1 லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறதா Volkswagen?
Audi, Porsche, Skoda, Lamborghini உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளைக் கொண்ட முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான Volkswagen, சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டி, மின்சார வாகனங்களுக்கான மந்தமான தேவை மற்றும் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் உள்ளிட்ட காரணங்களால் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகளவில் சுமார்1 லட்சம் பணியிடங்களைக் குறைக்கும் திட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது வாகனத் துறையில் மின்சார வாகன மாற்றம், உற்பத்திச் செலவு மற்றும் உலகளாவிய போட்டி ஆகியவை ஏற்படுத்தி வரும் மிகப்பெரிய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
0
Leave a Reply