75 வயதிற்கு பிறகும் இதய அறுவை சிகிச்சை செய்யலாம்.
மனிதரின் வயது அதிகரிக்கும்போது, ரத்த நாளங்கள், குறிப்பாக இதயத்துக்குச் செல்லும் கரோனரி ஆர்ட்டரிகள் மெல்ல மெல்லக் கொழுப்பு மற்றும் கால்சியம் அடைப்புகள் மூலம் குறுகத் தொடங்குகின்றன. இதனால் இதயத்தின் தசைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் குறைந்து, மார்பு வலி (Angina) அல்லது இதயக்குழல் அடைப்பு (Myocardial infarction) போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
75 வயதுக்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு,பல ரத்தக்குழல் அடைப்புகள் காணப்படும்.
சில சமயங்களில் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்ட் போட முடியாதவாறு கடினமான அல்லது நீண்ட அடைப்புகள் இருக்கும்.இதயத்தின் வெளிகொணரும் (Pumping) திறன் குறைந்திருக்கும்.இத்தகைய சூழலில், மருந்துகள் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை போதாது. இதயத்துக்குப் புதிய வழி (Bypass) அமைத்து, ரத்த ஓட்டத்தைச் சீர் செய்ய, இதய அறுவை சிகிச்சை மிகச் சிறந்த தீர்வாகிறது.
வயது தடையல்ல
இன்றைய நவீன மருத்துவத் தொழில்நுட்பம், சிறந்த இதய அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவு (ICU) பராமரிப்பு முன்னேற்றங்கள் காரணமாக, 75 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்கூட இதய அறுவை சிகிச்சையால் சிறப்பாகக் குணமடைகிறார்கள்.
நோயாளியின் உடல்நிலை, இதயத்தின் செயல்திறன் மற்றும் சுற்றியுள்ள உடல்நலக் குறைபாடுகள் ( சிறுநீரகம், நுரையீரல் முதலியவை )போன்றவற்றை மதிப்பீடு செய்த பின்சரியான தீர்மானம் எடுப்பதில் இதில் முக்கியமே. சுருக்கமாக சொன்னால் வயதுஓர் எண் மட்டுமே! இதயத்துக்குப் புதிய உயிர்கொடுக்கும் இதய அறுவை சிகிச்சை, 75 வயதுக்குப் பிறகும் பலருக்கு நம்பிக்கையையும் புதிய வாழ்க்கையையும்தருகிறது.
0
Leave a Reply