இந்தியன் வங்கி துபாயில் புதிய அலுவலகம் திறக்க திட்டம்!
சர்வதேச அளவில் தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், துபாயில் புதிய பிரதிநிதித்துவ அலுவலகத்தை திறக்க இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.
துபாயில் அதிக அளவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் மக்கள் தொகையில் சுமார் 33 சதவீதம் பேர் இந்தியர்கள் என இந்தியன் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய அலுவலகம் மூலம் துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கும், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கும் வங்கியின் சேவைகளை மேலும் எளிதாக வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply