25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர்  அவர்கள்  ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் (13.01.2026) நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,IAS.,அவர்கள்நேரில்சென்றுபார்வையிட்டுஆய்வுசெய்தார்.வெம்பக்கோட்டை வட்டம் தாயில்பட்டி ஊராட்சியில், பொங்கல் திருநாள்-2026 னை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பொங்கல் வாழ்த்து மடல் அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

தாயில்பட்டி ஊராட்சியில், உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் உரிய பயிற்சி வழங்கப்பட்டு, பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், குடும்ப அட்டைதாரர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், உங்க கனவ சொல்லுங்க படிவங்களை வழங்கி தகவல்களை பெறும் பணிகளை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மேலக்கோதை நாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களின் எழுத்தறிவுத் திறன், கற்றல் திறன் குறித்தும், பாடத்திட்ட முறைகள் குறித்தும் கேட்டறிந்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மேலக்கோதை நாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகள் (மாஸ் கிளினிங்) மேற்கொள்ளப்பட்ட இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அவர்கள் நட்டு வைத்தார்.

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கொங்கன்குளம் ஊராட்சியில் சமூகத்தின் மீதான தொழில் நிறுவனங்களின் பங்களிப்புத்தொகை 2025-26 திட்டத்தின் கீழ் ரூ.60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.இந்நேர்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *