25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 01, 2026

மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சில மாற்றங்கள்.

மத்திய அரசு வரும் மே1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோக விதிகளில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை பலமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி நகர்ப்புறங்களில் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், ஊர்ப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. விநியோகத்தின் போது வழங்கப்படும் OTP முறையை நிரந்தரமாக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மேலும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மானியங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும். வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப மிஸ்டு கால், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் அல்லது மொபைல் செயலிகள் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். அதே நேரத்தில், குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு இணைப்பு வசதி உள்ள பகுதிகளில், மக்கள் அந்த முறைக்கு மாற அரசு ஊக்குவித்து வருகிறது. இத்தகைய மாற்றங்கள் எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்கவும் விநியோகத்தை சீரமைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

May 01, 2026

கௌரி, 19 வயது இளம்பெண்ணின் சாதனை.டிகிரி கூட இல்லை.BMW நிறுவனத்தில் வேலை.

கல்லூரி பட்டத்தை விட தனித்திறமையே சிறந்தது என்பதை நிரூபிக்கும் வகையில்,19 வயது இளம் பெண் கௌரி, உலகின் முன்னணி நிறுவனமான BMW நிறுவனத்தில்மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பெற்று சாதனை படைத்துள்ளார். முறையான பட்டப்படிப்பு இல்லாத நிலையிலும், சமூக வலைதளங்களில் அவர் உருவாக்கிய தனித்துவமான நற்பெயரும் , அவரது படைப்பாற்றலுமே இந்த வாய்ப்பை பெற்று தந்துள்ளன. வழக்கமாக ஐந்து ஆண்டுகள் அனுபவம் தேவைப்படும் ஒரு பணிக்கு, லிங்க்ட்இன் மற்றும் இன்ஸ்டாகிராமில் கௌரிக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்கள் ஒரு முக்கிய அங்கீகாரமாக திகழ்ந்துள்ளனர். இது தொடர்பாக கௌரி வெளியிட்ட பதிவில், தான் எந்த நிறுவனத்திற்கும் விண்ணப்பிக்கவில்லை என்றும், தனது திறமையைக் கண்டு பிஎம்டபிள்யூ நிறுவனமே தன்னை தேடி வந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.இந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திறமைக்கும் பட்டப்படிப்பிற்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது. தனிநபர் பிராண்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய சொத்தாக கருதப்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.  இருப்பினும், சில வல்லுநர்கள் முறையான கல்வி இன்றும் அவசியம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, கௌரியின் வெற்றி பல இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

Apr 30, 2026

மக்களே எச்சரிக்கை.....

e-PAN Card Download Email வந்தால் எச்சரிக்கை!சமீபத்தில் பலருக்கும் e-PAN கார்டை டவுன்லோட் செய்யுங்கள் என்ற பெயரில் Email வருகிறது. இது உண்மையானது அல்ல; சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் புதிய மோசடி முறையாக அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.புகார் அளிப்பது எப்படி?சந்தேகமான Email வந்தால்:webmanager@incometax.gov.inincident@cert-in.org.inஇந்த முகவரிகளுக்கு Email-ஐ forward செய்து புகார் அளிக்கலாம்.

Apr 30, 2026

RBI-ன் புதிய ரூல்ஸ்.வட்டி கட்டாத நகைகள் ஏலத்திற்கு விடப்படும்.

வங்கிகளில் நகைகளை அடகுவைத்து லோன் வாங்கியவர்கள் உரிய நேரத்தில் வட்டியை செலுத்த தவறினால் அந்த நகைகளை ஏலத்திற்கு விட வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது; முன்பெல்லாம் நகை ஏலத்திற்கு விடுவதற்கு முன் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்படும்; தற்போது, கடன் காலக்கெடு முடிந்து, தேவையான நோட்டீஸ் காலம் முடிந்த பிறகு வங்கிகள் ஏல நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என RBI கூறியுள்ளது.

Apr 30, 2026

கோடைக்காலத்தில் உங்கள் கைபேசி அதிக வெப்பமடைந்தால்,...

முதலில் அதன் உறையை அகற்றிவிடுங்கள், ஏனெனில் அது வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். பிரகாசத்தைக் குறைவாக வைத்து, நேரடி சூரிய ஒளியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விரைவாகக் குளிர்விப்பதற்காக அதை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள்; உள்ளே இருக்கும் ஈரப்பதம் அதைச் சேதப்படுத்திவிடும்!போன் அதிகமாக சூடாகுவது ஒரு பொதுவான பிரச்சனை. அதற்காக, ஃப்ரிட்ஜில் வைப்பது தவறு; அதற்கு பதிலாக, போன் கவர் அகற்றினால் போன் விரைவாக குளிரும்.

Apr 29, 2026

 தமிழகத்தில் சின்னம்மை பாதிப்பு

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் சின்னம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில்கடந்தசிலநாள்களில் 500க்கும்மேற்பட்டோர்சின்னம்மையால்பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில்சென்னையில்மட்டும் 476 பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மதுரையில் 96 பேரும், திருப்பத்தூரில்50 பேரும் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

Apr 29, 2026

தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு .

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், மாநிலத்தின் மின் தேவை 19,679 மெகாவாட்டிலிருந்து 19,822 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மின் நுகர்வு மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Apr 29, 2026

மத்திய அரசின் PM- Wani Wifi திட்டம்

மத்திய அரசின் PM- Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். waniwifi.inவிண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள்.

Apr 29, 2026

கோடை காலத்தில், உடல் சூட்டை தணிக்கும் உணவுகள்.

பருவக்கால பழங்கள், எலுமிச்சைச்சாறு + மண்பானை தண்ணீர் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். புதினா, கொத்தமல்லி இலைகள் உடல் சூட்டை நீக்கி, உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கும். இளநீர், தர்ப்பூசணி வெள்ளரிக்காய் நுங்கு, பதநீர், மாதுளை போன்றவை அதிக அளவில் எடுத்து கொள்ளலாம். மோர், கற்றாழை, மணத்தக்காளி கீரை எலுமிச்சை பால், தயிர், சப்ஜா விதை, வெந்தயம் அதிகளவில் சேர்த்து கொள்ளலாம்.

Apr 28, 2026

ஏசி பயன்பாடும் மின்சாரக் கட்டணமும்....

மின்சார பயன்பாடு - 1 மணி நேரத்திற்கு-1 டன் AC -1 யூனிட் மின்சாரம் 1.5 டன் AC -1.5 யூனிட் மின்சாரம் (தோராயமாக).உதாரணப் பயன்பாடு (மாதத்திற்கு)1.5 டன் AC - ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால்-மாதத்திற்கு 360 யூனிட் வரை செலவாகும்.ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் AC-ஐ 24°C-க்கும் குறைவாக இயக்க வேண்டாம்!கரண்ட் பில் அதிகரிக்கும். உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம் (சளி, வறட்சி, போன்றவை).

1 2 ... 50 51 52 53 54 55 56 ... 136 137

AD's



More News