25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 19, 2025

சாத்தூர் வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கூட்டுக்குடிநீர்  திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (18.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி,  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களைச் சார்ந்த 1286 குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சார்ந்த 45 வழியோர குடியிருப்புகளுக்கான ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், சாத்தூர் வட்டம், உப்பத்தூரில் கீழ்நிலை  நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சாத்தூர்  நகராட்சி பிரதான சாலையோரத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் வட்டம், சூரங்குடி கிராமத்தில் பட்டா வேண்டி விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரரின் வீட்டிற்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து விண்ணப்பதாரருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப்பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 18, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நடையனேரி கிராமத்தில்  (16.07.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அதன்படி, முதல்நாளான நேற்று 15.07.2025 அன்று 6 இடங்களில் நடைபெற்ற முகாமில் 1080 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று சிவகாசி வட்டம், நடையனேரி கிராமத்தில்  நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், இம்முகாமில், முதியோர் உதவித்தொகை  வேண்டி மனு அளித்த இரண்டு விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும், பட்டா பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின்  மனுவை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  அறிவுறுத்தினார்.அதனை தொடர்ந்து, பட்டா நகல் வேண்டி விண்ணப்பித்த முதியவருக்கு உடனடியாக இணையவழி பட்டா நகலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமானது நாளை (17.07.2025) விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வடமலைகுறிச்சி (சிவஞானபுரம்) சமுதாயக்கூடத்திலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாசலபுரம் எஸ்.ஆர்.நாயுடு சமுதாயக்கூடத்திலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியாபுரத்திலும், விருதுநகர் நகராட்சியில், வார்டு -1 லட்சுமி மஹால் புல்லலக்கோட்டை பகுதியிலும், சாத்தூர் நகராட்சி வார்டு -1 ராஜகோபால் திருமண மண்டபம் நடராஜ் தியேட்டர் ரோடு பகுதியிலும், இராஜபாளையம் நகராட்சி- வார்டு 1 ஏ.கே.டி.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,18.07.2025 அன்று சிவகாசி  ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சி வெள்;ர் பகுதியிலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை கம்மவார் திருமண மண்டபம் நடராஜ் தியேட்டர் ரோடு, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு வெங்காநல்லூர் சமுதாயக்கூடத்திலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் பத்திரகாளி திருமண மஹாலிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு எண் -3ல் விஜய சுந்தர மஹால் திருத்தங்கல் அரசு மருத்துவமனை அருகில், செட்டியார்பட்டி பேரூராட்சியில் இராமதவசி திருமண மஹாலிலும்,22.07.2025 அன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பட்டி சமுதாயக்கூடத்திலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பொம்மக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலத்திலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அச்சன்குளம் சமுதாயக்கூடத்திலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், டி.வேலங்குடி ஊராட்சி அங்கன்வாடி மையம் அருகிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு -4 சூர்யா மஹாலிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சி வார்டு -5 திருமலை நாயக்கர  பகுதியிலும்,23.07.2025 அன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சத்திரரெட்டியாபட்டி சமுதாயக்கூடத்திலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெற்றிலையூரணி பகுதியிலும், அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு-5ல் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மல்லாங்கிணறு பேரூராட்சியில் சாந்தி மண்டபம் கல்குறிச்சி மெயின்ரோட்டிலும், காரியாபட்டி பேரூராட்சியில்  பேரூராட்சி திருமண மண்டபத்திலும்,24.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வெள்;ர் தொடக்கப்பள்ளியிலும், திருவில்லிபுத்தூர்  ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணன் கோவில் மண்படத்திலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு வெங்காநல்லூர் வேட்டை பெருமாள் கோவில் திருமண மண்டபத்திலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், மூவரை வென்றான் மக்கள் மன்றத்திலும், விருதுநகர் நகராட்சி வார்டு எண் -5ல் லட்சுமி மஹால் புல்லலக்கோட்டை பகுதியிலும், சாத்தூர் நகராட்சி வார்டு எண் 5-ல் உள்ள எஸ்.கே.பேரடைஸ் திருமண மண்டபத்திலும்,25.07.2025 அன்று  அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செட்டிக்குறிச்சி சமுதாயக்கூடத்திலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கே.செட்டிக்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் சமுதாயக்கூடத்திலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆண்டியேந்தல் ஊராட்சி VPRC Building  அருகிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு எண் 6-ல் சூர்யா மஹாலிலும், இராஜபாளையம் நகராட்சி வார்டு எண்-5ல் என்.ஆர்.கே.திருமண மஹாலிலும்,29.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிச்சேரி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மத்தியசேனையில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி கிராம பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில், இராஜபாளையம் நகராட்சியில், அருள்புத்தூர் கிராம சமுதாயக்கூடத்தில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், அயன்நத்தம்பட்டி கிராமள முத்தாலம்மன் திருமண மண்டபத்தில், அருப்புக்கோட்டை (நகராட்சி) வார்டு -6ல், தேவாங்கரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காரியாபட்டி (பேரூராட்சி) முகாம் 2-ல், அம்லா திருமண மஹாலில்,30.07.2025- அன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ரோசல்பட்டி முகாம் 1-ல் , சமுதாயக்கூடத்தில், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நல்லி கிராமம், அஸ்வின் திருமண மஹாலில்,  வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி கிராமம் வார்டு 16-ல், வி.பி.சி. கட்டடத்தில்,  சிவகாசி மாநகராட்சி வார்டு 7-ல் ஆர்.ஆர்.மஹாலில், திருவில்லிபுத்தூர் நராட்சி வார்டு -6ல் முத்துச்சாமி நாடார் திருமண மஹாலில், செட்டியார்பட்டி பேரூராட்சி முகாம் 2-ல் நெல் அரசி வியாபாரி திருமண மஹாலில்,31.07.2025- சிவகாசி மாநகராட்சி, சுக்கிரவார்பட்டி கிராம தொடக்கப்பள்ளியில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி, பூவாணி கிராமம் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபத்தில், இராஜபாளையம் நகராட்சி, புத்தூர் கிராம சமுhயக்கூடத்தில்,  வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி  கிராமம் அழகாபுரி மக்கள் மன்றத்தில், விருதுநகர் (நகராட்சி) வார்டு 6-ல் பெரிய பள்ளி வாசல் திருமண மஹாலில், சாத்தூர் (நகராட்சி) வார்டு 6-ல் ராஜகோபால் திருமண மஹாலிலும், நடைபெறுகிறது.மேலும், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Jul 18, 2025

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசைதிருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று  (17.07.2025) ஆய்வு மேற்கொண்டார்.அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். இவ்விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தரிசனம் செய்ய வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்படவுள்ளது என்றும்,  ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.மேலும், சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வாஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளது என்றும்;, சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும், வெளியூர் பேருந்துகள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்;.சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.இந்த ஆய்வின் போது, காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (திருவில்லிபுத்தூர்) திரு.தேவராஜ்.,இ.வ.ப., சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 18, 2025

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (17.07.2025) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த  6 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.27.05/-இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் வழங்கினார்.கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடையும் பதிவு பெற்ற,பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.5,00,000/- வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த  திரு.பாண்டி த/பெ.முத்துக்குமார், திரு.சின்னமாரிமுத்து த/பெ.சகாதேவன், திரு.சம்பத்குமார் த/பெ.வேலுச்சாமி, திரு.பவுன்ராஜ், த/பெ.கருப்பையா மற்றும் திரு.கருப்பசாமி தஃபெ.சங்கிலி ஆகிய 5 கட்டுமானத் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம்  வீதம்  ரூ.25,00,000/- மதிப்பிலான உதவித்தொகைகள் பெறுவதற்கான உத்தரவினையும்,திரு.சோணமுத்து த/பெ.மாசிலாமணி என்ற பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளியின் சாலை விபத்து மரணத்திற்கு ரூ.2,05,000/- உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினையும், என ஆக மொத்தம் 6 கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.27,05,000/- மதிப்பிலான உதவித்தொகைகள்  பெறுவதற்கான உத்தரவினை மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 18, 2025

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்14 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர் பெருமக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துணை சுகாதார நிலைய புதிய மையங்கள், வட்டார சுகாதார அலகு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் என மொத்தம் ரூ.5.95 கோடி மதிப்பிலான 14 புதிய மருத்துவ கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில்,  விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் (17.07.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 18, 2025

முதுகலைத் தமிழ்த்துறை மற்றும் தமிழாய்வு மையம், இணைந்து நடத்தும் கரிசல் நிலம் சார்ந்த இரண்டு நாட்கள் நடைபெறும் நாடகப் பயிலரங்கம்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி) முதுகலைத் தமிழ்த்துறை மற்றும் தமிழாய்வு மையம், இணைந்து நடத்தும் கரிசல் நிலம் சார்ந்த இரண்டு நாட்கள் நடைபெறும் நாடகப் பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா ,I A S ,அவர்கள் (17.07.2025) துவக்கி வைத்து உரையாற்றினார்.

Jul 18, 2025

பொருளியில் மற்றும் புள்ளியியல் துறை சார்பில், ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலை கணக்கெடுப்பு

ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலைக் கணக்கெடுப்பு மத்திய அரசின் 100 சதவீத நிதி உதவியுடன் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் மத்திய அரசின் ஆளுமைக்குட்டபட்ட கூட்டாட்சி பிரதேசங்களிலும் (All States and UTs)  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இக்கணக்கெடுப்பு தற்போது கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர்களாலும் நகர்ப்புறங்களில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் களப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.           இத்திட்டத்தின் சீரிய நோக்கம் சிறுபாசனப்பிரிவு சார்ந்த தெளிவான நம்பகத்தன்மையுடைய புள்ளி விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, அவை நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த அடித்தளமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும். இத்திட்டத்தின் முக்கிய செயல்பாடானது அனைத்து நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர்த் திட்டங்களை உள்ளடக்கிய (பெரும்பாலும் 2000 ஹெக்டேர் வரை -தனியார் உட்பட) சிறுபாசனத் திட்டங்களின் கணக்கெடுப்பு ஆகும்.முதல் சிறுபாசனக் கணக்கெடுப்பு 1986-87ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு அதன் தகவல் தொகுப்பு 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதுவரை ஆறு சிறுபாசனக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆறாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு 2017-18ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டு, சிறுபாசனக் கணக்கெடுப்பு நோக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, நீர்நிலைக் கணக்கெடுப்பு சேர்த்து நடத்தப்பட்டு மே - 2023 ஆம் ஆண்டு தகவல் தொகுத்து வெளியிடப்பட்டது.           தற்போது 2023-24 ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு 7-வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலை கணக்கெடுப்பு, முதல் பெரிய மற்றும் நடுத்தர நீர்பாசனத் திட்டங்கள்  கணக்கெடுப்பு மற்றும் முதல் நீருற்று கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.மேலும் இவ்விவரங்கள் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் நிலத்தடி நீர் வளங்களை மதிப்பிட பயன்படுத்தப்படுவதுடன் நீர்வள அமைச்சகத்தில் உள்ள பலபிரிவுகளில் இக்கணக்கெடுப்பு விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தமிழ்நாடு மாநிலம் முழுவதும், விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் இப்பணி காகிதங்களை பயன்படுத்தாமல் கைப்பேசி மூலமாக தேசிய தகவல் மையம்  செயலி மூலம் டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 17, 2025

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெத்துரெட்டியாபட்டி கிராமத்தில் வசிக்கும் திருமதி முனீஸ்வரி என்பவர் வீடு கட்டுவதற்காக மனு அளித்ததன் பேரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (16.07.2025) பயனாளியின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - 2025 -ஆம் ஆண்டில்  11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும்,  2025-2026 - ஆம் ஆண்டில்  2237 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2025-26 ஆம் ஆண்டில் இது வரை மொத்தம் 189 பயனாளிகளுக்கு வீடுகட்டுதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மானியத்தில்  கட்டப்பட்டுவரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியை சேர்ந்த, திருமதி முனீஸ்வரி க/பெ. விநாயகராஜ் என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வீடு கட்டுவதற்காக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மனு அளித்ததன் பேரில், அதனை பரிசீலனை செய்து அந்த பயனாளிக்கு இல்லம் தேடி சென்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயன்பெற்ற திருமதி முனீஸ்வரி என்ற  பயனாளி, கூலி வேலை செய்து வரும் நாங்கள், சொந்த வீடு கட்டுவற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தனது சிரமத்தை அறிந்து சரியான நேரத்தில், என் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கியமைக்காகவும், வீடு கட்டுவதற்கான எங்கள் கனவை நனவாக்கிய   முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தனது உணர்ச்சி பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Jul 17, 2025

வெடி விபத்தில்உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.குமாரலிங்கபுரம் ஊராட்சியில்  (16.07.2025) மாவட்டத்தில் வெவ்வேறு வெடி விபத்துக்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும், நீரில் மூழ்கி மரணமடைந்தவருக்கும் என மொத்தம் 18 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.48.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, , அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும்  நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, விருதுநகர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமம், மெ/ஸ்.பொம்மி பயர் ஒர்க்ஸ் பேக்டரி என்ற பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 29.01.2022 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த  ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த  திரு.ஆறுமுகம் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி நீதிமொழி என்பவருக்கும், நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த திரு.குபேரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி சசிதேவி மற்றும் (தாயார்) திருமதி சரஸ்வதி என்பவருக்கும், விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த திரு.தேவேந்திரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி சர்மிளாதேவி என்பவருக்கும் என உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.9 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும், வெடிவிபத்தில் காயமடைந்த  நாட்டார்மங்கலம் கிராமத்தை  சேர்ந்த திரு.கணேஷ்பாண்டி என்பவருக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும்,விருதுநகர் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கி வந்த மெ/ஸ்.சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 07.06.2025 அன்று வெடிவிபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தையை சேர்ந்த திரு.சங்கிலி என்பவரின் (மனைவி) திருமதி முத்து என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4,00,000-த்திற்கான நிவாரணத்தொகைக்கான காசோலையினையும்,சாத்தூர் வட்டம், சின்னகாமன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த மெ/ஸ்.கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் 01.07.2025 அன்று வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.மகாலிங்கம் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி மகாலெட்சுமி என்பவருக்கும், அருப்புக்கோட்டை வட்டம், சூலக்கரையை சேர்ந்த திரு.வைரமணி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) முனிஸ்வரி என்பவருக்கும், சிவகாசி வட்டம், மத்தியசேனை கிராமத்தை சேர்ந்த திருமதி லட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.கருப்பசாமி என்பவருக்கும், சிவகாசி வட்டம், அனுப்பங்குளம் கிராமத்தை  சேர்ந்த திரு.செல்லப்பாண்டி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி வேல்மணி என்பவருக்கும், ஓ.கோவில்பட்டியை சேர்ந்த திரு.ராமமூர்த்தி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி கலா என்பவருக்கும், சிவகாசி வட்டம், சேர்வைகாரன்பட்டி கிராமத்தை  சேர்ந்த திரு.ராமஜெயம் என்பவரின் வாரிசுதாரரான (தாயார்) திருமதி மகாலட்சுமி என்;பவருக்கும், சேர்வைகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.நாகபாண்டி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி அழகு சித்ரா என்பவருக்கும்,  விருதுநகர் வட்டத்தை சேர்ந்த திரு.புண்ணியமூர்;த்தி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி காளீஸ்வரி என்பவருக்கும் என 8 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.32 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும்,வெடி விபத்தில் காயமடைந்த சிவகாசி வட்டம், மத்திய சேனை கிராமத்தை சேர்ந்த திரு.கருப்பசாமி என்பவருக்கும், விருதுநகர் வட்டம், கன்னிசேரி கிராமத்தை சேர்ந்த திரு.மணிகண்டன் என்பவருக்கும், சூலக்கரை கிராமத்தை சேர்ந்த திருமதி முருகலட்சுமி என்பவருக்கும் என 3 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 /-வீதம் மொத்தம் ரூ.1.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும் என மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.47.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.மேலும், திருவில்லிபுத்தூர் வட்டம், அச்சம்தவிழ்ந்தான் கிராமத்தில் வசிக்கும் திரு.சிவஞானபாண்டியன் என்பவரின் மகன் செல்வன்.விஜயகுமார் (வயது -15) என்பவர் கடந்த 31.03.2024 அன்று நீரில் மூழ்கி இறந்ததற்கு அவரின் வாரிசுதாரரான தந்தைக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும்,என ஆக மொத்தம் 18 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.48.50 இலட்சத்திற்கான நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

Jul 17, 2025

விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர்  மற்றும் சாத்தூர்  ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (16.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் அருங்காட்சியகங்கள் துறை சார்பில், புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவியல் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.46.63 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், கனிமவள நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தினையும்,பின்னர், பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.75 இலட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு வருதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

1 2 ... 104 105 106 107 108 109 110 ... 151 152

AD's



More News