25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முதுமை

May 13, 2025

முதுமை என்பது ஒரு பருவமே.நோயல்ல.!

முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல. ஆனால் முதுமையில் பல நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாகின்றன.நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!ஆரம்பம் என்கிற ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால் இளமைக்கு முதுமை ஒரு முடிவு.முதுமை அடை வதற்கு என்ன காரணங்கள் என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னமும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. முதுமை அடையப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். முன்னோர்கள் நீண்ட நாட்கள் வழ்ந்திருந்தால் அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிர் அணுக்கள் குறைகின்றன.திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகுதல். உயிரணுக்கள் பெருகி வரும் தன்மை.கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுதல்.ஃப்ரிரேடிகல்ஸ் என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழித்தல்.உடல்வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன் குறைதல். நமது மூளைப் பகுதியிலுள்ள பிட்யூட்ரி என்னும் நாளமில்லாச் சுரப்பி Killer hormone எனும் திரவத்தைச் சுரக்கிறது. இந்தத்திரவம்  பெண் பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. இத்திரவம் உடலை அழித்து மரணத்தை ஏற்படுத்துகிறது. அதனால், ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால், அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு,தலையிலுள்ள மூளைப் பகுதியில் பீனியல் எனும் சுரப்பி Melotinin எனும் திரவத்தைச் சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம். ஒருவர் 25 வயதை அடையும்போது இத்திரவம் குறைகிறது. ஆகையால் முதுமை அப்போதே தொடங்க ஆரம்பித்து விடுகிறது.இவ்வுடல் மாற்றங்கள் காலத்தால் ஏற்படுவதுஎன்றாலும்,முதுமைஅடைந்தவர்க்கெல்லாம் இம்மாற்றங்கள் ஏற்படுவதில்லை. சிலருக்குச் சில மாற்றங்களே நிகழும் .மேற்கண்ட மாற்றங்கள் முதுமையில் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக அமைத்துக்கொண்டால் முதுமையிலும்  இன்பம் காணலாம்.

May 06, 2025

முதுமை காலத்தில் ஆரோக்கியமாக வாழ….

உடற்பயிற்சி என்றால் கனமான பொருள்களை தூக்குவது, ஓடுவது, உட்கார்வது என்று நினைக்க வேண்டாம். வேகமான பயிற்சியும் அவசியமில்லை. நாற்காலியில் உட்கார்ந்தபடி கைகளை கால்களை அசைத்து இலேசான பயிற்சி செய்யலாம். நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.வாரத்துக்கு 150 நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும். வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் அருகில் இருக்கும் பூங்கா, கோவில் போன்ற இடங்களுக்கும் செல்லலாம். பயிற்சியின் போது அல்லது அவ்வபோது உடலில் சூரிய ஒளி பட வேண்டும். அப்பொதுதான் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் இருக்கும்.வயதான காலத்திலும் இனிப்புகளை அதிகம் விரும்புவது, கார சாரமான உணவை எடுத்துகொள்வது, துரித உணவுகளை விரும்பி உண்பது என எல்லாமே மோசமான பழக்கங்கள் தான். இனி நாக்குக்கு நீங்கள் அடிமை ஆக கூடாது.இந்தகாலத்தில்உங்களுக்குநோய்எதிர்ப்புசக்திகுறையக்கூடும்.அதைஈடுசெய்யும்வகையில்பழங்கள், காய்கறிகள், கீரைகள், கொட்டைகள் போன்றவற்றை எடுத்துகொள்ள வேண்டும். இது நோய்த்தொற்றை உண்டாக்கும் வைரஸ் மற்றும்பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாக்கிறது. இது ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல மூலமாகும். இது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.ஆண்கள்புகைப்பழக்கம்மற்றும்மதுப்பழக்கத்தைகொண்டிருந்தால்கண்டிப்பாகதவிர்க்கவேண்டும்.பாக்கு, புகையிலை, வெற்றிலை என எல்லாமே வயதான காலத்தில் தவிர்க்க வேண்டியவையே.உடல் உறுப்புகள் வயதான காலத்தில் தங்களது பணியை மெதுவாக்கும். இந்த நேரத்தில் இதன் பாதிப்புகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். புகைப்பிடிப்பதால் பக்கவாதம், இதய செயலிழப்பு, பெருந்தமனி தடிப்பு, விறைப்புத்தன்மை தோல் நெகிழ்ச்சி உண்டாக்க கூடும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருந்தால் நீங்கள் இந்த பழக்கத்திலிருந்து வெளியேறியே தீர வேண்டும்.வருடம் ஒரு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். கண் மருத்துவரை சந்தித்து கண் கோளாறுகள் குறித்த பரிசோதனை செய்ய வேண்டும். காது கேட்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் காது மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். வயதான காலத்தில் தான் இந்த கோளாறுகள் அதிகரிக்க கூடும் என்பதால் இந்த பரிசோதனை அவசியம்.

Apr 29, 2025

வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.

 இரு கால் மூட்டுகளில் ஏற்படும் வலி பெரும்பாலும் கீல்வாதத்தால் வருகிறது. இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களை அதிகமாக பாதிக்கிறது.கால் மூட்டுகளில் ஏற்படும் காயங்கள் காரணமாக வீக்கம், வலி உருவாகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள தசைகள், எலும்புகள், இணைபுள்ளிகள் மற்றும் இணைப்புக்கயிறுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன..கீல்வாதம் காரணமாக, கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை பாதுகாக்கும் இணை எலும்பு மெதுவாக பலவீனமடைந்து, காலப்போக்கில் முற்றிலும் தேய்ந்து வருகிறது. மூட்டுகளுக்குள் இருக்கும் திரவம் குறைந்து, எலும்புகள் நேரடியாக உராய்வதால் கடுமையான வலி, வீக்கம் மற்றும் நடக்கும் போது சத்தம் போன்றவை ஏற்படலாம்.வயதாகும் போது, கீல்வாதம் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இந்த பிரச்சனை ஆண்களை விட அதிகம் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள்.நடக்கும் போது, உட்காரும் அல்லது நிற்கும் போது மூட்டுகளில் கடுமையான வலிகாலையில் எழுந்தவுடன் மூட்டுகளில் விறைப்பு, சீராக இயக்க முடியாத நிலைகால்மூட்டுகளினசுற்றுவட்டாரத்தில்வீக்கம்சில வளர்சிதை மாற்ற நோய்கள் (மெடபாலிக் டிஸ்அோர்டர்கள்), நீரிழிவு, இரும்புச்சத்து அதிகம் காணப்படும் நிலை  போன்றவை கீல்வாதத்தை மேலும் மோசமாக்கும்மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

Apr 22, 2025

வயதானவர்களை தாக்கும்  (சர்கோபீனியா நோய் )

மனிதர்கள் முதுமை அடையும்போது, உடலின் தசைகள் மெதுவாக வலிமையிழக்கத் தொடங்குகின்றன. இந்த நிலைமைக்கு மருத்துவத்தில் 'சர்கோபீனியா' என்ற பெயர் உள்ளது..இது வயதினால் மட்டுமல்ல; உடற்பயிற்சியின்மை, மது மற்றும் புகை பழக்கம், புரதச்சத்து மற்றும் வைட்டமின் டி குறைபாடும் முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.வயதானவர்கள் எப்போதும் அமராமல், சற்று நடக்கவும், நிற்க வேண்டும். ஒரு வாரம் படுக்கையில் இருந்தால், 5% வரை தசை இழப்பு ஏற்படும். அதை மீண்டும் மீட்டெடுக்க மிகவும் கடினம்.இதைவிட ஆபத்தானது தசை குறைபாடு ஏற்படுவதால். சர்க்கரை அளவு கூடும்,  நடையிலும் தடை ஏற்படும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்றவை தசையை வலிமையாக்கும் சிறந்த வழிகள்.60-70 வயதினருள் 13% பேர், 80-க்கு மேல் உள்ளவர்களில் பாதி பேர் வரை இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால், தினமும் சிறிய பயிற்சிகளுடன் உடலை இயக்குங்கள்.

Apr 15, 2025

உணவை மென்று சாப்பிட சிரமப்படுபவர்களுக்கு...

பல் இல்லாத முதியோர்கள்உணவை  மென்று சாப்பிட  மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பெரும்பாலும் திரவ உணவையோ அல்லது திரவம் அதிகமாகக் கலந்துள்ள உணவையோதான் எடுத்துக்கொள்வார்கள். இதனால் உணவின் அளவு மட்டுமல்ல,அதன் ஊட்டச்சத்து நிலையும் குறைந்துவிடும்.மெல்வதற்குச் சிரமப்படும் முதியோர்களுக்கான சில யோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றினால் அவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.பால்அருந்தவும்,பனீர், சீஸ்சாப்பிடவும்,மெல்வதற்குக்கடினமானபொருள்களைநன்றாகஅரைத்து, மசித்துச்சாப்பிடவும்.காய்கறிகளை வேகவைத்து மசித்துச் சாப்பிடவும். மிருதுவான பழங்களான வாழை, பப்பாளி, மாம்பழம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிடவும் அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ்கள் குடிக்கவும்.குழைய வேகவைத்த சாதம், சேமியா, பொங்கல் மற்றும் உப்புமா சாப்பிடலாம்.வேகவைத்த முட்டை,மிருதுவான இறைச்சி,வேகவைத்த மிருதுவான மீன்.தக்காளி போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட வேண்டியிருந்தால் பொடியாக நறுக்கியோ தோலுரித்தோ சாப்பிடலாம்.சூப் வகைகள், ரொட்டித் துண்டுகளைப் பாலோடு சேர்த்துச் சாப்பிடலாம்.ஐஸ்க்ரீம், ஜெல்லி, புட்டிங்ஸ், பாயசம், பாஸந்தி, ஜாமூன் மற்றும் ஜாங்கிரி போன்ற மிருதுவான உணவுகளைச் சாப்பிடலாம்.

Apr 08, 2025

எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

வயதானவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, தைராய்டு, சிறுநீரக பிரச்சனை போன்ற நோய்களில் ஏதேனும் இருந்தால் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் இந்த மாத்திரைகளோடுவைட்டமின்டி.பி6, பி 12, கால்சியம்மாத்திரைகளையும்பரிந்துரைத்திருப்பார்கள்.அதையும்தவிர்க்காமல்எடுத்துகொள்ளுங்கள்.மருத்துவர் குறிப்பிட்ட அளவு மட்டுமேயான மாத்திரைகளை எடுத்துகொள்ள வேண்டும். சுயமாக மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே போன்று மாத்திரைகள் வாங்கும் போது அது பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் பரிசோதிப்பது அவசியம். மாத்திரைகள் விஷயத்தில் எப்போதும் சமாதானம் ஆக வேண்டாம்.நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு என எந்த நோயாக இருந்தாலும் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வயதானவர்கள் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை.வீடு தேடி வந்து ரத்த பரிசோதனை செய்கிறார்கள். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் வீட்டிலேயே அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வசதீயாக வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவி வாங்கி வைத்துகொள்ளலாம்.எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

Apr 01, 2025

படுக்கைப்புண்

படுக்கைப்புண் என்பது அழுத்தப்புண். அதாவது தொடர்ந்து ஏற்படும் அழுத்தத்தினால் திசுக்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் பிராணவாயுவும், ஊட்டச்சத்தும் திசுக்களுக்குக் குறைகிறது. தசைகளிலிருந்து கழிவுப் பொருட்கள் வெளியேறுவது குறைந்து அங்குள்ள திசுக்கள் இறந்து புண்ணாகிவிடும். முதலில் தோலில் நிற மாற்றம் இருப்பதைக் காணலாம். பிறகு புண்ணாகி மிகவும் ஆழமானதாக மாறிவிடும். இது உடலில் பெரும்பாலும் எலும்புகள் புடைத்துக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும். அந்த இடங்கள் படுக்கைகளில் அழுத்தப்படும் போது அழுத்தம் அதிகரித்து, ரத்த ஒட்டம் குறைந்து திசுக்கள் இறந்து அழுத்தப்புண் உண்டாகிறது.தோலில் ஏதாவது ஒரு அசாதாரணமான மாற்றம் ஏற்பட்டால் உடனே அதை மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.புண் ஏற்பட்டுள்ள பகுதியில் அழுத்தம் ஏற்படாமல் இருக்கத் தலையணை அல்லது காற்றுத் தலையணை வைத்து அழுத்தத்தைக் குறைக்கலாம்.சுமார் 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது புண் இருக்கும் இடத்திற்கு அழுத்தம் ஏற்படாமல் நிலையை மாற்றிப் படுக்கவைக்க வேண்டும். (Change of position).தேவையானால் கிருமிநாசினி மருந்து மூலம் புண்ணைச் சுத்தம் செய்து தகுந்த மருந்துகளை வைத்துக் கட்டுப்போட வேண்டும்.உடல்நலம் தேறத் தேவையான கலோரி, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற உணவு வகைகளைக் கொடுக்கலாம். புண் மிகவும் ஆழமாகவோ, அழுகியோ இருந்தால் அதை மருத் மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.முதியோர் கவனிப்பில் பொதுக் கவனிப்பும், அடிப்படை வசதிகளுமே மிகவும் முக்கியமானவை. இவற்றைச் செவிலியர் மிக கவனமாகக் கடைப்பிடித்தால் பலதொல்லைகள் வராமலேயே தவிர்க்க முடியும் அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தக்க சிகிச்சை அளிக்க முடியும்.

Mar 25, 2025

மூத்த குடிமக்கள் அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி,  முடிந்தவரை பலருடன் பேசுவதும் சுறுசுறுப்பாகப் பழகுவதும்தான்.

வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்யப்படுவார்கள், ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாகப் பார்க்கிறார்கள் : ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் அதிகம் பேச வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் தற்போது நினைவாற்றல் இழப்பைத் தடுக்க வழி இல்லை.  அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.   மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.  பேசுவது மூளையை செயல்படுத்துகிறது, ஏனெனில் மொழியும் எண்ணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன, குறிப்பாக விரைவாக பேசும்போது, இது இயல்பாகவே சிந்தனையை விரைவுபடுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது.   பேசாத மூத்த குடிமக்களுக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிகமாகப் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மனநோயைத் தடுக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.  பெரும்பாலும் எதையும் பேசாமல் இதயத்தில் எல்லாவற்றையும் வைத்துக்கொள்வது, மூச்சுத் திணறல் மற்றும் அசௌகரியமாக உணர்கிறது, எனவே, பெரியவர்கள் அதிகம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது. பேச்சு முகத்தின் சுறுசுறுப்பான தசைகளுக்குப் பயிற்சி அளிக்கிறது, தொண்டைக்கு பயிற்சி அளிக்கிறது, நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது, கண்கள் மற்றும் காதுகளை சேதப்படுத்தும் தலைச்சுற்றல் மற்றும் காது கேளாமை போன்ற மறைந்திருக்கும் ஆபத்துகளைக் குறைக்கிறது.   ஓய்வு பெற்ற மூத்த குடிமகன், அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, உங்களால் முடிந்தவரை பலருடன் பேசுவதும் சுறுசுறுப்பாகப் பழகுவதும்தான்.   இதற்கு வேறு பரிகாரம் இல்லை.

Mar 17, 2025

முதுமையில் ஏன் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறார்கள்?

 வயதுஆக ஆக உடலைச் சரிசமமான முறையில் வைத்துக்கொள்ள உதவும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு உள்காது, சிறுமூளை, கண், சதைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த ஒருங்கிணைப்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் நிலைத்தடுமாறிக் கீழே விழ வாய்ப்பு உண்டு. இம்மாற்றம் முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதுமைக் காலத்தில் அடிக்கடிக் கீழே விழுந்து விடுகிறார்கள்.வயதான காலத்தில் கீழே விழுவதற்குப் பல காரணங்கள் உண்டு. நரம்பு சார்ந்த நோய்கள் (உ.ம்: அறிவுத்திறன் வீழ்ச்சி, உதறுவாதம், பக்கவாதம்)காது சார்ந்த நோய்கள்.கண் பார்வைக் குறைதல் (உ.ம்: கண் புரை) மூட்டுவலி மற்றும் சதைகள் சார்ந்த நோய்கள்ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுவது. அதாவது, ஒருவர் படுத்த நிலையில் இருக்கும்போது, ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். ஆனால், திடீரென்று எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது, ரத்த அழுத்தம் வேகமாகக் குறைந்துவிடுகிறது (Postural hypotension). இதனால் கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகின்றன.

Mar 11, 2025

58 வயதுக்கு மேல் வேலை இடம் , சமூகம், குடும்பம் உலகம் கூட உங்களை மறக்கத் தொடங்கும். மனம் வருந்த வேண்டாம்:

58 முதல் 65 வயது வரை உங்கள் வேலை இடம் உங்களை விட்டு விலகும். நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் எவ்வளவு வெற்றி பெற்றிருந்தாலும், (அ) அதிகாரம் கொண்டிருந்தாலும், ஒருநாள் சாதாரண மனிதராகவே பார்க்கப்படுவீர்கள். அதனால், உங்கள் பழைய பதவியோ, தொழிலின் பெருமையோ மாறாது என்று நினைத்து அவற்றில் பற்றிக் கொள்ளாதீர்கள்.65 முதல் 72 வயது வரை, இந்த வயதில் சமூகமும் உங்களை விட்டு விலகத் தொடங்கும். உங்கள் நண்பர்கள், பழைய தொடர்புகள் குறைந்து, வேலை இடத்திலும் உங்களை அவ்வளவாக எவரும் நினைவில் கொள்ள மாட்டார்கள். "நான் ஒருகாலத்தில்..." என்று சொல்லாதீர்கள், காரணம் இன்றைய தலைமுறை அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தாதீர்கள் ! 72 முதல் 77 வயது வரை இந்தக் கட்டத்தில் உங்கள் குடும்பமும் நெருங்கியதாய் இருக்க முடியாது. உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருந்தாலும், பெரும்பாலும் நீங்கள் உங்கள் துணையோ (அ)தனியாகவோ இருப்பீர்கள். பிள்ளைகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வருவது ஒரு அன்பின் வெளிப்பாடு, அதனால் அவர்கள் அடிக்கடி வரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். அவர்கள் வாழ்க்கை பொறுப்புகளில் மூழ்கியிருக்கிறார்கள்!77 வயதுக்கு மேல்: இந்தக் கட்டத்தில் உலகம் கூட உங்களை மறக்கத் தொடங்கும். ஆனால் இதை ஒரு துன்பமாக நினைக்காதீர்கள், இது இயற்கையின் நடைமுறையாகும். ஒவ்வொருவரும் இதே பாதையை கடந்து செல்லவேண்டும்.எனவே, உங்கள் உடல் இன்னும் வலுவாக இருக்கும்போது, வாழ்க்கையை முழுமையாக அனுபவியுங்கள்!விளையாடுங்கள், விரும்பியதை செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். அன்பு நண்பர்களே, சகோதரர்களே, சகோதரிகளே,மேலே குறிப்பிட்ட விஷயங்கள்  உண்மையாகவே நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன.இதை எழுதியவருக்கு மனமார்ந்த நன்றி & பாராட்டுகள்!58 வயதுக்குமேல்: நண்பர்கள்குழுவாகஉருவாகுங்கள். ஒருகுறிப்பிட்டஇடத்தில், ஒருகுறிப்பிட்டநேரத்தில்சந்தித்து,பழையநினைவுகளைபகிர்ந்துமகிழுங்கள். தொலைபேசியில் பேசிக் கொண்டு இருங்கள்.வாழ்க்கையை சந்தோஷமாக கழியுங்கள்.எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் !

1 2 3 4 5 6 7 8

AD's



More News