எலும்புகள் பலம் பெற....
கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளில் பால் முதலிடத்தை பிடிக்கிறது. 1 கிளாஸ் பாலில் 300 கிராம் கால்சியம் சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
முட்டைகோஸில் கால்சியம் சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் தாதுக்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்புச்சத்து அதிக இருப்பதால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
ப்ரோக்கோலி தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் எலும்புகள் வலுப்படும். இதில் இருக்கும் வைட்டமின்K சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில்கால்சியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. கீரைகள் உடலுக்கு தேவையான 25%கால்சியம் சத்துக்களை தருகிறது. இதில் நார்சத்து, வைட்டமின்A மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் இது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும் எலும்புகள் உறுதியாக வலுவாக இருக்க பப்பாளி பீன்ஸ் பிரண்டை ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
0
Leave a Reply