25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 25, 2025

மகப்பேறு மற்றும் குடும்ப நலபுற  நோயாளிகள் பிரிவு  மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை மையம்புணரமைக்கப்பட்டுமாவட்ட ஆட்சித்தலைவர அவர்கள் பயன்பாட்டிற்கு  திறந்து வைத்து பார்வையிட்டார். 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சம் மதிப்பில் மகப்பேறு மற்றும் குடும்ப நலபுற  நோயாளிகள் பிரிவு  மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை மையம் ஆகியவை புணரமைக்கப்பட்டு  (24.06.2025) இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ் தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், I A S, அவர்கள் பயன்பாட்டிற்கு  திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் இணை இயக்குநர்(மருத்துவ பணிகள்) மரு.மாரியப்பன், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர்.

Jun 25, 2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) விருதுகள் பெற தகுதியான நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஒன்றிய அரசு சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்க  அறிவித்துள்ளது.            கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள்,  தொழில்  மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான  பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க  அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்விருதுகள்  தொழில்,  இனம்,  உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.        மேலும்,  விவரங்கள் அறிய https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in  என்ற இணையதளத்தில்  விளையாட்டு துறைக்குட்பட்ட விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்துவிட்டு அதன் 3 நகல்களை 27.06.2025- ஆம் தேதிக்குள்  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்  நலன் அலுவலர், விருதுநகர் மாவட்டம் அவர்களுக்கு தகுதியுள்ளவர்கள் நேரில் வந்து சமர்பிக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 25, 2025

பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PM KISAN) பெறும் விவசாயிகள், தங்கள் நிலஉடைமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில், வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள், கிராமங்கள் தோறும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைதுறை மற்றும் சகோதரத்துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு, வலைதளத்தில் கட்டணமின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது.இனி வருங்காலங்களில், மேற்காணும் துறைகளால்; செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களும், பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை((PMKISAN) மற்றும் பயிர் காப்பீடு PMFBY) திட்டங்களும் இப்பதிவுகளின்  அடிப்படையிலேயே செயல்படுத்தப்படவுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1,03,016 விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை 61,278 பேர் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர். மீதம் 41,738 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு பதிவு மேற்கொண்டு தனிப்பட்ட அடையாள எண் பெறலாம்.விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, நிலவுடைமை பதிவுக்கான கால அவகாசம் ஜீலை-15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது, பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PMKISAN) பெற்றுக் கொண்டு வரும் விவசாயிகள், தங்கள் நிலஉடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை முதல் பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PMKISAN) கிடைக்கப்பெறாது.  எனவே, பிரதமரின் கௌரவ ஊக்கத்தொகை(PMKISAN)  பெற்று வரும், நிலஉடைமைகளை பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக பதிவு செய்யவேண்டும்  தங்களது கிராமங்களில் விவசாயிகளை தொடர்பு கொள்ளும் வேளாண்மைத்துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இப்பணியினை விரைந்து முடித்து  பயன் பெற்றிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 25, 2025

தமிழகத்தை சேர்ந்த நலிந்த நிலையிலிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக 2025ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விளையாட்டு துறையில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தற்போது நலிந்து நிலையில் (வருமானம் குறைந்து, வேலை இல்லாத நிலை போன்றவை) இருப்பவராக வேண்டும். அரசு/ தனியார் நிறுவனங்கள் அல்லது ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவர்கள், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோருக்கான (Veteran/Master Sports Meet) விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம்/ இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவற்றில் சர்வதேச/தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். சர்வதேச/தேசிய போட்டிகளில் முதலிடம் /இரண்டாமிடம்/ மூன்றாமிடம் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.              2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (30.04.2025) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்(இதற்கான 2025ம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பித்தி வேண்டும்).தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் https://sdat.tn.gov.in. விண்ணப்பப் படிவம் கிடைக்கும் மற்றும் தொடர்புடைய மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பத்துடன் விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் (ஆதார்), பிறப்பிடச் சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), வருமானச் சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் (தொழில்/விளையாட்டு சார்ந்த) உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் 24.06.2025 முதல் 31.07.2025-  மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 25, 2025

“டென்சிங் நார்கே விருது -2024“ பெற இணையதளம் மூலம் 30.06.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்

ஒன்றிய அரசின் சார்பாக, தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல்புரிந்தவர்களுக்கு “டென்சிங் நார்கே விருது” ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு துணிச்சலான நடவடிக்கைகள் நிலம், நீர் மற்றும் ஆகாயம் (காற்று) மண்டலத்தில் செய்தமைக்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளது.மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விபவரங்கள் இந்திய அரசு இணையதள முகவரியான http://awards.gov.in மூலம் 30.06.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விளையாட்டு துறைக்கு விண்ணப்பங்கள் 30.06.2025ம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 24, 2025

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில், 2100 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல அடையாள அட்டைகள் மற்றும் 84 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில்  (23.06.2025)  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் மற்றும்  சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் செயலர் திரு.வா.சம்பத், IA S., அவர்கள்,  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி மரு.ராணி ஸ்ரீகுமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சீர்மரபினர் நல வாரியத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்   அவர்கள் மற்றும்   பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  அமைச்சர்  திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் 2100 பயனாளிகளுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும், 84 பயனாளிகளுக்கு ரூ.21.42 இலட்சம் என மொத்தம் 2184 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அடித்தட்டு மக்களை மேலே துக்கி விடுவதற்காகவே தமிழ்நாடு அரசு மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. எனவே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக  இன்று பயனாளிகளுக்கு  சீர்மரபினர் நல அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து துறைகளுக்கும் ஒரு வேலை இருக்கிறது. அதிலும் இந்த துறை மிகவும் முக்கியமான துறையாக இருக்கிறது. ஒரு துறை வெளியில்  தெரிய வேண்டுமென்றால், அந்த துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுக்கின்ற முயற்சியால் தான் தெரியும்.அந்த வகையில் எண்ணற்ற திட்ட பயன்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர்நலத்துறையின்சார்பில்பொதுமக்கள்மற்றும்மாணவமாணவியர்களுக்குவழங்கப்பட்டுவருகிறது.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில், பயனாளிகளுக்கு  சீர்மரபினர் நல அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுகிறது.அதனடிப்படையில் இன்று, சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 2100 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், 48 பயனாளிகளுக்கு ரூ.3,21,600/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.28,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 1 பயனாளிக்கு ரூ.1,500/- மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், 23 பயனாளிகளுக்கு ரூ.3,31,200/- மதிப்பிலான முதியோர் ஓய்வூதியத்தொகையும், 1 பயனாளிக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.35,000/- மதப்பில் ஈமச்சடங்கு உதவிதொகையும், மற்றும் 6 பயனாளிகளுக்கு ரூ.14,24763/- மதிப்பிலான டாப்செட்கோ தனிநபர் கடன் உதவித்தொகையும் என மொத்தம் 2184 பயனாளிகளுக்கு ரூ.21.42 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை பொதுமக்கள் அனைவருக்கும் தெரியக்கூடிய வகையிலும், இது தெரிவதன் மூலமாக அனைவரும் இதில் உறுப்பினராவதற்கும் ஒரு வாய்ப்பினை நமக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளிம்பு நிலையில் இருக்கின்ற அடித்தட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சீர்மரபினர் என்று அழைக்கப்படுகின்ற 68 சமூகங்களை சார்ந்த மக்கள் பயன்பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால் சீர்மரபினர் நல வாரியம் 2007 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த நல வாரியத்தை மறு கட்டமைப்பு ஏற்படுத்தி, ஒரு இலட்சம் சீர்மரபினர் உறுப்பினர் சேர்ப்பதற்கு அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், நான்கு மாத காலத்திற்குள் சுமார் 91,000 உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.அடித்தட்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, 60 வயது நிரம்பிய முதியோர்களுக்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலமாக தமிழ்நாட்டில் வீடுகள் கட்டிவிட்டு 50 ஆண்டுகளாக பட்டாக்களுக்காக சிரமப்பட்ட ஏழை, எளிய 16 இலட்சம் மக்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய  மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி, மாணாக்கர்களுக்கு கல்விக்கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மருத்துவ படிப்புகள் அல்லாது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய துறைகளை சார்ந்த உயர்கல்வியிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தி, அவர்களுக்கான கல்வி கட்டணங்கள் உட்பட அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பினையும் அறிவித்தன் அடிப்படையில், ரூ.911 கோடி மதிப்பீட்டில்   மொத்தம் 40,611 மாணாக்கர்கள் பயன்பெற்று வாழ்வில் உயர்ந்த நிலை அடைவதற்கு வழிவகை ஏற்படுத்தியுள்ளார்கள்.கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளிம்பு நிலை மக்களை உயர்த்துகின்ற ஒப்பற்ற திட்டங்களாக எல்லா இடங்களிலும் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட முதலமைச்சர் எங்களுக்கு காட்டக்கூடிய திசையில் சீர் மரபினர் நல வாரியத்திற்கான பயன்கள் அத்தனையையும் கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் மற்றும்  சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் செயலர் திரு.வா.சம்பத், IA S அவர்கள் தெரிவித்ததாவது:இந்த சீர்மரபினர் நலவாரிய ஆணையம் 2007-ல் தொடங்கப்பட்டு தற்போது  முதலமைச்சர் அவர்களால் மறுசீரமைக்கப்பட்டு,  அமைச்சர் பெருமக்கள், நல வாரிய துணைத்தலைவர், உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு இலட்சம் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயத்துள்ளார்கள். அதன் அடிப்படையில்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மதுரை, தஞ்சாவூர், சென்னை ஆகிய மூன்று மண்டலங்களில் ஆய்வுக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி அவர்களுடைய சீரிய முயற்சியால் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று,  முதலமைச்சர் அவர்கள் நிர்ணயத்த இலக்கான ஒரு இலட்சத்தில் இதுவரை சுமார் 91,000 க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்துள்ளார்கள்.அதுபோல இந்த உறுப்பினர்கள் சேர்க்கைக்கு முக்கிய காரணமாக நமது வருவாய்த்துறை மூலமாக சிறப்பாக அறிவுரை கூறி எங்களுடைய இலக்கு எய்திட உதவிய வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுக்கும், வாரியத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய  நிதி அமைச்சர் அமைச்சர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Jun 24, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.06.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Jun 24, 2025

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தானூர் ஊராட்சியில் (23.06.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Jun 24, 2025

மணிமேகலை விருதினை பெற்ற விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகராட்சி ஜெயம் மகளிர் சுய உதவி குழு மற்றும் இராஜபாளையம் நகராட்சி 16 வது வார்டு நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பு.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (23.06.2025)  துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 11.06.2025 அன்று மாநில அளவில் மணிமேகலை விருதினை பெற்ற விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகராட்சி ஜெயம் மகளிர் சுய உதவி குழு மற்றும் இராஜபாளையம் நகராட்சி 16 வது வார்டு நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் I A S, அவர்கள் பாராட்டி காசோலையினை வழங்கினார்.

Jun 24, 2025

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள குரூப் ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கான SSC (Staff Selection Commission) தேர்விற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள குரூப் ‘B’ மற்றும் ‘C’  பணிகளுக்கு SSC (Staff Selection Commission) தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். Inspector of Income Tax, Postal Assistan in Dept of Posts, Tax Assistant in CBDT  உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு SSC, CGL தேர்வு மூலம் தோராயமாக 14,582 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் SSC, CGL  தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2025 மற்றும் தேர்வு தேதி 13.08.2025 முதல் 30.08.2025 வரை நடைபெற உள்ளது. மேலும், MTS/Junior Engineer/Examiner/Accountant/Nursing Office உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு SSC Selection Post Exam-2025 (Phase-XIII)  தேர்வு மூலம் 2,423 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10th / 12th / ITI /  டிப்ளோமா / பட்டப்படிப்புடன் விண்ணப்பிக்கும் பணிக்குரிய தொழில்நுட்பக் கல்வித் தகுதி அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.06.2025, மற்றும் தேர்வு தேதி 24.07.2025 முதல் 04.08.202 வரை நடைபெற உள்ளது. தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 பெண்கள் SC /ST /PWD /Ex-SM பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு www.ssc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். எனவே. மேற்காணும் தேர்வை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 101 102 103 104 105 106 107 ... 140 141

AD's



More News