சிவகாசி வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக மக்கள் தொடர்பு திட்டம் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2வது புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், ‘சிவகாசி வட்டம் நாரணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள “லலிதா மஹாலில்” வைத்து 09.09.2026ஆம் தேதியன்று நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply