வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான OCI அட்டை இனி e-OCI என்ற டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காகித ஆவணங்களின் தேவையின்றி, விரைவான சரிபார்ப்பு மற்றும் எளிதான அணுகல் கிடைக்கும். புதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ OCI சேவை இணையதளத்தில் பதிவு செய்து, பாஸ்போர்ட் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே OCI அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து e-OCI நகலை நேரடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தினமும் மகிழ்ச்சியாக வாழ இரண்டு விஷயங்கள் முக்கியம் என தெரிவித்துள்ளார்.நம்முடன் இருப்பவர்கள் இணக்கமானவர்களாக இருக்க வேண்டும்; அதேபோல் நாமும் மற்றவர்களுக்கு இணக்கமாக நடக்க வேண்டும்.மனதை எதிர்மறை மற்றும் தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுவித்து, கற்றல் அல்லது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம் என அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
HCL குழுமத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். அவர் கூறிய முக்கியமான பொன்மொழி:"உங்கள் லட்சியங்களைப் பொறுத்தவரை நீங்கள் நிதானமாக இருந்தால், நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் நம்பிக்கை பிறக்கும்."இந்தக் கருத்து, இலக்கை அடைய அவசரப்படாமல் பொறுமையுடனும் தெளிவுடனும் செயல்பட வேண்டும் என்பதைக் கூறுகிறது. வெற்றி என்பது ஒரே இரவில் கிடைப்பதல்ல; தொடர்ச்சியான முயற்சி, மன அமைதி மற்றும் தன்னம்பிக்கையால் கிடைக்கும் என்பதை இந்த பொன்மொழி உணர்த்துகிறது.மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நம் பயணத்தில் கவனம் செலுத்தி, சவால்களை நிதானமாக எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதே ஷிவ் நாடாரின் ஊக்கமூட்டும் செய்தியாகும்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்திற்கு இனி 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது.முதலில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அறிமுகமான இந்தத் திட்டம், பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது சுமார் 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.மேலும், வரும் செப்டம்பர் 17 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். திட்டத்திற்காக ஆண்டுதோறும் ₹343 கோடி செலவிடப்பட உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் ₹217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரியில் தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஒருங்கிணைந்த ஏவுகணை உற்பத்தி மையத்தை அமைக்க அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பணிகளை தொடங்கியுள்ளது. ரூ.2,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கு இது முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, ஜப்பானின் அதிவேக ஷின்கான்சென் ரயிலில் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஜப்பானின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்திய கிராமப்புற தொழில்களுடன் இணைக்கும் நோக்கில் அவர் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின்'தகுமி' கைவினை கலாச்சாரத்தை இந்திய கிராமப்புற திறமைகளுடன் இணைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அவரது இலக்கு.
கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்ட கிராமத்தில் இணையம், ஸ்மார்ட்போன் வசதியின்றி வளர்ந்த அவாய்ஸ் அகமது, தனது ஆர்வத்தால் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான பிக்ஸல் (Pixxel)-ஐ தொடங்கினார்.பிட்ஸ் பிலானியில் படித்த அவர், 2019-ல் நண்பருடன் இணைந்து நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று பிக்ஸலின் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக்கோள்கள் பயிர் பாதிப்பு, மீத்தேன் கசிவு, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாகக் கண்டறிகின்றன.95 மில்லியன் டாலருக்கும் அதிக முதலீட்டை ஈர்த்துள்ள பிக்ஸல், 2024-ல் நாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இணைய வசதி இல்லாத கிராமத்தில் தொடங்கிய அவரது ஆர்வம், உலகளவில் கவனம் பெற்ற வெற்றிக் கதையாக மாறியுள்ளது.
பழைய விதிமுறைகள்-முகவரி அச்சிடப்படும்.பாஸ்போர்ட்டில் வீட்டு முகவரி அச்சிடப்பட்டு வருகிறது.பெற்றோர் பெயர்கள் அச்சிடப்படும்.பாஸ்போர்ட்டில் பெற்றோர் பெயர்கள் அச்சிடப்பட்டு வருகிறது.பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை.அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை.குறைந்த கட்டணம்.முந்தைய கட்டண விபரம் நடைமுறையில் இருந்தது.குறைந்த PSK & POPSK மையங்கள் .பாஸ்போர்ட் சேவைகளுக்கு வரையறுக்கப்பட்ட மையங்களே இருந்தன. பாஸ்போர்ட் + குடியுரிமை ஆதாரம் .குடியுரிமை ஆதார வெளிப்படையாக குறிப்பிப்படவில்லை.புதிய விதிமுறைகள் (2026)முகவரி நீக்கப்பட்டது.பாஸ்போர்ட்டில் வீட்டு முகவரி இனி அச்சிடப்படாது .பெற்றோர் பெயர்கள் நீக்கப்பட்டது.பாஸ்போர்ட்டில் பெற்றோர் பெயர்கள் இனி அச்சிடப்படாது.பிறப்புச் சான்றிதழ் கட்டாயம். 01 அக்டோபர் 2023 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்.கட்டணம் உயர்வு-01 ஜூலை 2026 முதல் புதிய கட்டண விபரம் அமலுக்கு வருகிறது.அதிக PSK & POPSK மையங்கள்அணுகலை மேம்படுத்துவதற்காக PSK & POPSK மையங்களை விரிவாக்குகிறது.பாஸ்போர்ட் + குடியரிமை ஆதாரம்பாஸ்போர்ட் ஒரு பயண ஆவணம், குடியுரிமைக்கு ஆதாரம் அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.ஏன் இந்த மாற்றங்கள்?பாதுகாப்பை மேம்படுத்கவும், தனியுரிமையை பாதுகாக்கவும், செயல்முறையை எளிதாக்கவும், உலக தரநிலைகளுடன் ஒத்திசைக்கவும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் சொந்த விண்வெளி நிலையத்தையும் உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் விண்வெளி சாதனைகள் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சில நாடுகளில் அரிதாக 'மீன் மழை' நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. பலத்த சூறாவளி அல்லது நீர்ச்சுழல் காரணமாக ஏரி, குளங்களில் இருக்கும் சிறிய மீன்கள் காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு, பின்னர் மழையுடன் தரையில் விழுகின்றன என்று வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவின் சில பகுதிகளிலும் அரிதாக ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.