25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


தெரிந்து கொள்ளுங்கள்

Feb 19, 2024

தூத்துக்குடி 3 வருடத்தில் அசுர வளர்ச்சி , வேலைவாய்ப்பு

தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ரிப்போர்ட் ஒன்றும் கூட அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 5 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன.டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. கவனம்: இந்த மாநாட்டில் அதிகம் கவனிக்கப்பட்டது தூத்துக்குடி, சென்னை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இங்குதான் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.ACME - 52,000 கோடி பெட்ரோனாஸ் - 34,000 கோடி செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள் லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள் என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி சாதனை: சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் மாநிலத்திலேயே அதிக சிப்காட் தொழில் பூங்காக்கள் இருக்கும். சென்னையில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கருக்கு சிப்காட் உள்ளது . 1. தூத்துக்குடி Ph-1 & 2 : 2509 ஏக்கர் (தற்போது உள்ளது) 2. வைப்பார்: 1,020 3. சிலாநாதம்: 394 4. அல்லிகுளம்: 2,234 5. வேம்பூர்: 2,814 6. இ.வேலாயுதபுரம் : 355 7. மரச்சாமான்கள் பூங்கா : 1,100 ஏக்கர் 🇻🇳சிலாநத்தம் சிப்காட்டில் வின்ஃபாஸ்ட் வர வாய்ப்புள்ளது. வரவிருக்கும் அற்புதமான காலங்கள்சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம். டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் தமிழ்நாட்டில் சென்னை, ஓசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி ஆட்டோமொபைல் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது என்று தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் சில முதலீடுகள் தென் தமிழ்நாட்டிற்கு செல்லும். ஆயிரக்கணக்கான உயர்தர வேலைகளைஇது உருவாக்கும். ஒரு உற்பத்தி மையமாக தூத்துக்குடியை மாற்ற போகும் ஒரு சிறப்பு அறிவிப்பு உள்ளது. இது மிகவும் மதிப்புமிக்க சர்வதேச நிறுவனம் ஒன்று தூத்துக்குடிக்கு வர உள்ளது..

Feb 17, 2024

நாட்டின் மதச்சார்பின்மையை வலிமைப்படுத்தும் அயோத்தி ராமர் கோவில்

நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைபடுத்தும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த மாதம்22ம் தேதி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவடைந்ததையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் ராமர் கோவிலில்தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகளும், உள்ளூர், வெளியூர் மக்களும் ராமர் கோவிலை பார்வையிட அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைப்படுத்தும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநில தலைவர் சித்திக் அலிஷிஹப் தங்கல் தெரிவித்துள்ளார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பால்படா நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் சித்திக் அலி, அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது நாட்டின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கை. அதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியதில்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்துராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோர்ட்டு தீர்ப்பின் மற்றொரு பகுதியாக பாபர் மசூதியும் கட்டப்பட உள்ளது. அதில் இருந்து நாம் பின்வாங்க முடியாது. அயோத்தி ராமர் கோவிலும், பாபர் மசூதியும் நாட்டின் மதச்சார்பின்மையை உறுதிபடுத்தும் சிறந்த உதாரணங்கள்.அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

Feb 17, 2024

கொங்கு மண்டலத்தில் புதிய 6 வழி சாலை திட்டம்..!

கோயம்புத்தூர் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய மாவட்டமாக இருக்கும் வேளையில், இந்நகரத்தை இணைக்கும் பிற நகரங்களும் அதிகப்படியான வாய்ப்புகளைப் பெற்று வருகிறது. இதில் முக்கியமாகக் கரூர் மாவட்டம் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெரும் காரணத்தால் கரூர் - கோயம்புத்தூர் மத்தியில் போக்குவரத்து பெரிய அளவில் அதிகரித்துள்ளது.கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே பெரும் பகுதி இருவழிச் சாலையாக இருக்கும் காரணத்தால் வேகமாகப் பயணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இரு மாவட்டங்கள் மத்தியில் பயணிகள் போக்குவரத்து மட்டும் அல்லாமல் டெக்ஸ்டைல் பொருட்கள் சார்ந்த சரக்கு போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வேகமான போக்குவரத்து மிகவும் அவசியமானதாக உள்ளது.அந்த வகையில் கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பசுமை வழிச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆலோசகரை நியமித்துள்ளது.கரூர் மற்றும் கோயம்புத்தூர் வழித்தடத்தில் வாகனங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாகப் பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, கரூர்-கோயம்புத்தூர் இடையே புதிய சாலை அமைப்பதற்கான திட்டத்தை NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தது. NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். தற்போது கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையிலான சாலை திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆயத்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், DPR தயாரிக்க ஆலோசகரை NHAI நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பல்வேறு பகுதிகளுக்குப் பலமுறை சென்று டிபிஆர் பணியை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.. இந்த 6 வழி சாலை திட்டத்திற்குத் தேவையான நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், இதற்கு 900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டம் NHAI ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறை தொடங்கும். மே 2024 க்குப் பிறகு இத்திட்டத்திற்கான இறுதி ஒப்புதல் மற்றும் மதிப்பீடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Feb 17, 2024

தங்கப் பத்திரம். தந்த லாபம்

 பாதுகாப்பான அதே சமயம் லாபம் தரக்கூடிய முதலீடு திட்டங்களை தேடுபவர்களுக்கு தங்கப் பத்திரங்கள் சிறந்த முதலீடாக இருக்கும். ஏனெனில் தங்கப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு தங்கம் விலை உயர்வுக்கு ஏற்ப உயர்வதோடு, ஆண்டுக்கு 2.5% வட்டியையும் பெற்றுத் தருகிறது.பாரம்பரிய தங்க முதலீடுகளில் இருந்து மக்கள் மாற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு தங்க பத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனை அடுத்து ஆண்டுக்கு 4 முறை தங்கப்பத்திரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தங்கப்பத்திரத்தின் முதல் பதிப்பு தற்போது முதிர்வடைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை பெற்று தந்துள்ளது.2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் தங்கப்பத்திரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,600 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தங்கப் பத்திரங்களுக்கு 8 ஆண்டுகள் முதிர்வு காலம். தற்போது முதிர்வு காலம் முடிந்து கிராமுக்கு 2,600 ரூபாய்க்கு வாங்கப்பட்ட தங்கத்திற்கு கிராமுக்கு 6,271 ரூபாய் கிடைத்துள்ளது. அதாவது ஒரு கிராமிற்கு 163% லாபம் கிடைத்திருக்கிறது. XIRR எனப்படும் உள்வருவாய் விகிதம் என பார்த்தால் 13.6% வருவாய் கிடைத்துள்ளது. உதாரணம்: கடந்த 2016ஆம் ஆண்டு தங்கப் பத்திரத்தின் முதல் பதிப்பில் ஒரு கிராம் 2,600 ரூபாய் என 26,000 ரூபாய்க்கு 10 கிராம் வாங்கி வைத்திருந்தால், 8 ஆண்டுகள் கழித்து உங்களின் 26,000 ரூபாய் முதலீடு 62,710ஆக உயர்ந்திருக்கும். இது மட்டுமின்றி ஆண்டுதோறும் உங்கள் முதலீட்டிற்கு 2.5% லாபமும் கிடைத்திருக்கும் தங்கப் பத்திரங்களை பொறுத்துவரை மற்ற முதலீடுகளை விட சிறந்த லாபத்தை தந்துள்ளது என்கின்றனர் முதலீட்டாளர்கள். சந்தையில் அதிகமாக பேசப்படும் நிப்பான் இந்தியா ETF GOLD BEES நிதி திட்டத்தில் கடந்த 2016 பிப்ரவரி முதல் 2024 பிப்ரவரி வரையிலான 8 ஆண்டுகளில் CAGR எனப்படும் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 9.31% மட்டுமே. ஆனால் தங்கப் பத்திரம் 13.6% வளர்ச்சியை தந்துள்ளது. உங்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை உள்ளது, அடுத்த 8 ஆண்டுகளுக்கு அது தேவைப்படாது என்ற நிலையில் நிச்சயமாக தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது பெரிய லாபத்தை அள்ளித்தரும். இன்று முதல் தங்கப்பத்திரம் வாங்கலாம்: நடப்பாண்டில் தங்கப்பத்திரம் வெளியீடு இன்று தொடங்கியுள்ளது.பிப்ரவரி 16ஆம் தேதி வரை தங்கப்பத்திரங்களை வாங்கி முதலீடு செய்யலாம். இந்த முறை தங்கப் பத்திரத்தில் ஒரு கிராமின் விலை ரூ.6,263 என்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் வாயிலாக பெற விரும்புவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடியும் கிடைக்கும். இவர்கள் ரூ.6,213 என்ற விலையில் ஒரு கிராம் தங்கத்தை பெறலாம். தங்க பத்திரங்களில் நாம் முதலீடு செய்யும் தொகைக்கு 2.5 சதவீதம் என ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டியை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெறலாம்தங்கப் பத்திரத்தை வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் வாங்கலாம். மொபைல் பேங்கிங் மற்றும் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துவோர் ஆன்லைனிலேயே தள்ளுபடி விலையுடன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம். வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களுக்கு நேரில் செல்லும் போது ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். தங்கப் பத்திரத்தை தனிநபர்கள் 4 கிலோ வரையிலும், நிறுவனங்கள் மற்றும் டிரஸ்டுகள் பெயரில் வாங்குவோர் அதிகபட்சமாக 20 கிலோ வரையிலும் வாங்க இயலும். தங்கப் பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீட்டை கடனுக்கு பிணையாக காட்டலாம்.

Feb 17, 2024

ரேசன் கடைக்குசென்று கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்

ரேசன் அட்டையில்உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம்.தமிழகத்தில் தற்போது2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு34 ஆயிரத்து793 ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த குடும்பஅட்டைகள் மூலம்7 கோடியே51 ஆயிரத்து954 பேர் பயன் பெறுகின்றனர். இவர்களில்6 கோடியே96 லட்சத்து47 ஆயிரத்து407 பேர் தங்களது ஆதார் எண்ணைஇணைத்துஉள்ளனர். மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ்18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன.'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதால், உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.

Feb 16, 2024

ரயிலில் ஏறும் மூத்த குடிமக்களுக்கு வசதிகள்  (ரயில்வேசெய்தி )

ரயிலில்மூத்த குடிமக்கள்இந்த வசதிகளைப்பெறுவார்கள் என்றுரயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ்அறிவித்தார். இதுபொதுமக்களிடையே மகிழ்ச்சியைஉண்டாக்கி உள்ளது.மூத்தகுடிமக்களுக்கு(மூத்தகுடிமகன் ரயில்டிக்கெட்) ஒருநல்ல செய்தியைவழங்கியுள்ளது. நீங்களும்ஒரு மூத்தகுடிமகன் மற்றும்ரயிலில் பயணம்செய்தால், இப்போதுநீங்கள் ரயில்வேயில்இருந்து பலவசதிகளைப் பெறப்போகிறீர்கள். ரயில்வேயில்இருந்து பெறப்பட்டதகவலின்படி, மூத்தகுடிமக்கள்,45 வயதுக்குமேற்பட்ட பெண்கள்மற்றும் கர்ப்பிணிப்பெண்களுக்கு ஸ்லீப்பர்பிரிவில் 6 லோயர்பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதனுடன்,3 ஏசியில் உள்ளஒவ்வொரு பெட்டியிலும்நான்கு முதல்ஐந்து கீழ்பெர்த்களும்,2 ஏசியில்உள்ள ஒவ்வொருபெட்டியிலும் மூன்றுமுதல் நான்குலோயர் பெர்த்களும்பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி,ரயிலில் கீழ்பெர்த் காலியாகஇருந்தால், மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்மற்றும் மேல்பெர்த் வழங்கப்பட்டபெண்களுக்கு மேல்பெட்டிகள் வழங்கஉள் நுழைவுச்சீட்டுப் பணியாளர்கள்மூலம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்றார்.ரயில்வேவெளியிட்டுள்ள அறிக்கையின்படி,முன்பு ரயில்வே60 வயது மற்றும்அதற்கு மேற்பட்டஆண்களுக்கு கட்டணத்தில்40 சதவீத தள்ளுபடியைவழங்கியது. அதேசமயம் பெண்களுக்குவழங்கப்படும் தளர்வுபற்றி பேசினால், இவர்களுக்கு58 வயதுமுதல்50 சதவீதம்தளர்வு கிடைத்துவந்தது. மெயில்,எக்ஸ்பிரஸ், ராஜ்தானிஉள்ளிட்ட அனைத்துவகையான ரயில்களிலும்இந்த தள்ளுபடிவழங்கப்படுகிறது.

Jan 11, 2024

இராஜபாளையம் டைம்ஸ்இராஜபாளையம் டைம்ஸ் உங்கள் போனில் பார்க்க ........... தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்இராஜபாளையம் டைம்ஸ்.இராஜபாளையம் டைம்ஸ்.

'இராஜபாளையம் டைம்ஸ்' என்ற பத்திரிக்கை2001 மார்ச் முதல்2021 மார்ச் வரை(21 ஆண்டுகள்) விலையில்லா பத்திரிகையாக இராஜபாளையம் நகரச் செய்திகள், மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்றுவெளியிட்டு இருக்கிறேன்.பலமுறை நான் சில பத்திரிக்கைகள் படித்து முடிக்கும் பொழுது கனத்த இதயத்துடன் தான் பத்திரிக்கையை மடித்து வைப்பேன். 'மன நிறைவுடன் ஒரு பத்திரிக்கை விஷயங்களை நாம் ஏன் நடத்தக் கூடாது' என்ற ஒரு ஆதங்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் Rajapalayamtimes.Rajapalayamtines. படித்து முடித்தவுடன் யாராக இருந்தாலும், ஏதோ நல்ல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம், என்ற மன நிறைவுடன் தான் பத்திரிக்கையை வாசித்து வந்துள்ளனர்.காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல இச்செய்திகள் நிறைய மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 2021 ஏப்ரல் மாதம் 14 ம் தேதி தமிழ் வருடப் பிறப்பன்று நவீன முறையில் EPaper ஆக rajapalayamtimes.com என்ற Website ஆரம்பிக்கப்பட்டது முதலில் சொற்பமான viewers உடன் வலம் வந்தது. அதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் கூடக்கூட E-Paper தற்பொழுது rajapalayamtimes App ஐ உருவாக்கி கிட்டத்தட்ட17 லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்து உள்ளது. என்பதை பெருமையுடன்தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கட்டணமில்லாEPaper ஐAndroidSmart போன் வைத்திருப்பவர்கள் Playstore க்குச் சென்று rajapalayamtimes ஐClick செய்து டவுன்லோட் செய்து, எங்கள் பத்திரிக்கைக்கு (E-paper) ஆதரவு அளிப்பீர்கள் என்ற பெரு நம்பிக்கையுடன் தொடர்கிறேன். குறைந்த GB யுடன் குட்டி குட்டி செய்திகளாக வலம் வரும் எங்களுடைய பத்திரிக்கைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு, சின்ன குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை அவர்கள் மனம்கோணாமல், மனதைக் காயப்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதில்லை. நினைத்த நேரத்தில் எங்குசென்றாலும் உங்கள் மொபைலில் இருக்கும் குட்டிப் பத்திரிக்கைRajapalayamtimes. தற்கால தொழில்நுட்பமுறையில் நவீன மயமாக்கி செயல்படுத்துகிறேன். கூடியவிரைவில்ஐபோனிலும் வலம் வரும்படி செய்ய உள்ளோம். என்பதை பகிர்ந்து கொள்கிறேன். தற்பொழுது இப்பத்திரிக்கையை உலகம் முழுவதும் உள்ள அனைவரும் படிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையில் மாதம் ஒரு முறை வெளியிடும் முதல் பக்க கட்டுரையை இராஜபாளையம் நகர மக்கள் அனைவரும் விரும்பி படிக்க ஆவலுடன் காத்திருப்பார்கள். எங்கள் செய்திகளில் நல்ல விஷயங்களைத் தவிர எந்தவொரு கிரிமினல், விபத்து, மற்றவரைக் காயப்படுத்தும் சொற்கள் கிடையாது, மனதிற்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் மன நிறைவையும் கொடுக்கும், ஒரே பத்திரிக்கை இராஜபாளையம் டைம்ஸ் மாத்திரம் தான்.Rajapalayamtimes பத்திரிக்கை படித்தவுடன் மனமகிழ்ச்சியை தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உங்களுடைய பேராதரவு தொடர்ந்து எங்கள் பத்திரிக்கையை மகோன்னதமான நிலைக்கு உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எங்களுடைய பத்திரிகை சேவை தொட்டுத் தொடரும்.'அட' நம்நாட்டில் உலகத்தில் இப்படி எல்லாம் நடக்கிறதா? என்ற மனத்துடன் தினம், தினம் படிக்கத் தூண்டும் குட்டிப் பத்திரிக்கை. rajapalayamtimes தினமும்5 நமிடங்கள் வாசித்தாலே போதும், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள நல்லதொரு பத்திரிக்கை. நிறைய செய்திகளை வெளியிட்டு எதைப்படிப்பது என்று திணறாமல், நின்று நிதானமாகப் படிக்க rajapalayamtimes ஐ தேர்ந்தெடுங்கள் மன நிறைவுடன் வழங்கும் மனநிறைவான rajapalayamtimes. செய்திகள் பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.உங்கள் செய்திகள் சங்கங்கள், கோவில் திருவிழா,  கல்லூரி, பள்ளி, விழாக்களை எங்களுக்குWhatsApp இல் அனுப்பி வைத்தால் இந்த செய்திகளில் பகிர்ந்து கொள்ளும். உங்கள் வியாபாரம், சம்மந்தமான விளம்பரங்களை கட்டணமில்லாமல் வெளியிடும் ஒரே இதழ் EPaper  ஐ Android Smart போன் வைத்திருப்பவர்கள்  இராஜபாளையம் டைம்ஸ் உங்கள் போனில் பார்க்க  https://play.google.com/store/apps/details?id=in.anjanainfotech.rajapalayamtimes      CLICK  LINK.READ OUR NEWS.24 ஆம் வருடத்தை  நோக்கி இராஜபாளையம்  டைம்ஸ் 

Jan 11, 2024

நவீன முறையில் EPaper ஆக rajapalayamtimes.com என்ற Website உங்கள் போனில் பார்க்க.....CLICK AND READ

24 ஆம் வருடத்தை  நோக்கி இராஜபாளையம்  டைம்ஸ் நவீன முறையில் EPaper ஆக rajapalayamtimes.com என்ற Website உங்கள் போனில் பார்க்க QR CODE ,CLICK AND READ17 LAKES VIEWVERS .

1 2 ... 46 47 48 49 50 51 52 53 54 55

AD's



More News