60 சதவீதமாக குறைந்துள்ளது. அனைத்து பெண் கடன் வாங்குபவர்களை கருத்தில் கொள்ளும் பொழுது,NTC கஸ்டமர்கள்32 சதவீதம் என்ற மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர்.கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடிய மற்றும் வழக்கமான முறையில் லோன்களை வாங்கக்கூடிய பெண்கள்13% ஆகவும், அதுவே கிரெடிட் கார்டு இல்லாமல் ஆனால் லோன் பெறக்கூடிய பெண்கள்18 சதவீத எண்ணிக்கையையும் வகிக்கின்றனர். பெண் கடன் வாங்குபவர்களின் இந்தவளர்ச்சி போக்கு தங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு விதமான முயற்சிகளில் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. கடன் விஷயத்தில் பெண்களின் பொறுப்புணர்வை பறைசாற்றும் அதே வேளையில் முதல் முறையாக கடன் வாங்கக்கூடியNTC கஸ்டமர்களின் வயது கடந்த5 வருடங்களில் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. முதல்முறையாக கடன் வாங்கக்கூடிய கஸ்டமர்களின் வயது 2019 ஆம் ஆண்டில் 26 ஆக இருந்தது. இதுவே தற்போது 2023 ஆம் ஆண்டில் இது31 வயதாக அதிகரித்துள்ளது.கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனும், புதிய பொருளாதார சுதந்திரம் மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான துணிச்சலைக் காட்டுகிறது."
நண்டுக்குத் தலை இல்லை.வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லைஆமைக்கு பற்கள் இல்லை.வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை.மண்ணுளிப் பாம்புக்கு கண் இல்லை பாம்புக்களுக்கும் காதுகள் இல்லை .
ஆடைகளை வாஷிங்மெஷினில் போடுவதற்கு முன்பாக உள்பக்கத்தை வெளியே எடுக்கவும். குறிப்பாக உங்கள் ஆடையில் பிரிண்டிங் டிசைன் அல்லது ஏதேனும் படங்கள் இருந்தால் அவை சேதமடைவதை தவிர்க்க இதுபோல உள்பக்கமாக எடுத்து சலவை செய்வது பலன் தரும்.அழுக்கு நிறைந்த ஆடைகள் மற்றும் கறை படிந்த ஆடைகள் போன்றவற்றை சலவை செய்யும் முன்பாக தனி ஒரு பக்கெட்டில் நீண்ட நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். துணிகளை உள்ளே ஊறவைக்கும் தொழில்நுட்பம் உங்கள் வாஷிங் மெஷின் நிலை இருந்தால் தனியாக ஊற வைக்க வேண்டியதில்லை.சரியான சலவைத் தூளை பயன்படுத்த வேண்டும். மிகுதியாக பயன்படுத்தினால், உங்கள் ஆடைகளின் தரம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. எத்தனை துணிகளை எடுத்து உள்ளீர்கள் என்பதை கணக்கு செய்து அதற்கு எவ்வளவு செலவை தூள் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு சேர்க்கவும்.ஓரிருமுறை தொடர்ந்து வாஷிங் மெஷின் பயன்படுத்திய பிறகு அதில் அழுக்குகள் சேர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டு. உங்கள் வாஷிங் மெஷின் உள்ள ட்ரம் மற்றும் டப்பை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.ஒரே சமயத்தில் அளவுக்கு அதிகமான துணிகளை அள்ளி வாஷிங் மிஷினில் திணித்து விடக்கூடாது. இயந்திரத்தின் திறன் என்ன மற்றும் அதை பயன்படுத்தும் விதிமுறைகள் என்ன என்பதை பொறுத்து அதை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.நீங்கள் எந்த வகை ஆடைகளை சலவை செய்ய இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து, வாஷிங் மெஷினில் செட்டிங்ஸ் மாற்றம் செய்ய வேண்டும். சாதாரண காட்டன் ஆடைகளுக்கும், மிகுந்த கனமுடைய மெத்தை விரிப்புகளுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் கரைகளை அகற்றுவதற்கு நாம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், அதில் உள்ள பாக்டீரியா மற்றும் இதர நோய்க்கிருமிகளை அகற்றுவதற்கும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை சலவை செய்யும் ஆடைகள், புதிது போல தோன்ற மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்..
பொதுமக்களின் நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்தகைய முக்கியமான திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமண தேவைகளுக்கு பயன்படும் வகையில் இந்த சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த திட்டத்தை தொடங்கலாம். இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலாம் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில்21 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய திட்டமாக உள்ளது.10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தை தொடங்கலாம். திட்டம் தொடங்கப்படும் ஆண்டு முதல் அடுத்த21 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு18 வயது நிறைவடைந்ததும் திருமணம் அல்லது கல்வி செலவிற்காக பணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.மாதம் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.250 மூதல் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ.1,50,000லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்யலாம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட வேண்டும். வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80c-ன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில், ஏப்ரல் முதல் மார்ச் வரை ஒரு நிதியாண்டாக கருதப்படுகிறது. இந்த கணக்கை தொடங்குபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ரூ.250 டெபாசிட் செய்ய வேண்டும். இல்லையெனில் கணக்கு செயலிழந்துவிடும். அதன் படி இந்த ஆண்டுக்கான டெபாசிட் செய்ய இந்த மாதம்.மார்ச்31ஆம் தேதிக்குள் ரூ.250 செலுத்தவில்லை என்றால் கணக்கு செயலிழந்து விடும். எனவே இந்த ஆண்டு சேமிப்பு கணக்கில் ஒரு ரூபாய் கூட செலுத்தாதவர்கள் இந்த மாத இறுத்திக்குள் தொகையை செலுத்தி கணக்கை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கணக்கு செயலிழந்துவிடும்.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்களை தொடர்ந்து வாலிபர், முதியவர் என பலரும் பரிவர்த்தனையை தொடங்க. ஆரம்பித்துவிட்டனர். சிறிய கடை முதல் பெரிய பெரிய மால்வரை தற்போது இந்த பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், ஜியோவும் அதில் கால்பதிக்கிறது.ரிசர்வ் வங்கி பேடிஎம்மிற்கு தடை சொல்லிவிட்டதால், தற்போது போன் பே, கூகுள் பே தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் மாபெரும் திட்டத்துடன் ஜியோ நிறுவனமும் கால்பதிக்கிறது.பேடிஎம் சவுண்ட்பாக்ஸை போல ஜியோ நிறுவனமும் ஜியோ சவுண்ட்பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சில்லறை கடைகளை இலக்காக கொண்டு ஜியோ சவுண்ட்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது..தற்போதுள்ள ஜியோ பே செயலியுடன் சவுண்ட்பாக்ஸ் தொழில்நுட்பத்தை இணைக்கும் பணிகளை ஜியோ மேற்கொண்டிருக்கிறது. இதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம் பேடிம், போன்பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கும் வகையிலான திட்டத்துடன் களமிறங்குகின்றனர்.