25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


ஆதார் சேவைக்கு அலையும் இராஜபாளயம் நகர மக்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதார் சேவைக்கு அலையும் இராஜபாளயம் நகர மக்கள்.

ஆதார் சேவைக்காக நிரந்தர சேர்க்கை, மையங்கள் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா, அலுவலகங்களில் எல்காட் மூலம் சேவை வழங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் ஆதார் உடன் பான்கார்டு இணைப்பு உள்ளிட்டவற்றிற்கு கெடு விதிக்கப்பட்டது.இந்நிலையில் பான்கார்டு பெயர் ஒற்றுமைக்காக ,ஆதாரில் திருத்தம் உள்ளிட்ட பணிகள் அவசியமாகிறது. இது தவிர பள்ளி மாணவர்கள், மத்திய மாநில அரசுகளின் சலுகை திட்டங்களை பெறுவோர், அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ,இராஜபாளையத்தில் செயல்படும் நிரந்தர ஆதார் சேவை மையங்களில் தினமும் கூட்டம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கிராமப்பகுதியில் இருந்து திருத்தத்திற்காக வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் வருவோருக்கு முறையாக டோக்கன் வழங்கி சேவைகள் வழங்குவது இல்லை. இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு வருகிறது. சேவை மையம் திறப்பு அடைக்கப்படும் நேரம் குறித்த குறிப்பு ,பொதுமக்களின் பார்வையில் படும்படியும். விடுமுறை காலங்களை முறையாக அறிவிப்பு எழுதி வைக்க வேண்டும். மாணவர்களுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் அந்தந்த பகுதியில் சிறப்பு ஆதார் முகாம்கள் ஏற்படுத்தி கூட்டத்தை குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகள் போர்வையில் மண் கடத்தல்--

விவசாயிகள்,மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக என்ற பெயரில், மாவட்ட நிர்வாகம் கண்மாய் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளித்ததை, ரியல் எஸ்டேட் துறையினரும், செங்கல் சூளை அதிபர்கள் மும்முரமாக பயன்படுத்தி வருகின்றனர். சுற்று வட்டார கண்மாய்களில் மண் அள்ளுவதற்கான விதிமுறைகளை மீறி கண்மாய் கரைகளை உடைத்து பாதை ஏற்படுத்தி கரைகளை ஒட்டியும், மடைகளில் தண்ணீர் வெளியேற வழி இன்றியும் அதிக ஆழத்திற்கு மண் அள்ளுகின்றனர். இயந்திரம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது.விவசாயத்திற்கு ஆதாரமான கண்மாயின் உள்பகுதியில் சிறு சிறு தெப்பங்களாக மாற்றும், இவர்களின் செயல் எல்லை மீறி போவது குறித்து யார் நடவடிக்கை எடுப்பது? என்ற விரக்தியில் விவசாய சங்கங்களும் தவித்து வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News