முதுமையை வெல்லும் உறுதி மொழி.
தினமும் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டு. அவதிகளைச் சுலபமாக வெல்ல முடியும்.எனக்கு வயதாகிக் கொண்டு வருவதை உணர்கிறேன். சீக்கிரமே முதுமையை எட்டி விடுவேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் குணம் எனக்கு வந்துவிடக் கூடாது. குறிப்பாக, எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டும்,என்ற உணர்வு எனக்கு எழக்கூடாது.
எல்லோரது தவறுகளையும் திருத்துவதுதான் என் வேலை' என்ற நினைப்பு எனக்கு வரக்கூடாது. எனது அனுபவமும் அறிவும் பொக்கிஷம். அறிவுரை என்ற பெயரில் எல்லோரிடமும் அதை வாரி இறைத்துவிட மாட்டேன்.நீள நீளமான வாக்கியங்கள் தவிர்த்து. ஒற்றை வார்த்தையில் எதையும் சொல்லும் பக்குவம் வர வேண்டும்.
என் கஷ்டங்களையும் வலிகளையும் பற்றி எல்லோரிடமும் புலம்பாமல், அடுத்தவர் கஷ்டங்களையும் காதுகொடுத்துக் கேட்கும் பொறுமை பெற வேண்டும்.எல்லாமே ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்றில்லை. மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் வேண்டும். துயரமான தருணங்களை என் ஞாபக மறதி நோய் எடுத்துக் கொள்ளட்டும்.
நானும் தவறுகள் செய்யக்கூடிய எளிய மனிதப்பிறவிதான் என்றநினைப்பு எனக்கு எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை அது தவிர்த்துவிடும்.எல்லோருக்கும் கருணை காட்டும் மனம் வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும். அடுத்தவரின் சிறந்த குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் தாராள உள்ளம் வேண்டும். யாரையும் அதிகாரம் செய்யும் முரட்டு குணம் மட்டும் வேண்டாம்.
0
Leave a Reply