25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


முதுகுத் தண்டுவட நோய்கள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுகுத் தண்டுவட நோய்கள் .

முதுகுத் தண்டுவடம் இல்லாமல் நமது உடலினைக் கற்பனை செய்ய முடியுமா உங்களால். ஆக்டோபஸ் போல, ஜெல்லி மீன் போல, இல்லை ரப்பர் பந்து போலத் தரையில் ஊர்ந்திருப்போம்... நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை எல்லாம் வெறும் கற்பனையாக இருந்திருக்கும். 'நான் யாருக்குமே வளைந்து போகமாட்டேன்' என்கிற டயலாக் எல்லாம் பேச முடியாது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் முதுகுத் தண்டுவடத்தை மூளையின் நீட்சியாகச் சொல்லலாம். உடலுக்குத் தேவையான மிக முக்கியமான நரம்புகள் முதுகுத் தண்டுவடத்தின் எலும்புகள் (vertebrae) வழியாகவே அத்தனை உறுப்புகளுக்கும் செல்கின்றன. அப்படிச் செல்லும் நரம்புகள் தண்டுவட எலும்புகளில் அழுத்தப்படாமல் இருப்பதற்கு எலும்புகளுக்கு நடுவில் தக்கை அல்லது குஷன் போல டிஸ்க்

எனச் சொல்லப்படும் அமைப்புகள் இருக்கின்றன. எலும்புகள் விலகினாலோ அல்லது டிஸ்கில் ன் தேய்மானம் ஏற்பட்டாலோ, இல்லை டிஸ்க் எனப்படுவது விலகி எலும்புகளுக்கு வெளியில் - வந்தாலோ முதுகில் வலி ஏற்படும். இவ்வாறாக க ஏற்படும் வலி முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படலாம் / இல்லை அந்த நரம்புகள் செல்லும் பாதைகளில் ஏற்படலாம் அல்லது அந்த நரம்புகள் சென்று அடையும் உறுப்புகளில் ஈ வலி ஏற்படலாம். உதாரணமாக இடுப்புப்பகுதி எலும்புகளில் நரம்புகள் - அழுத்தப்பட்டால் கால்களில் அல்லது பாதங்களில்வலிகள் ஏற்படும். இதில் கால் வலிக்கு வைத்தியம் பார்ப்பது எந்தப் பயனும் தராது. முதுகுத் தண்டுவடத்தைச் சரிசெய்வதே இதற்குச் சரியான தீர்வாகும்.

 முதுகுத்தண்டு வலிக்குப் பொதுவான காரணங்கள்...

1.விபத்து

2.உடல் பருமன்

3. முறையற்ற உணவுப் பழக்கவழக்கம்

4. மன அழுத்தம்

5. தூக்கமின்மை

6.உடற்பயிற்சி இல்லாதது.

வலி நிவாரணி  மாத்திரைகள் மட்டும் எடுத்து கொள்வதும், ஊசி போட்டுக் கொள்வதும்  முதுகுத் தண்டுவட பிரச்னைகளுக்கு  தீர்வாக அமையாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News