உலக பாரா வில்வித்தை: இந்தியாவுக்கு 2 தங்கம்.
ஆமதாபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சீரிஸ் ‘ஸ்டேஜ்-3’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ரீகர்வ் பிரிவு அணிகளுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் - விஜய் ஜோடி, ஸ்லோவாக்கியாவின் டேவிட் - டெனிஸ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 0-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பின் சிறப்பாக செயல்பட்ட ஹர்விந்தர் சிங் - விஜய் ஜோடி தொடர்ந்து மூன்று செட்டுகளை கைப்பற்றியது.
முடிவில் இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.
0
Leave a Reply