25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கோடை வந்தவுடன் முதியோர்களைத் தாக்க முதலில் வருவது heat Stroke.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை வந்தவுடன் முதியோர்களைத் தாக்க முதலில் வருவது heat Stroke.

உடல் வறட்சி, அரிப்பு, வேனல் கட்டி, அக்கி, நீரிழப்பு, மயக்கம், நீர்ச்சுருக்கு. இவை எல்லாவற்றிலும் இருந்து மொத்தமாக நம்மைக் காப்பாற்றஒரே ஒரு மருந்து இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? வாங்க... ஒட்டுமொத்தநோய்களுக்கும் கீழ்க்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இந்தக்கோடை முழுவதும் சாப்பிட்டால் சகலரோக நிவாரணியாகச் செயல்படும்!

 

1. குக்கில் பற்பம் அல்லது குக்கில் பற்ப மாத்திரையைப் பாலுடன் தினமும் ஒருவேளை எடுக்க நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், தோல் அரிப்பு வெப்ப அலை தாக்கம் இவற்றிலிருந்து தப்பிக்கலாம் (மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கவும்).

 

2. பாதாம் பிசினைப் பொடித்து நீரில் ஊறவிட்டுப் பாலுடனோ,பழச்சாறுகளுடனோ சேர்த்துக் குடிக்க, மேற்சொன்ன கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம்.

 

3. சப்ஜா விதைகளை நீரிலிட்டு ஊறவைத்துப் பழச்சாறுகளுடன் குடிக்கலாம். இதனால் உடல் உஷ்ணம் தணியும்.

 

4. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நன்னாரி மணப்பாகு தினம் இருவேளை நீர்விட்டுக் குடிக்க மேற்சொன்ன நோய்கள் தீரும்.

 

5. மேலும் வெண்பூசணி லேகியம், சதாவரிலேகியம், சரபுங்க வில்வாதி லேகியம், நன்னாரி லேகியம், மனோரஞ்சித லேகியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கலாம்.

 

6. வாழைத்தண்டு, முள்ளங்கி, பீர்க்கன்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களைத் தினமும் சாப்பிடலாம்.

 

7. பானகம், பழச்சாறுகள் இளநீர், மோர், நிசி நீர் எனப்படும் பழைய சோற்றுநீர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் புரோபயாடிக் உள்ளதால்  உடல் ஆரோக்கியம் மேம்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News