25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழமொழி.

Jul 25, 2023

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க

பொருள்: தாசில் என்ற வார்த்தைக்கு பொருள் அதிகாரம். எந்த ஒரு விடயத்தின் மீதும் அதிகாரம் செலுத்த ஆசைப்படுவதற்கு முன்பாக அதற்கான உழைப்பை போடவேண்டும். அதிஷ்டத்தை நம்பி இருந்தால் எதுவும் ஆகாது என்பதே இதன் பொருள்.

Jul 18, 2023

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.

 நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.பொருள்:- பொதுவாக நண்டிற்கு தேவையான உணவு கிடைத்துவிட்டது என்றால் அவற்றை அது உண்டு நல்ல பலம் பெற்ற பிறகு இணைசேர்க்கைக்காக எதிர்பாலினத்தை தேடி வெளியில் வரும். அப்போது தான் பெரும்பாலும் அவை மற்ற பெரிய விலங்குகளிடம் சிக்கி மாண்டு போகும். இந்த பழமொழியை பெரும்பாலும் வீண் வம்பில் ஈடுபடுபவர்களை நோக்கி கூறும், ஒன்றாக தற்காலத்தில் வழக்கில் உள்ளது.

Jul 11, 2023

கடுகு சிறுத்தாலும் காரம்போகுமா?

கடுகு சிறுத்தாலும் காரம்போகுமா?பொருள்:கடுகு என்னதான் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம்-காரம்-என்பது போகாது. அதே போலவே யாரையும், எதையும் சிறியவை எனஎண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் , பல நேரங்களில் மிகுந்த பலன் கிடைக்கும்.

Jul 04, 2023

பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.

பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.நாம் உண்ணக்கூடிய உணவு பால் என்றாலும் அதை குறிப்பிட்ட நேரத்தில்எடுத்துக் கொள்வதால் தான் நன்மைகள் ஏற்படும் காலம் தவறி உணவுஉண்பதால் உடலில் பல உபாதைகள் ஏற்படும். என்பதைத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.

Jun 27, 2023

மருந்தும்விருந்தும் மூன்று வேளை.

மருந்தும்விருந்தும் மூன்று வேளை.தினசரி மூன்று வேளைக்கு மேல் மருந்தாய் இருந் தாலும் எடுக்கக்கூடாது. விருந்தாய் இருந்தாலும் உண்ணக்கூடாது என்பது இதன் பொருள்.விருந்துதானே என்று மூன்று வேளைகளுக்கு மேல் வெளுத்துக்கட்டினால் அதுவே வினையாகிவிடும். அஜீரணம் உருவாகும். அதுபோல்மருந்தை தின சரி மூன்று வேளை எனப் பிரித்து உண்டால்தான் நோய்எதிப்புச்சக்தி உடலில் பெருகி நோய் முழுமையாகக் கட்டுப்படும். ஒரேநேரத்தில் மொத்தமாக உண்டாலும் பலன் இல்லை. அதற்கு குறைவாய்பிரித்துப் பிரிந்து உண்டாலும் பலன் இல்லை. இதை விளக்கவே மருந்தும்,விருந்தும்மூன்று வேளை என்றார்கள்.

Jun 20, 2023

புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.

புண்பட்ட மனதை புகை விட்டுஆத்து.ஒருவரை நல்வழிப்படுத்துமே தவிர, தீய வழியை ஒருபோதும் காட்டாது.மனம் புண்பட்டால், புகை பிடிக்க வேண்டும் என்பது போல அனைவரும் அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள். உண்மையான அர்த்தம் அதுவல்ல."புண்பட்ட மனதைபுகவிட்டுஆற்று"என்பதுதான்உண்மையானபழமொழி.மனம்புண்பட்டிருக்கும் நேரம், துன்பத்தை எண்ணியெண்ணிவருந்திக் கொண்டிருக்காமல், மனதைத் திசை திருப்பித் துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் உண்மையான விளக்கம்.

Jun 13, 2023

முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்.

முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்.பொருள்:முருங்கையின் மகத்துவம் சொல்லும் பழமொழி இது. மேகம் என்பது பால்வினை நோய்களில் ஒன்று ட்ரப்போனமா பலிடம் என்ற பாக்டரியாதொற்றால் இந்த நோய் உருவாகிறது. இதைக்கட்டுப்படுத்தும் ஆற்றல்முருங்கைக்கு உண்டு. முருங்கையில் உள்ள இரும்புச்சத்து உடலுக்குவலுவேற்றும், ரத்தத்தை பெருக் கும். இதனால், உடலில்  தாது வளம்பெருகி பால்வினை நோய்கள் நீங்கும். இதைக் குறிக்கவே முருங்கைஉண்ண நொறுங்குமாம் மேகம் என்றார்கள்.-

Jun 06, 2023

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

சித்த வைத்தியம் தொடர்பான பழமொழி இது. சித்த வைத்தியத்தில் வேர்தான் மூலாதாரம். பல வேர்களைப் பற்றி அறிந்து கொண்டால்தான் வைத்தியம் கற்றுக்கொள்ள முடியும். ஆயிரம் வேரைக் * கொன்றவன் அரை வைத்தியன்" என்று இருந்த பழமொழிதான் காலப்போக்கில் மருவி வைத்தியரைக் கொலைகாரர் ஆக்கிவிட்டது.

May 30, 2023

இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!

இந்தக் கூழுக்கா இருபத்தெட்டுநாமம்!இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா?பசியால் வாடிய சிவனடியார்ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின்வழியே சென்றபோதுஅங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்றுசென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்றுநினைத்து. ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் இந்தப்பழமொழியாகி, இப்போது ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பதைக் கேலி செய்யப் பயன்படுகிறது.

May 23, 2023

பாம்பைக் கண்டால், படையே நடுங்கும்.

இதில், பாம்பு என்பது மாஹபாரத போர்கலத்தில் அர்ஜீனன், கர்ணன் ஆகியோர் பயன்படுத்திய நாக அஸ்த்திரம் ஆகும். இந்தநாக அஸ்த்திரத்தைக் கண்டு படைவீரர்கள் பயப்படுவார்கள் இதுதான் இப்பழமொழியில் பாம்பு என்று வடிவம் பெற்றுள்ளது.

1 2 ... 10 11 12 13 14 15 16 17 18 19

AD's



More News