25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


இராஜபாளையம்   நகரின் நீரின் வேதித்தின்மை அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் நகரின் நீரின் வேதித்தின்மை அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

இராஜபாளையம் சேத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர் ஆதார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பு உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி நடந்து வருகின்றன. கிணறு ஆழ்துளை கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் தென்னை, வாழை காய்கறி பயிர்களும், நீர் குறைந்த பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றுக்கு ஆழ்துளை கிணற்று நீர் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

முன்பு கண்மாய் பாசன நீர் மூலம் பெறும் விவசாயம் நல்ல மகசூலை பெற்று வந்த நிலையில் நீரின் தன்மை உவர்ப்பாக மாறியதுடன் ஆழ்துளை கிணற்று நீரின் வேதித்தன்மை, அதிகரித்துள்ளதால் சாகுபடி குறைவும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கு காரணம் நகரின் சாக்கடை, கழிவு நீர் தேங்கும் பகுதியாக கண்மாயை மாற்றியதே ஆகும். பல்வேறு பகுதிகளும் இதே நிலை காணப்படுவதால் நீர் நிலைகளை ஒட்டிய விவசாயமும் பாதிப்பு ஏற்படுகிறது. மண்ணின் தன்மையை ஆய்வு செய்து பிரச்சனைகளை போக்க அரசு துறைகள் முன் வரவேண்டும் என்ற விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News