தூத்துக்குடி 3 வருடத்தில் அசுர வளர்ச்சி , வேலைவாய்ப்பு
தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ரிப்போர்ட் ஒன்றும் கூட அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 5 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன.
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. கவனம்: இந்த மாநாட்டில் அதிகம் கவனிக்கப்பட்டது தூத்துக்குடி, சென்னை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இங்குதான் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.ACME - 52,000 கோடி பெட்ரோனாஸ் - 34,000 கோடி செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள் லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள் என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி சாதனை: சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் மாநிலத்திலேயே அதிக சிப்காட் தொழில் பூங்காக்கள் இருக்கும். சென்னையில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கருக்கு சிப்காட் உள்ளது . 1. தூத்துக்குடி Ph-1 & 2 : 2509 ஏக்கர் (தற்போது உள்ளது) 2. வைப்பார்: 1,020 3. சிலாநாதம்: 394 4. அல்லிகுளம்: 2,234 5. வேம்பூர்: 2,814 6. இ.வேலாயுதபுரம் : 355 7. மரச்சாமான்கள் பூங்கா : 1,100 ஏக்கர் 🇻🇳சிலாநத்தம் சிப்காட்டில் வின்ஃபாஸ்ட் வர வாய்ப்புள்ளது. வரவிருக்கும் அற்புதமான காலங்கள்
சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம். டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் தமிழ்நாட்டில் சென்னை, ஓசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி ஆட்டோமொபைல் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது என்று தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் சில முதலீடுகள் தென் தமிழ்நாட்டிற்கு செல்லும். ஆயிரக்கணக்கான உயர்தர வேலைகளைஇது உருவாக்கும். ஒரு உற்பத்தி மையமாக தூத்துக்குடியை மாற்ற போகும் ஒரு சிறப்பு அறிவிப்பு உள்ளது. இது மிகவும் மதிப்புமிக்க சர்வதேச நிறுவனம் ஒன்று தூத்துக்குடிக்கு வர உள்ளது..
0
Leave a Reply