ஆசிய கோப்பை ஹாக்கி: இளம் இந்திய பெண்கள் அணிக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி.
சீனாவில் நடைபெற்று வரும் 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய பெண்கள் அணி தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
21 வயதுக்குட்பட்டோருக்கான இந்த தொடரில் பெண்கள் பிரிவில் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட 5 அணிகள் ‘எலைட்’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.
இந்திய பெண்கள் அணி நேற்று தனது 3-வது லீக் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. போட்டியின் 5-வது நிமிடத்தில் கிருஷ்ண சர்மா கோல் அடித்து இந்திய அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 9-வது நிமிடத்தில் சுப்ரியாவும், 14-வது நிமிடத்தில் பூர்ணிமாவும் கோல் அடித்தனர்.
இதனால் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் மேலும் கோல்கள் அடித்தனர். முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை வசப்படுத்தியது.
0
Leave a Reply