இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணி முடியாமல், மக்கள் அவதி
இராஜபாளையம் நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பஸ்டாண்ட் கட்டடங்கள் இட நெருக்கடி, பழைய கட்டுமானங்களின் விரிசலை அடுத்து ரூ.2.90 கோடியில் 2023 ஜனவரியில் பணிகள் தொடங்கியது. மாற்று ஏற்படாக மகப்பேறு மருத்துவமனை முன்பு தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அறிவிக்கப்பட்டு ,பயணிகள் நின்று செல்ல தகர ஷெட் இருக்கை ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பித்த புதிதில் தொடர் குடிநீர் வசதி அமைத்து பின்னர் அனைவராலும்கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது.
நாகராஜன் கமிஷனர் மேலும் ரூ.50 லட்சம் நிதிக்காக எதிர்பார்த்துள்ளோம். இருப்பினும் நிலுவையில் உள்ள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து பேவர்பிளாக்தளம்,சுற்றுச்சுவர்உள்ளிட்டமீதபணிகள்விரைந்துமுடிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் .
தினமும் பள்ளி, கல்லூரி, மாணவிகள் முதியோர் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிவடையாமல் ரோட்டில் நின்று செல்வதும் இயற்கை உபாதைக்கான ஏற்பாடு எதுவும் செய்யாததால், ஒதுக்குப் புறமான இடங்களை தேடி, சங்கடத்திற்கு உள்ளாகி வருவதும் தொடர்கிறது. பணிகள் முடியும் வரை மொபைல் டாய்லெட் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply