செப்டிக் டேங்க் கிளினர் லாரிகள், வேன்கள், நிறத்துமிடமாக மாறிய இராஜபாளையம் காமராஜ் நகர்
இராஜபாளையத்தில் காமராஜ் நகர், இரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது. இந்த ஏரியாவில் நிறைய உணவு விடுதிகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், அமைந்துள்ளன. ஹாஸ்பிடல் ரோடு என்ற ஏரியாவில் செப்டிக் டேங்க் கிளினர் லாரிகள் வேன்கள், இங்கு வரிசையாக நிறுத்துகின்றனர். வீடுகள் லாட்ஜ்கள், பள்ளிகள், உணவு விடுதிகள் இருக்கும் இடத்தில் “ பார்க் செய்வது தவறு ”என எடுத்துச்சொல்லியும் கேட்பதாக இல்லை.சுகாதாரம் இங்கு பெரிய கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.
“உங்க ரோடா ” “இது பப்ளிக் ரோடு யாருவேண்டுமானாலும் நிறுத்தலாம். ”என்று தைரியமாகக் கூறுகின்றனர். முனிசிபலில் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்க வில்லை, பள்ளியிலிருந்து வெளிவரும் குழந்தைகள் இதைத் தாண்டி, எதிர் வரும் வண்டியைத் தாண்டிச் செல்கின்றனர். நடைபாதையை ஆக்கிரமித்து நிற்கும் இந்த வண்டிகளை, யார் சொன்னால் வேறு இடத்தில் நிறுத்துவார்கள் என்று தெரியாமல் காமராஜர் நகர் வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply