25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 08, 2025

பலத்த காற்றினால் சேதமடைந்துள்ள வாழை மரங்களை நேரில் சென்று வருவாய் மற்றும் பேரிடர்மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், (07.10.2025) மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்களின் முன்னிலையில்,  அருப்புக்கோட்டை வட்டம் சிதம்பராபுரம்மற்றும் செட்டிக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ள வாழை மரங்களை நேரில் சென்று  வருவாய் மற்றும் பேரிடர்மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருப்புக்கோட்டைவட்டம், சிதம்பராபுரம் , சின்ன செட்டிக்குறிச்சி மற்றும் பெரிய செட்டிக்குறிச்சி கிராமங்களில் 05.10.2025  மாலை சுமார் 04.00 மணியளவில் பலத்தகாற்றுடன் மழை பெய்ததில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைமரங்களில், சுமார் 27.5 ஏக்கர் பரப்பளவு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனை, தற்பொழுது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை  அதிகாரிகள்  முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழையால் 27.5 ஏக்கர் பரப்பளவு சேதமடைந்துள்ள வாழை மர நிவாரணத்திற்கு அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுமேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,  இப்பகுதிகளில் பயிர்க் காப்பீடு இல்லாத காரணத்தினால் பயிர்க் காப்பீட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் தோட்டக்கலைத்துறை மூலம் எடுக்கப்படவுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக பலத்த காற்றினால் பயிர்கள் சேதமடைந்துள்ளது.  இதற்கு தீர்வு காணும் விதமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி  உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட உள்ளது.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இப்பகுதிகளில் கடந்த ஆண்டு சேதமடைந்த பகுதிகளை கண்காணித்து இம்முறை எவ்வித இடர்பாடுகள் ஏற்படாமலிருக்கவும், நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மேல் நடவடிக்கைகள்எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

Oct 08, 2025

விருதுநகர் மாவட்டம் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM –YASASVI கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I.A.S. , அவர்கள் தகவல்

 இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC,  & DNT students  கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal)  விண்ணப்பிக்கலாம். அதன்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.  2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க  பட்டியலிடப்பட்ட ( Top Class Schools)  பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை  வழங்கப்பட உள்ளது.                இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு  ரூ. 2.50 இலட்சம்                இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 15.10..2025                கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ள நாள்:31.10..2025புதுப்பித்தல்:                இத்திட்டத்தின் கீழ் கடந்த  நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) (National   Scholarship Portal) Renewal Application  என்ற இணைப்பில் (Link)   சென்று OTR  Number (One Time Registration) பதிவு செய்து 2025--26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல்                     ( Renewal)  மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதியது:                 இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR  Number & Password  பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.                மேற்படி OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application)  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.                மேலும் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய  முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம்.கல்வி நிறுவனங்கள் மாணவ,மாணவியர்கள்விண்ணப்பித்துள்ளவிண்ணப்பங்களைதேசியகல்விஉதவித்தொகை இணையதளத்தில்  பரிசீலித்து அடுத்த நிலையில் மாவட்டபிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்குஅனுப்புதல்வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் Login Credential  சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.  இத்திட்டம் தொடர்பான கூடுதல்  விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை  NSP (https://scholarships.gov.in) இணையதளத்தில்  அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 08, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர்மாவட்டம், சாத்தூர்வட்டம், பந்துவார்பட்டிஊராட்சியில்இன்று(07.10.2025) நடைபெற்ற“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I.A.S.., அவர்கள் தலைமையில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உங்களுடன்ஸ்டாலின் முகாமானது15.07.2025 முதல்நடைபெற்றுவருகிறது.இத்திட்டத்தின்கீழ்விருதுநகர்மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளானசிவகாசிமாநகராட்சி,5 நகராட்சிகள்மற்றும் 9 பேரூராட்சிபகுதிகளில் 120 முகாம்கள்எனமொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.  இம்முகாம்களை அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அதன்படி, சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்புமுகாமினை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்முகாம்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும். இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இம்முகாமில்பெறப்பட்ட மனுக்களில்பரிசீலனைசெய்யப்பட்டு, உடனடிதீர்வாகமின்னணுகுடும்பஅட்டை, இருப்பிடச்சான்று, இணைய வழிப்பட்டாக்கள், மின் இணைப்பில் பெயர் மாற்ற ஆணை உள்ளிட்டவைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  வழங்கினார். இம்முகாமில் எதிர்வரும் 11.10.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 07, 2025

சிவகாசி  மாநகராட்சியில் ரூ.15 கோடி  மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி  மாநகராட்சி விஸ்வநத்தத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்,  (06.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.15 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதில்  ஒரு  முக்கியமான அறிவிப்பாக சிவகாசி  மாநகராட்சியில் ரூபாய் 15 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய  மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அனைத்தும் அரசாணைகளாக உருவம் பெற்று அவற்றை செயல்படுத்துவதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.          வணிக நிறுவனங்கள் நிறைந்த ஊராக சிவகாசி திகழ்கிறது. மேலும், இங்கு வணிகம் என்பது உலகளாவிய வர்த்தகமாக உருப்பெற்று உள்ளது. இங்கு அமையவுள்ள மாநாட்டு மையம் மிக முக்கியமான தேவையாக உள்ளது.முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து,  நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னையில் நந்தம்பாக்கத்தில் அமையப்பெற்ற வர்த்தக மையமானது இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தக்கூடிய அளவிற்கு  புதுப்பொலிவுடன் திகழ்கிறது.மகாபலிபுரத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரில் செயல்படக்கூடிய  சர்வதேச  கூட்டரங்கமானது, சென்னைக்கு வருகை புரியும் வணிக நிறுவனங்கள் மாநாட்டை நடத்தவதற்கு ஏதுவாக அமைய பெற்றுள்ளது.அவ்வரிசையில் இன்று ஒரு முக்கிய வணிக நிறுவனமான, கேந்திர ஸ்தானமாக திகழக்கூடிய  இந்த சிவகாசி மாநகர், விஸ்வநத்தத்தில்  இந்த மாநாட்டு அரங்கம் அமையவுள்ளது மிகச்சிறப்பானது.ஏறத்தாழ இந்த இடத்தின் ஒட்டுமொத்த பரப்பளவும் 3 ஏக்கர் அளவில் இருக்கிறதென்றால், தரைத்தளத்தில் சுமார் 3200 சதுர மீட்டர் மற்றும் மேல் தளத்தில் 3200 சதுர மீட்டர் என்கிற மிகப்பெரிய அளவிலும், ஒரே நேரத்தில் 2000 முதல் 2500 நபர்கள் அமர்ந்து கூட்டங்களை நடத்துவதற்கு ஏதுவாகவும், வாகனங்களை நிறுத்துவதற்கு வசதிகளையும்  உள்ளடக்கி இக்கூட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.          எனவே, இம்மாநாட்டு அரங்கு என்பது சிவகாசி மாநகரத்திற்கு கிடைத்துள்ள  மிக முக்கியமான வரப்பிரசாதம். அதனை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று உருவாக்கி தந்துள்ளார். அத்தகைய திட்டங்களை உருவாக்கித் தந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிவகாசி மாநகராட்சி சார்பில், விருதுநகர் மாவட்ட மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இப்பணிகளை குறித்த காலத்தில் விரைந்து முடித்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தான்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கு. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, முன்னாள் சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 07, 2025

மல்லாங்கிணறு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளுக்கான சாவிகளை, அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (06.10.2025) பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், இலங்கை தமிழர்களுக்கு அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு மற்றும் வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.27.41 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள 408 குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மல்லாங்கிணறு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளுக்கான சாவிகளை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும்  இலங்கைத் தமிழர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடவும், பாதுகாப்பான மேம்படுத்தப்பட்ட வாழ்வியல் சூழ்நிலைகளை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு சட்டப் பேரவைவிதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும்  சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்புகள் உள்ளிட்ட  பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் ஏழு இலங்கைத் தமிழர் முகாம்கள் உள்ளது.முதல் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை முகாமில் 70 வீடுகளும், வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் முகாமில் 232 வீடுகளும், சிவகாசி வட்டம் அனுப்பன்குளம் முகாமில் 32 வீடுகளும், ஆணைக்குட்டம் முகாமில் 117 வீடுகளும் மற்றும் செவலூர் முகாமில் 70 வீடுகளும் ஆக மொத்தம் 451 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.தற்போது இரண்டாம் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை முகாமில் 244 வீடுகளும், வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் முகாமில் 124 வீடுகளும், காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு முகாமில் 40 வீடுகளும் ஆக மொத்தம் 408 வீடுகள் 27.41 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதன்படி, மல்லாங்கிணறு இலங்கை மறுவாழ்வு தமிழர்கள் முகாமில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளுக்கான சாவிகளை,நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் இலங்கை தமிழர் முகாம்களில் அகதிகள் என்ற பெயரில் வாழக்கூடிய நம்முடைய சொந்தங்கள் இனி அவர்கள் இந்தப் பெயர்களால் அழைக்கப்பட மாட்டார்கள் அவர்கள் முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் என்று அழைக்கப்படுவார் என்று அறிவித்தார்கள்.அந்த அறிவிப்பு பெயர் அளவிற்கு இல்லாமல் இலங்கை தமிழர்கள் என்பவர்கள் நம்முடைய தமிழ் சொந்தங்கள் என்ற வகையில் அவர்களுக்கான நலவாழ்வை பெற்றுத் தருவதே இந்த அரசினுடைய  பெருமை.மல்லாங்கிணறு முகாமில் ஏறத்தாழ 40 வீடுகள் கட்டப்பட்டு அவை இன்று பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2 கோடியே 68 லட்சம் செலவில் 40 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.  இலங்கைத் தமிழர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் என்று கருதாமல் அவர்களும் தாய் தமிழ்நாட்டின் சொந்தங்கள் என்ற கருத்தின்படி, எல்லோருக்கும் செய்யக்கூடிய வசதிகளை இலங்கைத்தமிழர்களுக்கும் செய்து தர வேண்டும் என்ற உணர்வோடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த காரியத்தை செய்து கொடுத்துள்ளார்.இலங்கத்தமிழர் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடிய படிப்பு அதற்கான கட்டணங்கள் பொறியியல் படிப்பாக இருந்தாலும், வேளாண்மை படிப்பாக இருந்தாலும் அந்த படிப்புக்கான கட்டணங்களை அரசு செலுத்துகிறது.வேலைவாய்ப்பு திறன் பயிற்சி வாய்ப்புகள், விலையில்லா அரிசி வழங்கக்கூடிய திட்டங்கள், விலையில்லா எரிவாயு வழங்கக்கூடிய திட்டங்கள் என்று பல்வேறு நலத்திட்டங்களை உங்களுக்காக நமது  முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டிகொடுத்தமைக்காகவும், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் எங்களுக்கும் வழங்கி எங்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.மணிகண்டன், உதவி இயக்குநர்(தணிக்கை) திரு.முருகன், மல்லங்கிணறு பேரூராட்சி தலைவர் திரு.துளசிதாஸ், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜெயராம், காரியாபட்டி வட்டாட்சியர் திரு.மாரீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 07, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், இலங்கை தமிழர்களுக்காக குல்லூர்சந்தை, மல்லாங்கிணறு, மற்றும் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 408 குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (06.10.2025) பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், இலங்கை தமிழர்களுக்காக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் ரூ.27.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 408 குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டம், குல்லூர்சந்தையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.15.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 244 குடியிருப்புகளுக்கான சாவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடவும், பாதுகாப்பான மேம்படுத்தப்பட்ட வாழ்வியல் சூழ்நிலைகளை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு சட்டப் பேரவைவிதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும்  சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்புகள் உள்ளிட்ட  பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் ஏழு இலங்கைத் தமிழர் முகாம்கள் உள்ளது. முதல் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை முகாமில் 70 வீடுகளும், வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் முகாமில் 232 வீடுகளும், சிவகாசி வட்டம் அனுப்பன்குளம் முகாமில் 32 வீடுகளும், ஆணைக்குட்டம் முகாமில் 117 வீடுகளும் மற்றும் செவலூர் முகாமில் 70 வீடுகளும் ஆக மொத்தம் 451 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை முகாமில் 244 வீடுகளும், வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் முகாமில் 124 வீடுகளும், காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு முகாமில் 40 வீடுகளும் ஆக மொத்தம் 408 வீடுகள் ரூ.27.41 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டிகொடுத்தமைக்காகவும், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் எங்களுக்கும் வழங்கி எங்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வெண்ணிலா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, தனிவட்டாட்சியர் (அயலகத் தமிழர் நலன்) திருமதி கார்த்திகேயினி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 07, 2025

பிரதம மந்திரி விபத்து காப்பீடு திட்டத்தின் (PMSBY) கீழ் மரணமடைந்த திரு.லட்சுமணன் என்பவரின் வாரிசுதாரர் திரு.செல்வபாண்டிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டிற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.10.2025) தமிழ்நாடு கிராம வங்கி உப்பத்தூர் கிளையின் மூலமாக பிரதம மந்திரி விபத்து காப்பீடு திட்டத்தின் (PMSBY) கீழ் மரணமடைந்த திரு.லட்சுமணன் என்பவரின் வாரிசுதாரர் திரு.செல்வபாண்டிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டிற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார். உடன் மண்டல மேலாளர்(தமிழ்நாடு கிராம வங்கி) திரு.ஜெய்ஹர் ஆனந்த், துணை மண்டல மேலாளர் திரு.சம்பத்குமார், உப்பத்துர் கிளை மேலாளர் திரு.கிஷோர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன் ஆகியோர் உள்ளனர்.

Oct 04, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சி மற்றும் அருப்புக்கோட்டை வட்டம், செம்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் (03.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும்,  ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. அதன்படி, காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சி  மற்றும் அருப்புக்கோட்டை வட்டம், செம்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இம்முகாம்களில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும், விவசாயிகளுக்கு விதைப்பைகளையும், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் தார்பாய்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

Oct 04, 2025

தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 11.10.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெற உள்ளது.  இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் MRF, V.V.V & SONS EDIBLE OIL, ROYAL ENFIELD ACADEMY, APOLLO PHARMACIES, MEENAKSHI MISSION HOSPITAL, LAKSHMI MILLS WORK COIMBATORE, SENTERSOFT TECHNOLOGIES, ELEVATE DIGI TECHNOLOGIES போன்ற  100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள தங்களது சுய விவர சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் Google Form https://forms.gle/FBjDgJFUQc4ChtNc9 ஐ பதிவு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள்  முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்: 9360171161 அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail.com)  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 03, 2025

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் (02.10.2025)  அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் 157-வது பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அண்ணல் காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு  மரியாதை செலுத்தினார்கள்.அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.கதர் விற்பனை நிலையத்தில் கதர் இரகங்கள், பாலியஸ்டர் இரகங்கள், கண் கவர் பட்டு சேலைகள், பெட்ஷீட்கள், போர்வைகள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள் மற்றும் துண்டு இரகங்கள் தரமான முறையில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.மேலும் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர்களுக்கு சீருடை வகைகளும் இவை தவிர அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு 8 தவணைகளில் திருப்பி செலுத்தும் வகையில் தங்களது மாத ஊதிய அளவிற்கு கதர் இரகங்கள் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பாலியஸ்டர், பட்டுக்கு இரகங்களுக்கு 30 சதவிகிதம்  சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.பொது மக்களும், வாடிக்கையாளர்களும், அலுவலக பெருமக்களும், ஆசிரியர்களும், ஊராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் கதர் இரகங்கள் வாங்கி பயன்பெறலாம்.விருதுநகர் மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு ரூ.75.00 இலட்சம்  மதிப்பிலான கதர் துணிகள் விற்பனை செய்து மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தினை பிடித்தது. அதுபோல் 2025-ம் ஆண்டிற்கும் இம்மாவட்டத்திற்கு ரூ.1 கோடி கதர் விற்பனைக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு அனைவரும் கதர் மற்றும் பட்டு இரகங்களை காதி கிராப்ட்களில் வாங்கி பயன் பெறுவதுடன் தங்கள் நல் ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, விருதுநகர் இரயில் நிலையம் நுழைவு வாயிலில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில்,  விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன், மாவட்ட குடிசைத்தொழில் ஆய்வாளர் திரு.தேவராஜ்,  சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வட்டாட்சியர், கதர் வாரிய பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 69 70 71 72 73 74 75 ... 140 141

AD's



More News