விருதுநகர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பஞ்சவர்ணம் ரக மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி எடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை கிடைக்காததால் ,விரைந்து புவி சார் குறியீடு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .இம்மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் 1000 முதல் 1500 எக்டேர் பரப்பில் பஞ்சவர்ணம் ரக மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. சுவையான அல்போன்சா, சப்பட்டை (பங்கனபள்ளி) மாம்பழ வகைகளுக்கு அடுத்தப்படியாக மே சீசனில் அதிகம் விற்பது பஞ்சவர்ணம் ரகம் தான்.மாவட்டத்தில் இருந்து மட்டும் ஆண்டு தோறும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் பஞ்சவர்ணம் ரக மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் சுவையால் தனித்துவம் பெற்றதாலும், ராஜபாளையம் பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை யடிவாரத்தில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுவதாலும், தோட்டக் கலைத்துறை உதவியுடன் மதுரை வேளாண் வணிக காப்பீட்டு மன்றம் சார்பில் புவிசார் குறியீடு பெற 2023 முதல் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றத்தால் இந்தாண்டு காய்ப்பு குறைந் துள்ளதாகவும், பஞ்சவர்ணம் மா விவசாயத்தை அதிகப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ,விரைந்து புவி சார் குறியீடு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
.ராஜபாளையம் நகராட்சி யில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 42 வார்டு களை கொண்ட நகராட்சி யில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த நடவடிக்கை இல்லாததால் இவற்றின் எண்ணிக்கை பெருகி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.பராமரிப்பற்ற தெருநாய்களை கட்டுப்படுத்த கருத் தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசு வழி காட்டுதல் இருந்து வரும்நிலையில் முறையான அமைப்பு இன்றி அறுவை அறுவை சிகிச்சை பணிகள் நடை பெறவில்லை.இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் ராஜபாளையம் கருத் தடை அறுவை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த கால்நடை மருத்துவ குழுவினர் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தினர். ஜன. மாதம் ராஜபாளையத்தில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பயணிகள் 39 பேரை தெரு நாய் கடித்த சம்பவமும், ஏப்.3ல் சத்திரப்பட்டி பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் 6 மாணவர்கள் உட்பட 64 பேரைவெறி நாய் கடித்தது உள்ளிட்ட நிகழ்ச்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜபாளையத்தில் ரூ.பல லட்சம் செலவில் புதுப்பித்தும் செயல்படாமல் உள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை கூடம்.2012ம் ஆண்டு கால் நடைத்துறை கெடுப்பின்படி கணக்கெடுப்பின்படி ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 611 தெரு நாய்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளாததால் நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.இதனால் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப் பட்ட ராஜபாளையம் நாய்கள் அறுவை மையத்தை கருத்தடை சிகிச்சை செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ராஜபாளையம் சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்டிற்கு இந்த ரோடு வழியே தினமும் நூற்றுக் கணக்கான பஸ்கள் ஆயிரக்கணக்கில் டூவீலர்கள் கடந்து செல்கின்றன. ஏற்கனவே நகர் பகுதிக்கு இந்த மெயின் ரோட்டில் இருந்து தாமிரபரணி குடி நீர் குழாய் பதிக்கப்பட்டு இவற்றில் அடிக்கடி ஏற்படும் உடைப்புகளால் ரோடு சேதமாகி பின்பு சரி செய்வதும் மீண்டும் அழுத்தத்தால் உடைப்பு எடுப்பதும் என தொடர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 10 நாட்களாக புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன்கோயில் முக்கு இடையே உள்ள டாஸ்மாக் கடை எதிர்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகனங்கள் தடுமாறி வருகின்றன. இதை எச்சரிக்க பெரிய அளவிலான கற்களை சிலர் பள்ளத்தின் முன்பு வைத்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்திற்கு மேல் இதே நிலை உள்ளதால் பகல் நேரங் களில் ஒதுங்கும் வாகனங்களும் இரவு நேரங்களில் விளக்கொளியின்றி கற்கள் இருப்பது தெரியாமல் மோதி பலரும் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தொடரும் இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என சமூக மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் புது பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ளபெரியாதிகுளம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த விதிகள் உள்ளநிலையில் கழிவுகளை கொட்டி மீறலில் ஈடுபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி நீர்நிலை அதிகம் என்பதால் கண்மாய், ஆற்று நீர் தேக்கங்கள் அருகே நெல்லும் அதனை அடுத்து கரும்பு விவசாயம் அதிக சாகுபடி நடைபெறும். சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 8000 ஏக்கர் கரும்பு சாகுபடி நடந்தது. தற்போது 2000 ஏக்கர் அளவுக்கு மட்டுமே கரும்பு பயிரிட்டு அதிக அளவில் வெல்லம் வியாபாரிகளுக்கு மாற்றி விடுகின்றனர்.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகிரி சுற்றுவட்டார விவசாயிகள் சிவகிரி அருகே தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்து அனுப்பி வந்தனர். இதில் 2018-19ல் சப்ளை செய்த சுமார் 500 விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கவில்லை.இதனால்தொடர் பிரச்சினைகளால் சாகுபடி பணிகளுக்கு செலவழிக்க முடியாமல் தரிசாக விட்டுள்ளனர்.ஐந்து ஆண்டு தொடர் போராட்டங்களால் பாதி தொகையான ரூ.12 கோடி மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு தவணை தேதியை கடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.255 ல் இருந்து ரூ.349 என உயர்த்தியதால் ரூ. 3500 என கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க நட வடிக்கை எனக் கூறி 4 ஆண்டுகளைக் கடந்து தற்போது தான் ரூ.3500 வந்துள்ளனர். இது மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்காது என தெரிவித்துள்ளனர். கரும்பு விவசாயிகளின் நிலையை இப்பகுதி ஆளுங்கட்சியினர் கண்டு கொள்வதில்லை. ஏற்கனவே சாகுபடி பரப்பு 30 சதவீதமாக சுருங்கிவிட்டது கரும்பு விவசாயிகளின் நிலையை இப்பகுதி ஆளுங்கட்சியினர் கண்டு கொள்வதில்லை. அறிவிப்பு நிலுவைத் தொகை கேட்டு ,போராடி வரும் இப்பகுதி விவசாயிகளுக்கு, அரசாங்கம் சரியான முடிவு எடுக்குமா? என்று விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்
புல்பத்திமலை அருகே முகாமிட்டு அனுமன் கோயில் வரை தோப்புகளில் யானைகள் புகுந்து பெரிய தென்னை மரங்களை சாய்த்தும் 60 க்கும் அதிகமான இளம் தென்னங் கன்றுகளின் குருத்துகளை பிடுங்கியும் உள்ளன. அத்துடன் வாழை, மா மரங்களையும், மின்வேலி, தண்ணீர் குழாய்களையும் உடைத்துள்ளது.அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல் பத்தி மலை அமைந்துள்ளது. இதன் அருகே நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, பலா உள்ளிட்ட சாகுபடி நடைபெறுகிறது.ஓடை வழியாக நுழைந்து மின் வேலியையும் உடைத்து, ஆண்டு கணக்கில் பாதுகாத்து வளர்த்த மரங்களை, யானைகள் புகுந்து ஒரே இரவில் சேதப்படுத்தியதால் ,பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மா மர சீசன் தொடங்க உள்ள நிலையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்..
மாவட்டத்தில் செயல்படும் தற்காலிக அரசு நெல்கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 600 முதல் 800 மூடைகள் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் இவற்றிற்கு அருகிலேயே தகுந்த சேமிப்பு கிடங்கு வசதியில்லை. மழைக் காலங்களில் நெல் மூடைகள் நனைந்து சேதம் அடைவதால் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகள் தேக்கி வைக்கப்பட்டு லாரிகள் மூலம் தொலைவில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நெல் கொள்முதல் மூடைகள் கூலி பிரச்சினை, லாரி கிடைப்பதில் தாமதம், விடுமுறை என பல்வேறு காரணங்களால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே தேக்கி வைக்கப்படுகிறது.திறந்த வெளி மண் தரையாக உள்ளதால் மழை நேரங்களில் தார்ப்பாய் மூடி இருந்தும் தரையில் சிமெண்ட் தளம் இல்லாததால் தண்ணீர் தேங்கி அடியில் வைக்கப்படும் நெல் மூடைகள் சேதம் அடைகின்றன. தொடர் மழை காலங்களில் இது போன்ற சிக்கலை தீர்க்க தகுந்த சிமெண்ட், கான்கிரீட் தரைதளம் கொண்ட இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நகர் பகுதியில் உள்ள ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் செயல்படும் ஹோட்டல்கள், தள்ளு வண்டி கடைகள், டீ, இறைச்சி, பூக்கடைகள் என அனைத்து பகுதிகளிலும். ஆரம்பத்தில் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த போது உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாழை இலை உபயோகம், பொருட்கள் வாங்க வருபவர்கள் துணி பை கொண்டு வருவது என மாற்றத்தை காண முடிந்தது. கால் நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எமனாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினை கட்டுப் படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். விவசாய தோப்புகளில் தாழ்ந்து செல்லும் மின் வயர்களால் விவசாயிகள் கவலை. பலரது விவசாய தோப்புகளிலும் மின்வயர்கள் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. மின் வயர்களை உயர்த்தி அமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் பணிகளில் வேகம் இல்லை. குடியிருப்பு பகு திகளில் பிரச்னை எனில் உடனடியாக மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கும் சூழலில் வனப்பகுதி ஒட்டிய தோப்புகளில் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தாலும் மிகுந்த தாமதத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் யானைகள் தொந்தரவு இருக்கும் நேரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு போன்ற சூழலில் தாழ்ந்து செல்லும் மின்வயர்களால் யானைகள் மீது உரசி பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மின் வாரியத்தினர் மின் வயர்களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
பி.எம்.ஸ்ரீதிட்டத்தில் தரமான கல்வி தருவதாக, மத்திய அரசுகூறுகிறது. தமிழக அரசுதற்போதே தரமான கல்வி தான் தந்து கொண்டிருக்கிறது. பி.எம்.ஸ்ரீதிட்டம் வாயிலாக, மத்திய அரசுபுதிய கல்வி கொள்கையை புகுத்த நினைக்கிறது.புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் இடை நிற்றல் அதிகரிக்கும்.. மும்மொழி கொள்கை வாயிலாக, மீண்டும் ஒரு மொழிப் போருக்கு,மத்திய அரசுதமிழகத்தை தூண்டுகிறது என நமது கல்வி அமைச்சர் கூறுகிறார்.மத்திய அரசின் நல்லகல்வித் திட்டமான பி.எம்.ஸ்ரீயை தமிழக அரசு எதிர்ப்பது சரியல்ல.1960 துகளில் ஹிந்தித் திணிப்பை எதிர்த்த இந்தஅரசு மறுபடியும் ,அதே தவறைசெய்யாமல் இருப்பது நல்லது. வட நாட்டிற்குச் செல்லும் பொழுது மொழிப் பிரச்சனை வெகுவாகப் பாதிக்கிறது. அன்று படித்திருந்தால் இந்தப் பிரச்சனை இல்லையே!1960 வது தலைமுறைகள் ஹிந்தி படிக்க முடியாமல் செய்து விட்டார்களே என்று, இன்றும் வருத்தப்படுகின்றனர்.தமிழகத்துச் செல்வங்கள் இன்னும் நன்றாகப் படிக்கட்டுமே ? பி.எம்.ஸ்ரீதிட்டத்தை ஆதரிக்க வேண்டும் என மக்கள்.எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மா, தென்னை, வாழை, நெல் ஆகியவைசாகுபடி செய்யப்பட்டு உள்ளது.ராஜபாளையம் மலையடி வார பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக6 காட்டு யானைகள் கூட்டம் நச்சாடைப்பேரி கண்மாய் பகுதியில் உள்ள நெற்பயிர்களையும், - தென்னை, பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. உணவு மற்றும் நீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளில் தென்னை,மாமரங்களை சேதப்படுத்தும்.3 மாதங்களுக்கு மேலாக யானைகள் இதே பகுதியில் முகாமிட்டு உள்ளதால் இரவு நேரங்களில் காவலுக்கு செல்ல அச்சமாக உள்ளது. யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவிவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .