இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பற்றாக்குறை
இராஜபாளையம் அரசு மருத்துவமனை நகர் பகுதியில் மகளிர், குழந்தைகளுக்கு என தனியாகவும், தென்காசி ரோட்டில் பொது மருத்துவமனை எனவும் இரண்டு அரசு மருத்துவமனைகளில் 212 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. தினமும் வெளிநோயாளிகளாக 1000 பேர் வருகின்றனர். உள் நோயாளிகளாக 212 படுக்கைக்கு பதில் 250 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
அதிகமாக கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு வருவதால் நகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ள நேயாளிகளின் உதவியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் கேரள மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.
புதிய மருத்துவமனை கட்டடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாததால் மீதம் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். ரேடியாலஜி நிபுணர் இல்லாததால் சிறப்பு சிகிச்சைக்கு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பு வேண்டிய உள்ளது.அரச மருத்துவமனை ஒட்டிய கழிவுநீர் வாறுகாலை காலை அகலப்படுத்துவதுடன், எதிரே தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்ற மாற்றுவழி காண வேண்டும்.
பொது மருத்துவமனையில் செயல்படும் சித்த மருத்துவ பிரிவு சிறப்பு சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளன. ஆயில் மசாஜ் உபகரணங்கள், நீராவி சிகிச்சை பொருட்கள், இதற்கான படுக்கை வசதி, நோயாளிகளுக்கான பயிற்சி உபகரணங்கள் காட்சி பொருளாக போடப்பட்டுள்ளது.
0
Leave a Reply