25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


நீர்வரத்து அதிகரிப்பால் அய்யனார் கோயில் ஆற்றில் குளிக்க வனத்துறை தடை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீர்வரத்து அதிகரிப்பால் அய்யனார் கோயில் ஆற்றில் குளிக்க வனத்துறை தடை

தொடர் மழை  காரணமாக இராஜபாளையம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறை  சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை விதித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை எதிர்பார்த்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்த லேசான மழையால் ஈரப்பதம் பெற்றது. நேற்று முன்தினம் இரவு, நேற்று மதியம் முதல் பெய்த கன மழையால் ராஜபாளையம் மாவரிசி அம்மன், முள்ளிக் கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது  

இதன் காரணமாக நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு ஆற்று நீர் தடுப்பணை மூலம் நீர் திருப்பி விடப்பட்டு தேக்கப்படுகிறது. தடுப்பணையைத் தாண்டி ஆற்றில் நீர் வழிந்து செல்கிறது.

 மழை தொடர்ந்தால் புதுக்குளம், பிரண்டைகுளம், புளியங்குளம் போன்ற அடுத்தடுத்து உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு  நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என விவசாயிகள், எதிர்பார்த்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News