மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. ஏற்கனவே தமது மகன்கள் இருவருக்கும், சகோதரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தை மன்னர் சார்லஸ் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து அமெரிக்காவில் இருந்து பறந்துவந்த இளவரசர் ஹரி, அரண்மனையில் எங்கும் தங்காமல் இரவு ஹொட்டலுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.தந்தையின் உடல்நிலை குறித்து நேரில் அறிந்துகொள்ளும் பொருட்டும் அவருக்கு ஆறுதல் கூறும் பொருட்டும் கலிபோர்னியாவில் வசித்துவரும் இளவரசர் ஹரி உடனடியாக லண்டன் திரும்பினார்.மன்னரை சந்தித்து சுமார்45 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரி தம்மை சந்திக்க வருகிறார் என்ற தகவல் தெரிந்திருந்ததால், அவர் வரும் வரையில், மன்னர் சார்லஸ் புறப்பட தயாராக இருந்த பயணத்தை தாமதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, பகை மறந்து சகோதரர்கள் இருவர் ஒன்றிணையலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் சந்திப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை.தமது மனைவி கேட் மிடில்டன் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால், அவரது கவனம் முழுவதும் மனைவி மீதே உள்ளது என்று கூறப்படுகிறது. அத்துடன் ஈஸ்டர் பண்டிகை முடியும் மட்டும் இளவரசர் வில்லியம் விடுப்பு எடுத்துக்கொண்டுள்ளார்.இந்த நிலையில் தான் சுமார்5,000 மைல்கள் பயணித்து லண்டன் திரும்பியுள்ளார் இளவரசர் ஹரி. தந்தையுடன் சுமார்45 நிமிடங்கள் பேசிய அவர், இரவு அரச குடும்பத்து மாளிகைகளில் எங்கும் தங்காமல் ஹொட்டல் ஒன்றில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.தமது இரு பிள்ளைகளுடன் மனைவி மேகன் மார்க்கல் அமெரிக்காவில் தனியாக இருப்பதால், இளவரசர் ஹரி லண்டனில் அதிக நாட்கள் தங்கும் வாய்ப்பு குறைவு தான் என்றே கூறப்படுகிறது.இருப்பினும், சகோதரர் வில்லியத்தை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால், அதை ஹரி கண்டிப்பாக தவறவிடமாட்டார் என்றே கூறுகின்றனர்.
.உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை. யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை. ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை. ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை.
அதானி குழுமம் பல்வேறு துறைகளில் தொழில் செய்து வருகிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் முந்த்ராவில் அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises) நிறுவனத்தின் கீழ் கட்ச் காப்பர் (Kutch Copper) நிறுவனத்தின் மிகப்பெரிய காப்பர் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, ஒரே இடத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய காப்பர் ஆலை இதுதான்.இந்த நிலையில், அதானியின் கட்ச் காப்பர் ஆலை வரும் மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட உற்பத்தியை தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தித் திறன் 2029-ம் நிதியாண்டுக்குள் 10 லட்சம் டன்னாக உயரும் எனக் கூறப்படுகிறது. ஆலையின் மொத்த மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர்.இந்தியா அதிக அளவில் காப்பர் இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் அதானியின் காப்பர் ஆலையால், இந்தியாவின் இறக்குமதி சார்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் எட்டுதீவுக் கூட்டங்கள் தான், ஹவாய். ஹவாய் தீவில், மஹானா பீச் எனப்படும்,ஹவாய் தீவில், மஹானா பீச்,கடற்கரையின் மணல் முழுதும், பச்சை நிறத்தில் இருக்கும். உள்ளூர் மக்களால்,'பாப்பாகோலியா பீச்' அல்லது'பச்சை மணல் பீச்' என, அழைக்கப்படும் இந்தக் கடற்கரை, ஹவாய் தீவின் தெற்கு முனையில் உள்ளது. பசிபிக் பெருங்கடலில் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் எட்டு தீவுக் கூட்டங்கள் உள்ளது பச்சை மணல் மஹானா பீச்உலகில்உள்ள சுற்றுலாவாசிகளிடம், ஹவாய் தீவு பிரபலமாக இருப்பதற்கு, இந்தக் கடற்கரையும் ஒரு காரணம். உலகில் இதுபோல் பச்சை நிற மணல் இருக்கும் கடற்கரை, நான்கு மட்டுமே உள்ளன. அதில், ஒன்று மஹானா பீச்.இந்த மணலில், 'ஒலிவின்' என்ற மதிப்புமிக்க கற்கள் இருப்பதால் தான், இப்படி பச்சை நிறத்தில் இருக்கிறது.பழங்கால எரிமலையான,'மவுனா லோவா'வின் தென்மேற்குப் பகுதியில் இருந்து தான், இந்த ஒலிவின் துகள்கள் தோன்றுகின்றன. இதை,'ஹவாய் வைரம்' என அழைக்கின்றனர்.இந்தக் கடற்கரைக்கு அவ்வளவு எளிதாக சென்றுவிட முடியாது.2,5 கி.மீ., துாரம் டிரெக்கிங் சென்றால் தான், அதன் அழகை ரசிக்க முடியும். கண்ணைக் கவரும் நிலப்பரப்புகளும், இயற்கை அதிசயங்களும் நிறைந்த ஹவாய் தீவு., மஹானா கடற்கரை
பெரும் எதிர்பார்ப்புக்குமத்தியில் உத்தரப்பிரதேசம்மாநிலத்தில் உள்ளஅயோத்தியில் ராமர்கோயில் கட்டப்பட்டுபிரதமர்மோடியால் ஜனவரி22ஆம்தேதி திறக்கப்பட்டுள்ளது.கோவிலின் மற்றபகுதிகளில் இன்னமும்வேலைகள் நடைபெற்றுவந்தாலும், குழந்தைராமர்கோவில்சிலை அமைந்துள்ளபகுதி மட்டும்அனைத்து வேலைகளும்முடிந்து, பக்தர்கள்தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.மக்களுக்குதிறந்துவிடப்பட்ட முதல்நாளிலேயே5 லட்சம்பக்தர்கள் கோயிலுக்குவந்ததாக உத்தரபிரதேச தகவல்மற்றும் மக்கள்தொடர்பு துறைதெரிவித்துள்ளது. இன்னமும்கூட்டம் குறையாததால்,தற்போதும் பக்தர்களின்கூட்டத்தால் அயோத்திதிணறி வருகிறது.அதே நேரத்தில்,கோடிக்கணக்கில் வருவாயும்குவிந்து வருகிறது.அயோத்தி ராமர்கோயில் அறக்கட்டளையின்அலுவலக பொறுப்பாளர்கூறியதாவது," கோயில்திறக்கப்பட்ட ஒருமாதத்தில் ரூ.25கோடி வருமானம்கிடைத்துள்ளது. 10 கிலோதங்கம்,25 கிலோவெள்ளி நகைகள்,காசோலை, என கோயில்உண்டியலில் கிடைத்தகாணிக்கை என மொத்தம்ரூ.25 கோடி கிடைத்துள்ளது”என்றார்.“ராமர்கோயிலுக்கு வரும்பக்தர்கள் வெள்ளி,தங்க நகைகளைநன்கொடையாக அளிக்கிறார்கள்.கடந்த ஒரு மாதத்தில்மட்டும் 60 லட்சம்பக்தர்கள் கோயிலில்தரிசனம் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் இந்தியாவின் 14வது விமான நிலையமாக டிஜிட்டல் யாத்ரா தளத்தில் இயங்கும் விமான நிலையமாக மாறி உள்ளது. இந்த டிஜிட்டல் யாத்ரா தளத்தை மத்திய சிவில் ஏவியேஷன் துறை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ளதொழில்நுட்பமாகும். பயணிக்கும் பயணிகளுக்கு சிரமம் இல்லாத பயணத்தை கொண்டு வருவதற்காக டிஜிட்டல் யாத்ரா என்ற புதிய தளத்தை உருவாக்கியது. கடந்த2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தளம் இந்தியாவில் உள்ள புது டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஆகிய விமான நிலையங்களில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.பின்னர் இது மெல்ல மெல்ல விரிவடைந்து அடுத்த 10 விமான நிலையங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது 14 வது விமான நிலையமாக சென்னை விமான நிலையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமானநிலையம்வழியாகபயணிக்கும்பயணிகளுக்குஏராளமானவசதிகள்வந்துகுவியப்போகின்றன.டிஜிட்டல் யாத்ரா தொழில்நுட்பம் என்பது பயணிகளின் முகத்தை அடையாளம் கண்டு அவர்களுக்கு விமான பயணத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் சுலபமாக விமானத்தில் ஏறுவதற்கான வழியை வகுத்துக் கொடுக்கிறது. இதனால் தேவையில்லாமல் விமான பயணத்தின் போது ஆங்காங்கே பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவது தவிர்க்கப்படும்.இந்த டிஜிட்டல் யாத்ரா ஆப் மூலம்விமான பயணம் செய்ய முதலில் இந்த ஆப்பை பதிவிறக்கி அதில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்பு விமான நிலையத்திற்குள் நுழைந்த பின்பு இந்த ஆப்பை அங்குள்ள டிஜிட்டல் யாத்ரா மையத்திற்கு சென்று உங்களது அடையாள அட்டையை காண்பித்து முதன்முறையாக சோதனை செய்ய வேண்டும். இது முதன்முறை மட்டுமே செய்ய வேண்டியது அதன் பின்னர் இதை செய்ய வேண்டிய தேவை இல்லை. இப்படியாக பதிவு செய்யும் போது உங்கள் முகம் நேரடியாக கேமரா மூலம் பதிவு செய்யப்படும். அதன் பின்பு நீங்கள் விமானத்தின் உள்ளே ஏறுவதற்காக பாதுகாப்பு சோதனைக்கு நிற்கும் போதும் சரி,அல்லது விமானத்திற்கு உள்ளே போர்டிங் செய்யும் போதும் சரி, ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களது போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட்டை காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கேமரா மூலம் உங்களது முகம் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களது டிஜிட்டல் யாத்ரா ஐடி மூலம் நீங்கள் குறிப்பிட்ட நபர் தான் என்பதை கண்டறியப்பட்டு உங்களுக்கான டிக்கெட் என அனைத்தும் அதிலேயே காட்டப்பட்டு விடும். இதற்காக ஒவ்வொரு முறை நீங்கள் விமான நிலையத்திற்கு செல்லும் போது அந்த குறிப்பிட்ட டிக்கெட்டை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வதுநல்லது.இதன் மூலம் உங்கள் டிக்கெட் மற்றும் போடிங் பாஸ் அனைத்தும் ஒரே டோக்கனுக்குள் கொண்டுவரப்பட்டு உங்களுக்கு சிரமம் இல்லாத போர்டிங் என்பது நடைபெறும் இதனால் தற்போது பல நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்களது ஐடி ப்ரூஃப் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் பாஸ் ஆகியவற்றை காண்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இனி அது போன்ற தேவை இருக்காது.
கட்டுமான தொழிலதிபரான பிபி ரெட்டி இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர். அடிப்படையில் அவர் ஒரு இன்ஜினியர். அவரது சொத்து மதிப்பு ரூ.16,591 கோடி என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டின் 360 வெல்த் ஹுருண்இந்தியபணக்காரர்கள்பட்டியலில்பிபிரெட்டிஇடம்பிடித்துள்ளார்.பிபி ரெட்டி ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் குடும்பத்தில் அவர் ஐந்தாவது பிள்ளை.ரெட்டியின் குடும்பத்துக்கு எந்தவிதமான வணிகத் தொடர்புகளும் இல்லை. இருந்தாலும், 1989 ஆம் ஆண்டில், ரெட்டி வித்தியாசமான முயற்சியில் ஈடுபட முடிவு செய்தார்.இரண்டு ஊழியர்களுடன் மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை அவர் நிறுவினார்.கடந்த 34 ஆண்டுகளில், ரெட்டியின் நிறுவனம் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் பணக்கார வணிக அதிபர்களில் பிபி ரெட்டியின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 13, 2024 நிலவரப்படி, மேகா பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.67,500 கோடியாக உள்ளது. இது அவரது 34 ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். 2023 இல், அவரது நிறுவனத்தின் வளர்ச்சி 22.1 சதவீதமாக இருந்தது.சிறிய குழாய்களில் தொடங்கி, இந்தியாவின் மிகப்பெரிய லிப்ட் நீர்ப்பாசன திட்டத்தை உருவாக்கியது. முதலில் சிறிய குழாய்களை உருவாக்கிய ரெட்டியின் நிறுவனம், சாலைகள், அணைகள் மற்றும் இயற்கை எரிவாயு விநியோக வலையமைப்புகள் மற்றும் லிஃப்ட் பாசனத் திட்டங்களை உருவாக்கியது. பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிர்மாணிப்பதில் அவரது நிறுவனம் தன்னை ஒரு முக்கிய பங்காளியாக நிலைப்படுத்தியது. பிபி ரெட்டியின் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய லிப்ட் பாசனத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் தெலுங்கானாவில் கல்லேஸ்வரம் லிப்ட் இரிகேஷன் திட்டத்தை $14 பில்லியன் செலவில் கட்டி அமைத்தது. கோதாவரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 18.26 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிபி ரெட்டி கல்லேஸ்வரம் திட்டத்தை 'நதியின் விரிவாக்கம்' என்று விவரிக்கிறார்.ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆடம்பர மாளிகையில் வசித்து வருகிறார். இது வைர மாளிகை என்று அழைக்கப்படுகிறது.\உண்மையிலேயே அந்த மாளிகை ஒரு வைரம் போலவே ஜொலிக்கிறது. ரெட்டிக்கு அந்த மாளிகையில் ஒரு கோல்ஃப் மைதானமும் உள்ளது.
பிரபல தொழிலதிபரும் பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆடம்பர வாழ்க்கை மற்றும் விலை மதிப்புமிக்க பரிசுகளை வழங்குவதற்காகவும் அடிக்கடி தலைப்பு செய்திகளில் வலம் வருகிறது. தங்கள் பிள்ளைகளுக்கும் விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் பாரம்பரியத்தை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தங்கள் வருங்கால மருமகளான ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் இதே போல ஆடம்பர பரிசுகளை வழங்கி உள்ளனர்.113.6 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.9,43,091 கோடி) சொத்து மதிப்புடன், உலக அளவில் 11வது பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான அம்பானி குடும்பம், ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது. இந்த நிலையில் வரும் மார்ச் 1 முதல் 3ம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் நடைபெற உள்ளது. .அனந்த் அம்பானியின் வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சன்ட், தனது மாமியார் நீட்டா அம்பானியிடம் இருந்து அழகான வெள்ளி லக்ஷ்மிகணேஷ் பரிசு ஹேம்பரைப் பெற்றார். அந்த பரிசு தொகுப்பில் 2 வெள்ளி துளசி பானைகள் மற்றும் ஒரு வெள்ளி தூபக் குச்சி மற்றும் ஒரு லட்சுமிகணேஷ் சிலை ஆகியவை அடங்கும். வெள்ளைப் பூக்கள் மற்றும் இதர அலங்காரப் பொருட்களால் ஹேம்பர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு முகேஷ் அம்பானி சுமார் ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட் காரை பரிசாக வழங்கினார். .ராதிகா மெர்ச்சன்ட், நீட்டா அம்பானியைப் போலவே பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.2022 ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் உள்ள தி கிராண்ட் தியேட்டரில் ராதிகா மெர்ச்சண்டிற்கு அம்பானி குடும்பத்தினர் அரங்கேற்றம் விழாவை ஏற்பாடு செய்தனர். குரு பாவனா தக்கரின் வழிகாட்டுதலின் கீழ் ராதிகா தனது பாரம்பரிய நடனப் பயிற்சியை முடித்தார். முகேஷ் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அழகான முத்து மற்றும் வைர நெக்லஸை அணிந்திருந்தார். இந்த நெக்லஸ் அவரின் மாமியார் நீட்டா அம்பானிக்கு சொந்தமானது. .
அண்ணாச்சி பழத்திற்கு விதைகள் இல்லை. .அத்தி,பலா மரங்கள் பூப்பதில்லை. . அரேபியாவில் ஆறுகள் இல்லை. . அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை. .இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
கடந்த 20 வருடங்களில் கோவை மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. கோவை மாநகர பகுதிகளில் மக்கள் நெருக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், சாலைகள் விரைவில் பளபளப்பாக மாறப்போகிறது கோவையில் அவினாசி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை என ஏராளமான நெடுஞ்சாலைகள் இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் சாலைகள் சரியாக இருந்தாலும் மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகளில் பல இடங்களில் பள்ளமாக காணப்படுகிறது.கோவை மாநகராட்சியை பொறுத்தவரை நீண்டகாலமாக விரிவாக்கம் செய்யப்படவில்லை... விரிவாக்கம் செய்யப்படாத நிலையிலும் கோவையில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 5 லட்சம் வீடுகள் இருக்கிறது. சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். புறநகர் பகுதிகளை சேர்ந்தால் 25 முதல் 30 லட்சம் பேர் கோவையில வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை நகரத்தை பொறுத்தவரை சுமார் 7 ஆயிரம் வீதிகள் உள்ளன.கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பல இடங்களில் விறுவிறுப்பாக நடக்கிறது. இதேபோல் கோவை மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் கியாஸ் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர 24 மணி நேர குடிநீர் திட்டம், தொலை தொடர்பு சேவைக்காக கேபிள் பதிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மாநகரின் பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.இதனால் கோவையின் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியப்பதால், இந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.. இந்நிலையில் முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோவை மாநகராட்சி சாலைகள் சீரமைக்கப்பட்டன. 2-ம் கட்டமாக கோவை மாநகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கோவை மாநகரில் உள்ள சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டம் (டூரிப்) திட்டத்தின் கீழ் ரூ.50¾ கோடி, நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (என்.எஸ்.எம்.டி.) திட்டத்தின் கீழ் ரூ.28¾ கோடி, மாநில மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.26½ கோடி உள்பட 203 கி.மீ. தூரத்திற்கு சாலைகள் சீரமைக்க மொத்தம் ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.