தனிமனிதனின் வளர்ச்சிக்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல
கர்நாடக மாநிலம் பெங்களுரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 64 வயதாகும். கே.எஸ். ராஜன்னா தனது 11 வயதில் போலியோ என்னும் கொடுமையான நோயினால் கை கால்களை இழந்த இவர் மனம் தளராமல் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஞினியரிங் படித்து முடித்துள்ளார். இன்று அதே துறையில் 350க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் ஒரு பிசினஸ்மேன். அவர் நடத்தி நிறுவனத்தில் பாதி பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கர்நாடக மாநிலத்தின் மாற்றுத்திறனாளிகள் ஆணையராகவும், அவர் திகழ்ந்து வருகிறார். 2002 ஆம் ஆண்டு நடந்த பாரா ஒலிமிபிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு, இவர் வட்டு எரிதலில் தங்கப்பதக்கமும், நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கமும், வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்தவர்.பத்மஸ்ரீ அவார்டு வாங்கிய ஒரு மாமனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தனிமனிதனின் வளர்ச்சிக்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிருபித்துக் காட்டிய மாற்றுத்திறனாளிகளின் ரோல் மாடலாக திகழும் கே.எஸ். ராஜன்னா அவர்களுக்கு இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
0
Leave a Reply