25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 19, 2024

ஒருமுறை சார்ஜ் செய்தால் 465km பயணிக்க முடியும்.கார்களை அறிமுகப்படுத்திய Tata Motors

உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மூன்று புதிய Nexon EV, Nexon, Harrier மற்றும்Safari டார்க் எடிஷன்(DarkEdition) கார் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது..SpecialEditionஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று மாடல்களும் முழுவதுமாக கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளதுNexon Dark Edition ரூ.11.45 லட்சமாகவும், Nexon EV Dark Edition ரூ.19.49 லட்சமாகவும், Harrier Dark Edition ரூ.19.99 லட்சமாகவும், Safari Dark Edition ரூ.20.69 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.Nexon EV Dark Edition ஆனது 40.5kW பேட்டரி மற்றும் 143bhp மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 465km பயணிக்க முடியும்.

Mar 19, 2024

ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பெருமையடையச் செய்த சுகன்யா சதாசிவன் டாடா டெக்னாலஜீஸ் COO 

சுகன்யா சதாசிவன் தமிழ்நாட்டில் பிறந்து பாரதியார் பல்கலைகழகத்தில்தான் தனது கம்ப்யூட்டர் மற்றும் இன்ஃபர்மேட்டிக்ஸ் பிரிவில் இளங்கலைப் படிப்பை முடித்தார். பின்னர் ஐடி துறையில்33 வருடங்கள் பணியாற்றி வந்தார். ஐடி துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இவர் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் மூத்த துணை தலைவராகவும், தலைமை தகவல் அதிகாரியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டார்.இந்தநிலையில்தான் டாடா டெக்னாலஜீஸின் உயரிய பதவியானCOOவாகப் பணி நியமனம் செய்யப்பட்டார். முதன்முறையாக டாடா நிறுவனத்தில் உயரிய பதவியில் தமிழகத்திலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை இவரையே சாரும்.இதுதொடர்பாக டாடா டெக்னாலஜீஸ் சி.இ.ஒ மற்றும் மேனேஜிங் டைரக்டர் கூறியதாவது,“சுகன்யாவின் அனுபவமும் அவரின் திறமையும் எங்கள் நிறுவனம் வளர்ச்சி அடைவதற்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். அவருடைய வழிக்காட்டுதல் மூலம் எங்கள் நிறுவனம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பதை நம்புகிறேன். அதேபோல் உலக நிறுவனங்களுடன் உறவு வைத்துக்கொள்ள சுகன்யாவின் வழிக்காட்டுதல் நிறுவனத்திற்கு மிகவும் தேவை.” இவ்வாறு அவர் கூறினார்.இந்தCOO பதவியின் மூலம் சுகன்யா டெலிவரி மற்றும் ஆப்ரேஷன்ஸ் செயல்பாடுகளை வலுப்படுத்த நிறுவனத்திற்கு உதவி செய்வார். அதேபோல் உள் டிஜிட்டல் மற்றும் ஐடி அமைப்புகளுடன் சேர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கு உதவி செய்வார்.சுகன்யாHR மற்றும்ResourceManagementGroup ஆகியோருடன் இணைந்து நிறுவனத்தை வழி நடத்துவார். அதேபோல் டிஜிட்டல் தகவல்களை பரிமாறவும் உதவி செய்வார். அந்தவகையில் புனேவில் உள்ள CEO மற்றும்MD ஆகியோருக்கு நிறுவனத்தின் நிலை மற்றும் வளர்ச்சிகள் தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பார்.டாடா நிறுவனத்தின் மதிப்பு42,411 கோடி ஆகும். அவ்வளவு பெரிய மதிப்புடைய நிறுவனத்திற்கு முதன்மை அலுவலராக ஒரு தமிழ்ப் பெண் நியமனமானது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பெருமையடையச் செய்துள்ளது.

Mar 19, 2024

Rs 13,000 கோடிக்கு சொந்தக்காரர் ரூ.65 சம்பளத்திற்கு வாழ்க்கை யை  தொடங்கினார்  ஹட்சன், அருண் ஐஸ்கிரீம் ஆர்.ஜி. சந்திரமோகன்

ஹட்சன் அக்ரோ லிமிடெட் நிறுவனத்தின் பில்லியனர் தலைவர் ஆர்.ஜி. சந்திரமோகன், வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை. தமிழ்நாட்டில் அவரது ஆரம்ப கால வாழ்க்கை நிதி சிக்கல்களால் நிறைந்திருந்தது.பொருளாதார அழுத்தங்களால் பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கிய சந்திரமோகன், தொடக்கத்தில் ரூ.65 சம்பளத்திற்கு மரக் கிடங்குகளில் வேலை பார்த்தார்.பின், 1970 ல் இந்த வேலையை விட்டு விட்டு, வெறும் ரூ. 13,000 முதலீட்டில்250 சதுர அடி கொண்ட அறையில்3 ஊழியர்களுடன் ஐஸ்கிரீம் விற்பனை கடையை தொடங்கினார்.ஆரம்ப கட்டத்தில் தடுமாற்றத்தை சந்தித்தாலும், இறுதியில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வருவாய் ஈட்டினார்.இந்த வெற்றி அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான உத்வேகத்தை அவருக்கு வழங்கியது. 1970ஆம் ஆண்டில் அருண் ஐஸ்கிரீம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நிறுவினார்.இந்த அருண் ஐஸ்கிரீம் நிறுவனம் தான், இன்று நாம் அறிந்த ஹட்சன் அக்ரோ லிமிடெட் என்ற நிறுவனத்தின் அடித்தளத்தை உருவாக்கிய ஒரு சிறிய முயற்சி.சந்திரமோகனின் தலைமையில், ஹட்சன் அக்ரோ இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால்வகை நிறுவனமாக வளர்ந்துள்ளது. அருண் ஐஸ்கிரீம், ஆரோக்கியா பால், ஹட்சன் தயிர் போன்ற பிரபலமான பிராண்டுகள் இந்திய பால்வகை சந்தையில் ஹட்சனின் ஆதிக்கத்தை சில உதாரணங்கள் மட்டுமே. ஹட்சன்12,000 கிராமங்களில் இருந்து450,000 க்கும் மேற்பட்ட பால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்கிறது, இது நிலையான விநியோக சங்கிலியை உறுதி செய்து, உள்ளூர் சமூகங்களை ஆதரிக்கிறது.இந்திய நுகர்வோர்களின் மாறிவரும் சுவைகளை பூர்த்தி செய்வதற்காக ஹட்சன்தொடர்ந்துதயாரிப்புமேம்பாட்டிற்குபெயர்பெற்றது.ஹட்சன் நிறுவனம் வலுவான விநியோக சங்கலியை கொண்டுள்ளது, இது அவர்களின் தயாரிப்புகள் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைய உறுதி செய்கிறது.ஹட்சன் நிறுவனம் தனது விற்பனை பொருட்களை 42 நாடுகளுக்கு விற்பனை செய்கிறது.இந்திய பால்வகை தொழிலுக்கு சந்திரமோகனின் பங்களிப்பு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புக்காக இந்திய பால்வகை சங்கத்திடமிருந்து மதிப்புமிக்க ஆதரவு விருது பெற்றுள்ளார்.ஆரம்ப காலத்தில் வெறும் ரூ.65 சம்பளத்துக்கு வாழ்க்கையை தொடங்கிய சந்திரமோகன், தனது விடாமுயற்சி மற்றும் உழைப்பினால் ரூ.20,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை கட்டி எழுப்பியுள்ளார்.அத்துடன் Forbes பணக்காரர்கள் பட்டியலின் அறிக்கைப்படி, அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பும் Rs 13,000 கோடியை ($1.7 billion) தாண்டி உள்ளது...நிறுவனத்தின் வெற்றிக்குசந்திரமோகனின் கவனம் குறிப்பிட்ட விஷயங்களில் அதிகமாக குவிந்து இருந்தது.

Mar 18, 2024

நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை.

கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை. கடலில் முதலைகள் இருப்பது இல்லை. யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை.

Mar 18, 2024

ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம். வாரத்திற்கு 42 மணி நேரம் வேலை

ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது அதற்கு  சில நிபந்தனைகளுக்கு  நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு  ரூ.1.5 கோடி கிடைக்கும்."ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு தீவுகள் அமைந்துள்ளன. தற்போது அங்கு வெறும்40 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்த நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என  எதிர்ப்பார்க்கப்படுகிறது. வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதும் .வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆட்சேர்ப்பில் மருத்துவருக்கு ஆண்டுக்கு1 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டன் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்தை விட சுமார்40% அதிகமாகும். அதுமட்டுமன்றி இடமாற்ற உதவித்தொகையாக ரூ.8 லட்சமும், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் தனித்தனியாக வழங்கப்படும். அதன்படி மொத்தமாக ஒரு மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி ஊதியமாக வழங்கப்படும். இந்த சலுகைகளை பெற வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதும்.  இந்த தீவில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடலோர பகுதிகளில் பணிபுரிந்த அனு பாவமும் இருக்க வேண்டும். வெளியாட்களுக்கு மட்டுமே இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்படும்.இங்கு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தேடி வருகின்றனர். அந்த பள்ளியில் மொத்தம்5 முதல்11 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும்2 மாணவர்கள் நர்சரி வகுப்பில் உள்ளனர் அவர்களின் வயது வெறும்4.இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார்62 லட்சம் ஊதியம் வழங்கப்படும். இத்துடன் சுமார் ரூ.6 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படும் .

Mar 16, 2024

ரூ.10 லட்சம்வரை எளிதாககடன் பெற முத்ராதிட்டம்

பிரதமர்நரேந்திர மோடிதலைமையிலான இந்தியஅரசு 2015 -ம்ஆண்டில் பிரதான்மந்திரி முத்ராயோஜனா, (PMMY) என்னும்திட்டதை அறிமுகம்செய்தது.இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் வரை எளிதாக கடன் பெற முடியும்.முத்ராஒரு மறுநிதியளிப்புநிறுவனம் என்பதால்நேரடியாக கடன்வழங்காமல் வங்கிகள், பிற கடனளிப்புநிறுவனங்கள் மூலம்கடன் வழங்கஉதவுகிறது. அதாவது, சிறு தொழில்களுக்குகடன் வழங்குவதற்கானநிதியை வங்கிகளுக்குமுத்ரா திட்டம்அளிக்கிறது.3 விதமான கடன்கள்* Shishu Mudra Loan - ரூ.50,000 வரை கடன்பெறலாம்.* Kishor Mudra Loan - ரூ.50,000 -க்கு மேல்மற்றும் ரூ.5 லட்சம் வரைகடன் பெறலாம்.* Tarun Mudra Loan - ரூ.5 லட்சத்துக்கு மேல்மற்றும் ரூ.10 லட்சம் வரைகடன் பெறலாம்.சிறுதயாரிப்பு ஆலைகள், சேவை வழங்குபவர்கள், கடைக்காரர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், உணவகங்கள், பழுதுபார்க்கும் கடைகள், எந்திரம் இயக்குபவர்கள், கைவினைஞர்கள், உணவுபதப்படுத்துபவர்கள் இந்ததிட்டத்தில் கடன்பெறலாம்.இவர்களின்வணிகமானது கிராமப்புறம்மற்றும் நகர்ப்புறங்களில்அமைந்திருக்க வேண்டும்என்பது முக்கியமானவிடயம் ஆகும்.* இந்ததிட்டத்தில் கடன்பெறுபவர்கள் இந்தியகுடிமகனாக இருக்கவேண்டும்.* முந்தையகடனை திருப்பிசெலுத்தாதற்கான எந்தஅறிக்கையும் கடன்வாங்குபவருக்கு இருக்ககூடாது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது வணிகம்நடந்து கொண்டுஇருக்க வேண்டும்.24 முதல் 70 வரையிலான தொழில்முனைவோர்விண்ணப்பிக்க முடியும்.எப்படி விண்ணப்பிப்பது?* www.udyamimitra.in என்றஇணையதளத்திற்கு சென்று 'Apply Now' என்பதை கிளிக்செய்யவும். New Entrepreneur (புதியதொழில் முனைவோர்)ExistingEntrepreneur(தொழில்முனைவோர்),SelfEmployed(சுய தொழில்செய்பவர்) ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றைதேர்வு செய்யவும்.புதியபதிவுகளுக்கு, விண்ணப்பதாரரின்பெயர்,Emailaddress மற்றும்மொபைல் எண்போன்றவற்றை கொடுக்கவேண்டும். இறுதியாக OTP உருவாக்கி பதிவுசெயல் முறையைநிறைவு செய்யவும்.    

Mar 16, 2024

தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

தெற்குரெயில்வேவெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலும்(20683), செங்கோட்டையிலிருந்து தாம்பரம் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலும்(16102)) தென்மலை ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். 

Mar 16, 2024

தனது வீட்டையே நூலகமாக மாற்றியமைத்திருக்கிறார் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 72 வயதான முதியவர் ஹெர்னாண்டோ குவான்லாவ்

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலாவில்'ஹெர்னாண்டோ குவான்லாவோவின்' என்ற72 வயதான முதியவர், தனது இரண்டு அடுக்குமாடி வீட்டை அனைவரும் பயன்பெறும் வகையில் பொது நூலகமாக மாற்றியுள்ளார். அங்கு யார் வேண்டுமானாலும் புத்தகங்களை இலவசமாகக் கடன் வாங்கலாம் என்றும்'இங்கு மிகச்சிறந்த புத்தகங்கள் நிறைந்து கிடக்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற வாசகத்தையும் நூலகத்தின் முகப்பில் தொங்கவிட்டுள்ளார்.'வாசிப்புகுழு2000' என்றுஅழைக்கப்படும்,குவான்லாவின் நூலகத்தில்பல்வேறுவகையானபுத்தகங்கள்சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, "பிலிப்பைன்ஸ்மாணவர்களிடையேவாசிப்புத்திறன்குறைவாகஇருப்பதாகவும், மாணவர்களின்வாசிப்புத்திறனைமேம்படுத்தவேண்டுமென்றும்,மக்கள்தங்களின்சுகதுக்கங்களில்புத்தகங்களைப்படிப்பதன்மூலம்மனஅழுத்தத்தைக்குறைக்கமுடியும்" என்கிறார். குறிப்பாக, ஆர்வமுள்ளஇளம்வாசகர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் இந்தநூலகம்பெரிதும்பயன்படுவதோடுஅவர்களின்வாசிப்புஆர்வத்தைமேம்படுத்தும்" என்கிறார்.அவரது இந்நூலகத்தில் அடிப்படை நிலையிலிருந்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கென்று அனிமேஷன், பாடல் மற்றும் குறுங்கதை புத்தங்கள் இங்கு வரிசை படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் புத்தக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களைக் கவரும் விதமாக நாவல்கள், அரசியல் சார்ந்த புத்தகங்கள், நெடுங்கதைகள், வரலாற்று நூல்கள் என அனைவரின் விருப்பத்திற்கும், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில்72வயதான குவான்லாவ் தன் வீட்டில் ஆயிரக்கணக்கானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்.இது குறித்து கூறும் அவர், "மதம் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் மற்றும் அதுசார்ந்து உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு ஆன்மிகப் புத்தகங்கள், சுயசரிதைகள், உலக அளவில் பேசப்படும் பல்வேறு எழுத்தாளர்களின் பல வகையான புத்தகங்கள், அறிவியல், பொருளாதார, பொது அறிவு நூல்கள் என அனைத்தும் இலவசமாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த நூலகம் அமைந்திருக்கிறது" என்கிறார்.கடந்த20 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகில் உள்ள நடைபாதையில்50 புத்தகங்களை வைத்து ஒரு சிறிய நூலகத்தை ஆரம்பித்துள்ளார் புத்தக வாசிப்பாளரும், புத்தக சேகரிப்பாளருமான குவான்லாவ். அதன்பிறகு, பல ஆண்டுகளாக தான் சேகரித்த, தனக்கு பரிசளித்த, நன்கொடையாக பெறப்பட்ட புத்தகங்களைக் கொண்டு தனது வீட்டையே தற்போது நூலகமாக்கியுள்ளார்.மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதே தனது நோக்கம் என்பவர்,"சர்வதேச அளவில் பிலிப்பைன்ஸில் உள்ள மாணவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் வாசிப்பு மதிப்பெண்களுடன் கற்றல் பின்னடைவை எதிர்கொள்கிறார்கள். வறுமை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் புத்தகம் வாங்கிப் படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். பயன்படுத்தப்பட்ட மற்றும் நன்கொடையாகப் பெற்ற புத்தகங்களை மற்றவர்களுக்கு எந்தச் செலவின்றி வழங்குகிறார். இலக்கியத்தின் மூலம் கல்வியையும், வாசிப்பையும் மேம்படுத்துவதே தனது நோக்கம்" என்று பெருமிதத்துடன் கூறுகிறார்

Mar 16, 2024

நுண் ஊட்டச்சத்து உள்ள வைட்டமின் டி கைக்குழந்தைகளுக்கு அவசியம் தேவை.

உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி அவசியம் தேவை. கால்சியம் சத்து மனிதர்களின் எலும்பு உறுதியாக இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் தசைகளின் உறுதிக்கும் நரம்புகளின் பணிகளுக்கும் பயன்படுகிறது. இது சூரிய ஒளியில் இருந்து எளிதில் கிடைக்கக்கூடியது. சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் குழந்தையின் சருமத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்போது அது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்தை அளிக்கிறது.வைட்டமின் டி சத்து குழந்தைகளுக்குக் குறையும்போது அது பலவிதமான ஆரோக்கிய கேடுகளைத் தரும். ரிக்கெட்ஸ் நோய், தசை பலவீனம், எலும்பு முறிவுகள், வலி போன்றவற்றைக் கொடுக்கும்.வைட்டமின் டி குறைபாட்டால் கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும் குழந்தையின் உயரம், எடை மற்றும் வளர்ச்சி போன்றவற்றில் தாமதம் ஏற்படுவது.குழந்தை மந்தமாக இருக்கும். விரைவில் எரிச்சல் அடையும்.விளையாடும்போது கீழே விழுந்தால் எளிதாக எலும்பு முறிவு ஏற்படலாம்.தசைகள் பலவீனமாக இருக்கும். தாமதமான பல் வளர்ச்சி இருக்கும்.இவர்களுக்கு வைட்டமின் டி சொட்டு மருந்து, சிரப் போன்றவற்றை கொடுக்கலாம். மேலும், பிள்ளைகளை காலை, மாலை என இரு வேளைகளில் சூரிய ஒளி உடலில் நேரடியாகப் படும்படி வைக்க வேண்டும்.

Mar 15, 2024

மதுரை முக்கிய முதலீட்டுத் தளமாக மாறப் போகிறது

கடந்தஒருமாதத்தில்அடுத்தடுத்துமுக்கியமானஅறிவிப்புவெளியாகிமதுரைமக்களைமனம்குளிரவைத்துள்ளது.தமிழ்நாட்டின் பட்ஜெட் அமைந்தது முக்கியமான விஷயமாக உள்ளது.தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஐடி மற்றும் டெக் துறையில் கூடுதல் முதலீட்டையும், நிறுவனங்களையும் ஈர்க்கும் வகையில் மதுரையில் 345 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.4 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தைப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, மதுரையில் AIIMS  மருத்துவமனை கட்டுமான பணிகளை லார்சன் & டூப்ரோ நிறுவனம் தொடங்கியுள்ளது, மதுரை மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தென் தமிழ்நாட்டுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.மதுரை AIIMS கட்டுமானத்தைச் சுமார் 33 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது. இந்தப் புதிய வளாகத்தில், 1,08,325 சதுர மீட்டர் பரப்பளவில் 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம் உடன் கல்லூரி, விடுதிகள், அலுவலகம் எனச் சகல வசதிகளும் கொண்டு இருக்கும். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதியுதவியுடன் ரூ.1,978 கோடி மொத்த செலவில் மதுரையில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள தொப்பூர் பகுதியில் AIIMS வளாகம் கட்டப்படவுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் வசதி அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்குத் தமிழக அரசு டெண்டர் விடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 2வது பதிப்பான CITIIS 2.0 திட்டத்திற்கு மதுரை மற்றும் தஞ்சாவூர் தேர்வாகியுள்ளது. இந்திய அளவில் 18 மாநகரங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மதுரையும், தஞ்சாவூர் மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது, இரண்டுமே கோவில் நகரம் என்பது கூடுதல் சிறப்பு. மதுரை மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கு CITIIS 2.0 திட்டத்தின் கீழ் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தீக்கதிர் பாலம் மற்றும் சமயநல்லூர் சந்திப்பு இடையே இருக்கும் 8 கி.மீ. நீளம் கொண்ட வடக்கு ஆற்றங்கரை சாலையைச் சுமார் 176 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்ய அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மதுரை மீது இருந்த நீண்ட கால உள்கட்டமைப்பு சேவை பிரச்சனைகள் மெல்ல மெல்ல சீரடைந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஓரிரு வருடத்தில் மதுரை முக்கிய முதலீட்டுத் தளமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 2 ... 46 47 48 49 50 51 52 53 54 55

AD's



More News