ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: ஹன்சிகாவுக்கு வெள்ளி.
ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறும் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த தொடரில், பெண்கள் 55 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹன்சிகா லம்பா, உக்ரைனின் நடாலியா கிளிவ்சுட்ஸ்காவிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் பிரீஸ்டைல் 65 கிலோவில் விஷால் காளிராமன் மற்றும் 125 கிலோவில் ரஜாத் ராகுல் ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். இதன்மூலம் இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.
0
Leave a Reply