.சோயா பீன்ஸ் - சுரைக்காய் குழம்பு .
தேவையான பொருட்கள்
சிவப்பு சோயா பீன்ஸ் (உரித்தது) -1கப்
சுரைக்காய் (தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கியது)1/4கப்
தேங்காய்த் துருவல்- ½கப்
பெரிய வெங்காயம் -1
பூண்டு -10 பல்
பச்சை மிளகாய் -3 (நீளவாக்கில் கீறியது)
சோம்பு -4 டீஸ்பூன்
தாளிக்க
கறிவப்பிலை சிறிதளவு
தக்காளி -1
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலாத்தூள் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் 2 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் சோயா பீன்ஸ், சுரைக்காய், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி,
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு ஆகியவற்றை
சேர்க்கவும்.
அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிரஷர் முழுவதும் இறங்கியதும் குக்கரைத் திறந்து, தேங்காய்த் துருவலைச் சேர்த்து
ஒரு கொதி வரவிடவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் சோம்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
அதை குழம்பில் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்து
பரிமாறவும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.
ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த இந்த குழம்பைவீட்டிலேயே செய்து ருசித்து மகிழுங்கள்!
0
Leave a Reply