நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் மி.புளியங்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், மி.புளியங்குளம் கிராமத்தில் (15.05.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மி.புளியங்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அதனடிப்படையில், இன்று மி.புளியங்குளம் கிராமத்தில், ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள இடங்கள் குறித்தும், புளியங்குளம் கண்மாயில், இருந்து நிரம்பி வரும் மறுகால் நீர், ரயில்பாதையை கடந்து செல்ல ஏதுவாக மாற்று ஒடைப்பாதை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திரு.பொன்னுத்தம்பி(திருச்சுழி), திருமதி காளீஸ்வரி சமயவேலு (நரிக்குடி), திருச்சுழி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி பத்மினி, திரு.புகழேந்தி, மண்டல துணை வட்டாட்சியர் திரு.திருக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் திருமதி மல்லிகா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply