உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது மேலாக சிறிது காய்ந்த ரொட்டித் தூளைத் தூவினால் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.
சப்பாத்தி, பூரி செய்வதற்காக மாவை உருட்டித் தேய்க்கும்போது மைதா மாவுக்குப் பதிலாக சோள மாவைப் (கார்ன் ப்ளோர்) பயன்படுத்தினால், தேய்ப்பதற்குச் சுலபமாக இருக்கும்.
வெந்தயக்குழம்பு தயார்செய்து இறக்கும் போது ஒரு டீஸ்பூன் எள்ளுப்பொடியைப் போட்டால் வாசனையாக- சுவையாகவும் இருக்கும்.
மீந்துபோன வாழை, உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும் மணமும் கிடைக்கும்.
கோதுமை மாவைச் சலித்தால் வரும் தவிட்டில் தயிரைக் கலந்து உடலில் தேய்த்துக் குளித்தால் வெயிலினால் வரும் எரிச்சல் அரிப்பு ஓடி விடும்.
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது மேலாக சிறிது காய்ந்த ரொட்டித் தூளைத் தூவினால் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.
பாயசம் நீர்க்க இருந்தால் அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.
0
Leave a Reply